கதாநாயகனாகிறார் நாகேஷ் பேரன்


சிவாஜி பேரன், முத்துராமன் பேரன், ஜெமினி கணேசனின் பேரன் நடிக்க வந்துவிட்டார்கள். நாகேஷின் பேரனும் நடிக்க வந்தால்தானே இந்த வட்டம் முழுமையடையும்?
இதோ அவரும் வந்துவிட்டார்.
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு எந்த வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகலாம் என்று மேப்பை பார்த்துக் கொண்டிருந்த கஜேஷ் ஆனந்தை தாத்தாவின் கலைத்தாகம் அப்படியே இழுத்து கோடம்பாக்கத்தில் போட்டிருக்கிறது. கஜேஷ் ஆனந்த் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவின் மகன்.
.எம்.நந்தகுமார் இயக்கும் பெய‌‌ரிடப்படாதப் படத்தில் இவர்தான் ஹீரோ. நடிப்பது என்று முடிவானதும் அனைவரும் செய்கிற சண்டைப் பயிற்சி, நடனப் பயிற்சி என்று பட்டி டிங்க‌‌ரிங் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்.
தாத்தா போலவே கலக்குங்க.
                                                                                

No comments:

Post a Comment