இளையராஜா - SPB மோதல்: பாடல் உரிமை யாருக்கு?


இளையராஜா தனது(?) பாடல்களை, தனது அனுமதி இல்லாமல் -அதாவது பைசா தராமல்- இனிமேல் SPB எந்தவொரு நிகழ்ச்சியிலும் பாடக்கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கார்!

எனக்கு இந்த சினிமா உலக சட்ட  திட்டங்கள் எல்லாம் தெரியாது; ஏதோ இசை அமைத்தவருக்குத்தான் பாடல் சொந்தம் என்று எல்லோரும் பேசிக்கிறாங்க; அதுதான் ஒன்னும் புரியவில்லை! அவர் என்ன ஒரு தனி அல்பமா போடடார்?

சினிமாவில் வரும் பாடலுக்கு உரிமைக்காரர், பணம் செலவு செய்து உருவாக்கிய தயாரிப்பாளர் என்றல்லவோ நான் நினைத்திருந்தேன்! அவர் தனது படம் தயாரிப்பதற்காக எத்தனையோ கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து பலதரப்படட 'வேலை ஆட்களை' வைத்திருந்து வேலை வாங்குவார். அவர்களில் டைரக்டர் முதல் தேநீர் வழங்கும் பையன் வரை எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதனால்தானே ஒரு படம் உருவாகின்றது! பாடலும் உயிர் பெறுகின்றது!

தாயாரிப்பாளரும்கூட, தன் படத்தை ஒரு விலைக்குப் பொதுமக்களின் பார்வைக்காக, பாவனைக்காக, ரசிப்பதற்காக விற்றுவிடுகிறார் என்றால் அவை எல்லாமே ஒரு பொதுச் சொத்தாக அல்லவா இருக்க வேண்டும்? அப்படி விலைக்கு விற்கப்பட்ட  பொருள் ஒன்றுக்கு  எவராவது உரிமை கூறமுடியும் என்ற சட்டம்  இருக்குமேயானால், அது நிச்சயமாக ஓர் அணைவுடன் ஏற்படுத்தப்படட ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு பாடலுக்கு பாடல் வரிகள் எழுதுபவர் ஒருவர்; இசை அமைப்பவர் இன்னொருவர்; பாடுபவர் வேறொருவர்; பின்னிசை வழங்குவோர் நூற்றுக்கணக்கில்; அதன் பின் ஒளி, ஒளி, வெட்டு, ஒட்டு என்று செய்யும் (தேநீர்ப் பையன் உட்பட) மேலும் பலர்!  இப்படி எல்லோரும் தங்கள் தங்கள் சம்பளத்தை வாங்கிக்கொண்டு போய்விடும்போது, சம்பளத்திற்கு வேலையில் அமர்த்தப்படட ஒருவர் மட்டும்தான் பாடலுக்கு உரிமை கொண்டாடலாம் என்பது எப்படி என்று புரியவில்லை!

மைக்கல் ஜாக்சன் தனது பாடலுக்கு உரிமை எடுப்பது சரி. அவர்தான் அவர் பாடலுக்கு எல்லாமே செய்கிறார். ஆனால் யாரோ பணம் செலவு செய்ய இன்னொருவர் சொந்தமாக்குவது எப்படி வந்தது என்று புரியவே இல்லை!

அப்படி என்றால், நான் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது, 100 கி.மீ. தூர எக்ஸ்பிரஸ் ஹை வே வடிவமைக்க ஆயிரத்தில் ஒருவனாகப் பணி ஆற்றி இருக்கின்றேனே! என்றால், நான் போய் அந்த வீதியின் ஆறு லேனையும் பரியர் போட்டு மறித்து உட்காந்துகொண்டு எல்லா வாகனங்களில் இருந்தும் ரோல் கட்டணம்   வசூலிக்கலாம்தானே!

ஒரு பாடல் SPB போன்ற பாடகர்களால் பாடப்படும்போது அதனால் புகழ்ச்சியடைவது அப்பாடலைப் படைக்க உழைத்தவர்கள்தான்! 

இப்படியான தடை உத்தரவுகள் போடடால், என்னதான் நல்ல பாடலாய்  இருந்தாலும் மக்களிடம் எடுத்துச் செல்லப்படாது விடடால் அது குடத்தினுள் உள்ள விளக்குப்போலத்தான் ஆகும்.

ஏதோ பெரிசுகளின் புகழை வைத்து, முன்னுக்கு வர இயலாத சிறுசுகள் எல்லாம் ஏழேழு தலைமுறைக்கும் பணம் சேர்க்கத்தான் இந்த மோதல்கள் என்று பேசிக்கொள்கிறாங்க!

எத்தனை கோடிகள் அப்பா வேண்டும் நீங்கள் உயிர் வாழ! விட்டுத் தொலையுங்களேன், எல்லோரும், எங்கெங்கும், எந்தப் பாடலையும் பாடிவிட்டுப் போகட்டுமே!
                                                                               

No comments:

Post a Comment