சம்மதம் கிடைக்குமா ????


என் காதலுக்கு உன்
சம்மதம் தந்தால் -பெண்ணே
உனக்கு  ஒரு காவியம் படைப்பேன்
அதிலே  உனக்கு ஒரு சிலை வடிப்பேன்
சிலை வடிக்கும் சிப்பியாக  நான் மாறி
உன் முகத்துக்கு அழகு சேர்க்க அந்த
வானின் நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுவேன்
ஓசைகளின்  ஸ்வரங்களை ஒன்று சேர்த்து
உன் புன்னகையை உருவாக்குவேன்
உன் கண்ணுக்கு ஒளி  ஊட்ட  இலக்கியம் படைத்த
சங்க ப்புலவர்களை  வரவழைப்பேன்
உன் மென்மைக்கு சிறப்பு   சேர்க்க  மலர்களை  சூடிவிடுவேன்
உன் அழகின் வதனம் குன்றி விடமால் இருக்க  பிரமனிடன் வரம் கேட்பேன்.

-அகிலன்,தமிழன்.

No comments:

Post a Comment