நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் அரசியல் கட்சிக்கு பிரச்சாரம் பின் அவரது திரைப்பட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் கத்திச் சண்டை படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் மூலம் ஹீரோக மாறினார். அதில் இரண்டு விதமான கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இந்நிலையில் ஆர்.கே. உடன் நடிக்கும் நீயும் நானும் நடுவுல பேயும் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். இந்த படத்தில் வடிவேலு புதிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதன்மூலம் தற்போது வடிவேலு காமடி கலந்த வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment