தமிழரின் மூட நம்பிக்கைகள்;{Part-04"B} superstitious beliefs of tamils

தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]


பகுதி/Part-04"B":வீடும் சமையல் அறையும்[Home & kitchen] 


பல நூறு ஆண்டுகளாக பழங்கதைகளும் மூட நம்பிக்கைகளும் சமையல் அறை பற்றி மலர்ச்சியுற்று இன்னும் மக்கள் இடையில் இன்று வரை தங்கியிருகிறது.சமையல் அறை பண்டைய தமிழர்கள் மத்தியில் ஆலயம் மாதிரி கருதப்பட்டதுடன்,அங்கு அதி கூடிய சுகாதாரமும் பேணப்பட்டது.அவர்கள் காலணியுடன் [சப்பாத்து,மிதியடி] அங்கு நுழைய மாட்டார்கள்.அப்படி சென்றால் கடவுளின் சீற்றத்துக்கு உள்ளாவார்கள் என நம்பினர்.மாதவிடாய் கொண்ட பெண்கள்,அந்த காலங்களில் தம்மை துப்புரவுக்கேடான தோற்றம் என கருதி சமையல் அறை பக்கம் போக மாட்டார்கள்.இப்படியான நம்பிக்கைகள் மண் அடுப்பு ஒரு மூலையில் அமைந்த பாரம்பரிய சமையல் அறை இருந்த பொழுது உண்டாகின.தரையில்  வைக்கப்பட்ட இலையிலோ அல்லது தட்டிலோ குடும்பம் இருந்து சாப்பிடுவது அப்ப வழக்கமாக இருந்தது.ஆகவே இது சமையல் அறை மிக துப்பரவாக இருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.  


இன்னும் ஒரு பழக்கமும் அப்போது இருந்தது.அதாவது சாப்பிட ஆரம்பிக்கும் முன்,தமது முன்னோரை  நினைவு கூர்ந்து தண்ணீரை தமது தட்டையோ இலையையோ சுற்றி தெளிப்பது.உண்மையில் அப்படி தெளிப்பது தடுப்பு அரணாக தரையில் ஊரும் எறும்பு மற்றும் பூச்சிகள் சாப்பாட்டிற்குள் வருவதை தடுக்கிறது.  

ஒரு பூனை ஒருவரின் வீட்டிற்கு பக்கத்து பாதையின் குறுக்கே கடந்து போகுது என்றால் அவர் தனது சமையல் அறையை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.மாறாக வீடிற்கு திரும்பி மீண்டு சற்று நேரத்தின் பின் பயணம் தொடர்பது அல்ல.

மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் தோன்றிய காலத்தில் நகராண்மைக் கழகமோ அல்லது அது போன்ற நிர்வாகமோ கட்டிட அமைப்பை மேற்பார்வை பார்க்க  இருக்கவில்லை.மற்றும் புறம்போக்கி அமைப்புகளோ[exhaust fans] இருக்கவில்லை.வாஸ்து என்ன கூறுகிறது என்றால் சமையல் அறை ஒரு வீட்டின் காற்றுச் செல் திசைப் பக்கம்[leeward direction] இருக்க வேண்டும் என்கிறது.அப்பத்தான் புகை வீட்டிற்குள் பரவாமல்,காற்று அதை எடுத்து செல்லும் என்பதால் ஆகும்.மேலும் தெற்கு பக்கம் ஒரு குடித்தனத்திற்கு [establishment] வாசல் அமையின் அது தீயசகுனம் உடையது என்றும் அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் கூறுகிறது.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை[The White House in Washington DC] தெற்கு வாசலையே அதுவும் சுவரின் நடுப்பகுதியிலே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆகவே மாறிய இன்றைய கால கட்டத்தில் பொருத்தமானதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.அன்றைய கால கட்டத்தில் கதவுகளும் யன்னல்களும் ஒரு நேர் கோட்டில் குறுக்கு காற்றோட்டத்திற்கு[cross ventilation] உதவின.மேலும் நேர் வடிவமைப்பு,அந்த காலத்தில் நாணமுடன் உள் வசித்த பெண்கள் தூர இருந்து கதைப்பதற்கு உதவியது.நிழல் மரங்கள் மேற்கில் இருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.இதன் காரணம் சூரியனில் இருந்து ஒரு மறைவை தேடுவதே.  

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம்,மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன்,கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும்,இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.இது அந்த காலத்தில் தேவைபட்ட ஒன்றாகும்.   


