ஏன் இப்படி?
ஒரு காலகட்டத்தில் அந்தப் படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. உடனே அது தான் பத்திரமான பந்தயம் என்று தங்கள் பிள்ளைகளை பகடைக்காய்களாக பெற்றோர் உருட்ட ஆரம்பித்துவிடார்கள்.
அவர்களை பொறுத்தவரை, மனித உடல் கிடைத்துவிட்டாலும், மனதளவில் பரிணாம வளர்ச்சி செம்மறி ஆட்டின் தன்மையோடு ந்ன்றுவிட்டது போலத்தான்!
ஆயிரம் பேர் செய்வதைத் தான் செய்வார்கள். சுயமாக எந்த முடிவும் எடுக்கவும் துணியமாட்டார்கள்.
ராத்திரி பகலாக இதையே சொல்லி சொல்லி த்தங்கள் பிள்ளைகளின் மனதையும் மந்தமாக்கி வைத்திருப்பார்கள்.
நான் பொறியியல் துறையை மட்டும் சொல்லவில்லை, எந்தத் துறையாக இருந்தாலும் அதை நீங்கள் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்திருந்தால், வரவேற்கலாம். பிழைப்புக்காக தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் வாழ்கையை அல்லவா வீணடித்து விடுவீர்கள்?
இது தனக்குத் தேவையா? உலகத்துக்குத் தேவையா? என்றெல்லாம் மனதளவில் யோசிக்காமல், எல்லோரும் குதிக்கும் மலை முகட்டிலிருந்து குதிப்பதற்க்காகவா இத்தனை படிகளில் ஏறிவந்தீர்கள்?
புதிதாக எதையும் முயற்ச்சித்துப் பார்க்கும் தைரியம் இல்லையென்றால், நமது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?
எந்த ஆபத்தும் இல்லாத ஒரு இடம் வேண்டும் என்றால் பேசாமல் கல்லறைக்கு செல்ல வேண்டியாதுதான்.
பாதுகாப்பான வாழ்க்கை என்று நம்மைச் சுற்றி சுவர்கள் எழுப்பிக்கொண்டால், நம்மால் உயிர்ப்போடு, ஆனந்த்தோடு வாழமுடியாது. அப்படி உயிரைப் பறிகொடுத்துவிட்டு உடல் மட்டும் எதற்காக அறுபது, எழுபது வருடங்கள் வரை அல்லாடிக் கொண்டு இருக்கவேண்டும்?
கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பலைச் செலுத்திக்கொண்டிருந்தால், எந்த ஊருக்கும் போய்ச் சேரமுடியாது. கப்பல் தரை தட்டித் தான் போகும்.
நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாமல் பக்கத்துக்கு பக்கம் திகைக்க வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் வந்தால் தானே ஒரு சஸ்பென்ஸ் கதையை மிகப்பிரமாதம் என்று பாரட்டுவீர்கள்.
ஆனால் வாழ்க்கையை மட்டும் திருப்பங்கள் இல்லாமல் சலிப்புடன் அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்களே ஏன்?
இளைஞனாக இருப்பதற்குறிய தகுதி வலுவான உடல் மட்டுமல்ல! உறுதியான மனமும் கூட!
எதிர்பாரதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். ஆனந்தம் மட்டுமே கிடைக்கும். ஆனந்தத்தை மட்டுமே அடைவீர்கள்.......
வாழ்க வளமுடன்!
THANKS BROTHER....
ReplyDeleteThanks brother...
ReplyDelete