கருணையின் இருப்பிடமாய் அமைந்து
வாழ்க்கைதனில் விழுந்து விடாமல் இருக்க
பிள்ளைக்கு இறைவனை போல
தினம் தினம் துணை நின்று
அவர்களின் கவலைகளை நீக்கி
பாசம் தன்னை பொழிந்து
பிள்ளையின் மகிழ்வில்
உயிர் வாழும் தெய்வம் -அம்மா
அவளின் மனதில்
பொங்கி பாயும் பாசம் தன்னை
வடித்திடவே அணு தினம்
தமிழ் முத்துக்களில்
சொல் தேடி அலைகிறேன்
உனக்கு நிகராக ஒரு முத்தும்
இன்னும் பார்க்கவில்லையே-அம்மா
-அகிலன்,தமிழன்
No comments:
Post a Comment