திருமணமான பெண் செவ்வாய்,வெள்ளி ஆகிய கிழமைகளில் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கோ பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது என்றும் நம்புகின்றனர்.வீட்டு வாசலில் கோலமிட்டால் அவ்வீட்டில் வளம் சேரும் என்றும்,நீர்க்கோலம்[மகளிர் நீர்விளையாட்டிற்கொள்ளும் கோல வகை/தண்ணீரால் இடப் படும் அசுபக்குறியான கோலம்/அசுபம் =  அமங்கலம்/inauspiciousness] அழிவைத் தரும் என்றும் நம்புகின்றனர்.வீட்டு வாயிற்படியில் எக்காரணம் கொண்டும் உட்காரக் கூடாது.அவ்வாறு உட்கார்ந்தால் லட்சுமி அவ்வீட்டை விட்டு வெளியே போய் விடுவாள் என்றும் கூறுகின்றனர்.வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி திடீரென விழுந்து உடைந்தால் அவ்வீட்டில் ஏதாவது துக்க நிகழ்ச்சி ஏற்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.கடுகை வீட்டிற்குள் தூவக்கூடாது . அவ்வாறு தூவினால் அக் கடுகு வெடிப்பதைப் போன்று அவ்வீட்டில் பலத்த சண்டை நிகழும் என்று மக்கள் நம்பு கின்றனர்.மேலும் விருந்தினர்கள் சென்றதும் வீட்டைப் பெருக்கக் கூடாது என்றும் நம்புகின்றனர்.அத்துடன் வீட்டு வாசலுக்கு எதிரே சுவர் இருந்தால் பாதிப்பு என்றும் நம்புகிறார்கள்.

"வீட்டில் விளக்கு வைத்தபின் யாருக்கும் பணம் கொடுக்காதே!லெட்சுமி வெளியே சென்றுவிடுவாள்!".இன்றும் இது பல வீடுகளில் பின்பற்றப்படுகிறது,காரணம் தெரியாமல்? வார்தைகளை நன்கு கவனிக்கவும் "விளக்கு வைத்த பின்". சற்று யோசித்து பாருங்கள், மின்சாரம் இல்லாத நாட்கள்,வெறும் அகல் விளக்குகளே இருந்த காலம்.அந்த காலத்தில் விளக்கு வைத்தபின் யாருக்கும் பணம் கொடுக்காதே என்று சொல்ல காரணம் என்ன? வெளிச்சம் குறைவாக இருக்கிற நேரத்தில் பணத்தை கொடுத்தாலோ அல்லது வாங்கினாலோ தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அதை தவிர்ப் பதற்காகவே இதை சொல்லி இருக்க வேண்டும்.இந்த உண்மையை வெளிப்படையாக சொல்லி இருந்தால் நாம் என்ன செய்து இருப்போம்? எனக்கு இருட்டிலும் கண் பார்வை நன்றாக தெரியும் என்று வீரம் பேசி பணத்தை கொடுத்து,பிறகு சிக்கலில் சிக்கி இருப்போம்!

பகுதி/Part 05:"கண்ணேறு [திருஷ்டி],வேலன் வெறியாட்டம் & தாயத்து" அடுத்தவாரம் தொடரும்

3 comments:

  1. அந்த காலத்தில் நாணமுடன் உள் வசித்த பெண்கள்....................
    இது ஒரு இடைக்காலத்தில் வந்த வழக்கம் என எண்ணுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, October 14, 2013

      நீங்கள் கூறியது மாதிரி தமிழ் சமுதாயம் தாய் வழி சமுதாயத்தில் இருந்து தந்தை வழி சமுதாயத்திற்கு மாறிக்கொண்டு இருந்த காலம்/மாறிய காலம் சங்க காலம் என நினைக்கிறேன்.உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வம் கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள்.காலப்போக்கில் இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம் என நினைக்கிறேன்.குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய அந்த ஆரம்ப காலத்தில், விலங்குகளைப்போல பெண்களே தம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்கி வளர்த்தார்கள்.உதாரணமாக கொசுவை[mosquitoes] எடுத்தால், ஆண் அனோஃபிலீஸ்[Anopheles] கடிக்காது, ஆனால் பெண் துரத்தி துரத்தி நம்மை கடிக்கும். மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள்.அதனால் தான் கொற்றவை வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் ஆதி தமிழர் மத்தியில் வாழ்ந்தாள் என நினைக்கிறேன்.ஆகவே அவள் நாணி குகைக்குள்லோ/குடிசைக்குள்லோ இருந்திருக்க வாய்ப்பில்லை,என்னினும் அந்த நிலை பல காரணங்களால் மாறிவிட்டது. கிழே தரப்பட்ட சங்க கால பாடல் அந்த ஒரு சங்க பெண்ணின் நிலையை தெளிவாக அழகாக படம் பிடித்து காட்டுகிறது.வாசித்து சுவைக்கவும்.

      "ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
      ..............................................................
      வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
      கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
      நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
      மெல்லியல் குறுமகள் உள்ளிச்
      செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே"
      [புறநானூறு, 196]

      தம்மால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும்,
      ............................................................
      வெளியே மழை கொட்டும்போது அம்மழை வீட்டிலுள்ளும் கொட்டுமாம்;வெயிலையோ,பனியையோ அது தடுக்காதாம் ;
      காற்றை மட்டிலும் இலேசாக அடைக்குமாம்; கல்லில் ஆன அவ்வீட்டில் கல்லைப்போல் இறுக்கமாய் இருப்பது வறுமை மட்டும்தானாம் !!!அப்படியான என் வீட்டிற்கு செல்கிறேன்.அங்கே, என் இல்லக்கிழத்தி இறுகியவள் அல்லள்.மெல்லிய சாயல் உள்ளவள். நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய என் மனைவியை நாடிச் செல்கிறேன்.உன் வாழ்நாள்கள் பெருகட்டும்!" என்கிறது.

      Delete
  2. பயனுள்ள விடயங்கள்

    ReplyDelete