வறண்டு போன நிலத்தை
பசுமையாக்க வந்த மழை நீர் போல
எம் வாழ்வில் நீ வந்ததால்
நானும் இன்ப கடலில் முழ்கி இருந்தேன்
என்னை த்தூங்க வைத்து
தாலாட்டி அழகு பார்த்த தோழியே
நீ வந்த போது என் இதயமும்
பூ போல மலர்ந்தது தேனீக்களும்
என்னை நோக்கி இசை பாடியது
என் வாழ்வும் மலர் சோலை ஆனது
என்னை சந்தோஷ ப்பறவைகளாக
பறக்க தூண்டியாக வந்த காதலியே
நீ தந்து விட்டு போன வலியால்
சிறகு இருந்தும் பறக்க முடியாமல் இருக்கும்
பறவை போல ஆனேன்.
அகிலன்,தமிழன்
No comments:
Post a Comment