சிரிக்க சில வினாடிகள் .....!!


மனைவி: எனது 30 ஆவது பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
 கணவன்: ஒரு சீன நாட்டுச் சுற்றுலா, எப்படி இருக்கும்? விருப்பமா?
மனைவி: ஆஹா, ஓஹோ! அவ்வளவுக்குப் போவீர்களா? அப்படி என்றால் 60 ஆவதுக்கு என்ன செய்வீர்களாம்?
கணவன்: திரும்ப அங்கு வந்து கூட்டிக்கொண்டு வந்து ஓர் 2 நாள் இங்கு வைத்திருப்பேன்!
--------------------

ஒரு தந்தை தன் மகன் பொய் சொல்லுகின்றானோ என்று சந்தேகப்பட்டு ஒரு லை டிரெக்டர் கருவி ஒன்றை வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அது யாராவது பொய் சொன்னால் உடனே அது  பொய்யின் அளவுக்கேற்ப 'பீப்' என்று சத்தம் இடும். அன்று மகன் கல்லூரி செல்லாது வேறு எங்கோ போய்விட்டு வருகின்றான் என்ற சந்தேகத்தில்,

தந்தை: ராமு இன்று கல்லூரிக்குச் சென்றாயா?
மகன்: ஆமாம் அப்பா!
கருவி: 'பீப்'
மகன்: இல்லை அப்பா, படம் பார்க்கத்தான் போனேன்!
கருவி: 'பீப்'
மகன்: சொறி அப்பா; நண்பர்களோடு பியர் குடிக்கப் போனேன்!
கருவி: ' '
தந்தை: அடே! நான் எல்லாம் அந்தக் காலத்திலை உப்படிப் பொய் சொல்லி குடிச்சுத் தெரிந்ததே இல்லைத் தெரியுமா?
கருவி: 'பீ . . ப்'
தாய்: ஹீ..ஹீ... உங்கடை மகன்தானே; அப்படியே உங்களைப் போலத்தானே இருப்பான்!
கருவி: 'பீ..................ப்'
--------------------

ஒருவர் அவசர அவசரமாக, மூச்சு வாங்க ஓடி வந்து ஒரு வீட்டுக்கு முன் போய், அங்கு நின்ற வீட்டுக்காரியிடம்:
ஒருவர்: அம்மா, அம்மா இங்கு எங்காவது போலீஸ் யாராவதைக் கண்டனீங்களா?
வீட்: இல்லையே!
அவர்: எங்காவது கிட்டிய தூரத்தில்?
வீட்: இல்லவே இல்லை!
அவர்: உதவிக்கு அவசரத்துக்கு வரக்கூடிய யாரவது அக்கம் பக்கத்து ஆம்பிளைகள்?
வீட்: அப்படி ஒருவருமே இல்லை; எல்லாரும் வேலைக்குப் போய்விடடார்களே! 
அவர்: உங்க வீட்டுக்குள்?
வீட்: அப்படி ஒருவருமே இல்லை அப்பா!
அவர்: அப்ப சரி; (கத்தியைக் காட்டி) மரியாதையாய் உள்ளுக்குப் போய் எல்லாப் பணம், நகைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வாங்க!
--------------------

ஒரு வழிப்போக்கரை ஒரு திருடன் கத்தியைக் காட்டி மறித்து,
திருடன்:  குத்திக் போடுவேன், உன்னிடம் இருக்கும் உன் பணம், நகை, பொருள் எல்லாவற்றையும் தாமதிக்காமல் என்னிடம் கொடு!
வழிப்: அடே அப்பா, நான் இந்தத் தொகுதியின்  M.L.A. அப்பா! என்னிடமேயே திருடுகிறாயா!
திருடன்: [ஒரு வகை] அப்படியா?  சீவிப் போடுவேன், உன்னிடம் இருக்கும் என் பணம், நகை, பொருள் எல்லாவற்றையும் தாமதிக்காமல் என்னிடம் திருப்பிக்  கொடு!
திருடன்: [இன்னொரு வகை] அட; நம்ம ஜாதி ! சரி, சரி! ஜாக்கிரதையாய்ப் போய்ச் சேர்! வழியில் பொது ஜனங்கள் ஜாஸ்தி! முகநூல்ல போட்டுப் பிரச்சனை பண்ணவென்றே காத்துக்கிட்டு இருக்காங்க!
--------------------

நோயாளி: எனக்கு வயிற்றாலை,வெறும் தண்ணி தண்ணியாய்ப் போய்க்கொண்டே இருக்குது டாகடர்; அதோடை நான் குளிக்கலாமா?
டாக்டர்: ஓம், ஓம் தாராளமாய்க் குளிக்கலாம்! ஆனால் பாத் டப் முழுக்க நல்லாய்  நிரப்புமா?
--------------------

பஸ் வண்டியில் தூரப் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு மூதாட்டி கச்சான் பைக்கட்டுகளை, தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டு  அடிக்கடி பஸ் டிரைவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து உண்ண வைத்துக்கொண்டு இருந்தார். அவரின் பெருந்தன்மையினைக் கண்டு,

டிரைவர்: ஏன் அம்மா, கச்சான் நல்லாய்த்தானே  இருக்குது; உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் திரும்பத் திரும்ப வாங்கிக் கொண்டே இருக்கிறீங்கள்? வாங்காமல் விடலாம் தானே?
மூதாட்டி: ஆனால், ஒவ்வொரு பருப்பையும் சுற்றி போட்டிருக்கும் சொக்கிலேட் எனக்கு ரொம்பவும் பிடிக்குமே!
--------------------

பெரும் தொந்தியுள்ள கணவன் தனது நிறையை அளப்பதற்காக வெய்யிங் ஸ்கேலில் ஏறி நின்று தன வயிற்றை உள்ளே எக்கிக்கொண்டு நிற்பதை பார்த்துச் சிரித்த மனைவி,

மனைவி: ஹீ.. ஹீ..பானை வயிற்றை உள்ளே இழுத்தாலும் சரி வெளியே தள்ளினாலும் சரி நிறை ஒன்றைத்தான் காட்டும். ஏன் ஓர் அல்ப ஆசையில் இந்தக் கோமாளித்தனம் செய்ய வேண்டும்?

கணவன்: சும்மா எரிச்சலை கிளப்பாதே! எவ்வளவு காட்டுது என்று வாசிக்க விடாமல் வண்டி மறைத்துக்கொண்டு இருக்கிறது; அதுதான் உள்ளே வண்டியைத் தள்ளியென்றாலும் நம்பரை வாசிக்க முடியுமா என்று பார்க்கிறேன்!
--------------------

ஒரு முடி வெட்டுபவர் சுலபமாக ஷேவ் எடுப்பதற்காக ஒரு சிறு பந்து ஒன்றை வந்தவரின் வாய்க்கினுள் திணித்தார்.
வந்தவர் :சில சமயம் பந்து தவறுதலாக தொண்டைக்குள் போய்விட்டால் நான் என்ன செய்வது?
முடி:கவலையே வேண்டாம்! நீங்கள் மெதுவாக நாளைக்கே திருப்பிக் கொண்டுவந்து தரலாம், மற்ற எல்லோரும் வழக்கமாய்ச் செய்வதுபோல! 
--------------------

ஒருவர் திருமணம் செய்வதற்காக ஐந்து குணங்கள் உள்ள பெண்களைத் தேடி அலைந்தார்.
1 . நல்ல சம்பளத்தோடு வேலை செய்ய வேண்டும்.
2 . வீட்டு வேலை, சமையல் எல்லாம் செய்ய வேண்டும்.
3 . எப்பொழுதும் சந்தோசமாய்ப சிரித்த முகத்துடன் வேண்டும்.
4 . பொய் சொல்லாது, நேர்மையான குணம் வேண்டும்.
5 . தாம்பத்திய வாழ்வில் உயர்ந்தவளாய் இருக்க வேண்டும்.
பெரும் பல முயற்சிகள் செய்து, தேடிக் கண்டுபிடித்து திருமண வாழ்க்கையிலும் நுழைந்து விடடார்.
ஆனால், அவருக்கு உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், இந்த ஐந்து பேரையும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் வைத்திருப்பதுதான்!
--------------------
நீதிபதி: 
உன் கணவனை ஏன் நீ கதிரையைத் தூக்கி ஓங்கி அடித்து அவரின் மண்டையை உடைத்தாய்?
மனைவி: என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்; நான் ஒரு பொம்பிளை, என்னால் எப்படி மேசை ஒன்றைத் தூக்கி அதனால் அடிக்க இயலும்? அதுதான் கதிரையால் அடித்தேன்.
                                             தொகுப்பு:செ .சந்திரகாசன்                                                  

No comments:

Post a Comment