பொத்தானை அழுத்தி,மறு கரையில் காதலிப்போம்
ஜன்னளை திறந்து,புதியவானம் காண்போம் கண்ணே
உலகம் சுருங்குதோ,எண்ணம் அப்படி தோன்றுதோ
தொழில் நுட்பம்,அப்படி மாற்றுதோ கண்ணே ?
நாளாந்த வாழ்வில்,பல பல மாற்றங்கள்
ஒன்றாய் அனுபவிப்போம்,ஆனால் எந்த இழப்பில் கண்ணே?
ஆண்டாண்டு மாசுபடுத்தி,சூழலை கெடுத்து விட்டோம்
நெருக்கடி வந்தபின்பே,மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே ?
மதிநுட்ப சிந்தனையாளனா,நாம் மரத்துப்போனவனா
இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே ?
கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா அல்லது
தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதோ கண்ணே ?
இன்று என்ன செய்கிறோமோ என்ன பேசுகிறமோ
நாளை விட்டுசெல்ல வேண்டியவற்றை பாதிக்கும் கண்ணே ?
அடுத்த தலைமுறைக்கு எங்கள் காதல் வாரிசுக்கு
விட்டுப் போவது பெரும் இன்பமா துக்கமா கண்ணே ?
Tomorrow's World
Dear love,Shall we Press button and love at distant shores?
Dear love,Shall we open windows and enjoy under different skys ?
Dear love,What your are thinking,Whether world is shrinking?
Or technology changed affect our ways of thinking?
Dear love,Much much changes,In our daily life
Dear love,We enjoyed much much,But at what what expenses?
Years years pollution,Destroyed yours ours environment
Dear love,At crisis point,We desperate for a solution?
Dear love,Are we intellectually astute,Are we emotionally numb
Dear love,Have you thought anytime,What we have become?
Are we blindly heading,towards point of disaster or
Dear love,Have we allowed technology,serve as the master?
Dear love,What do we today,Will affect will influence
What do we bequeath,For our children tomorrow ?
For our future generation,For our loving children
Dear love,What will we leave,Great happiness or sorrow?
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/Kandiah Thillaivinayagalingam]
No comments:
Post a Comment