"குட்டி எலியில் தொந்தி பிள்ளையார்"


 Image result for தொந்தி பிள்ளையார்
பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா 
பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா
வள்ளி தெய்வானை திருமண விழா 
துள்ளி குதித்து போகினம் தம்பதியர்.

குட்டி எலியில் தொந்தி பிள்ளையார்
முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை?
கொட்டி மேளத்துடன் இரு மனவியரை  
தட்டி வாழ்த்துறாள் இந்த கண்ணகி ? 

மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை 
அஞ்சிநசுங்கும் எலி தெய்வ வாகனம்?
பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி
நெஞ்சு வலிக்குது இந்த சீதைக்கு ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment