ஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017

  தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மீண்டும் ஒரு பங்குனித் திங்களில் புதிய ஆரோக்கியமான அம்சங்களுடன் உங்களை மகிழ்விக்க,பயனளிக்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்வடைகிறோம்.
 ...ஆனால் அவன் வாழும்வரை வசைபாடிய வாய்களெல்லாம்   அவன்இறந்துவிட்டால்   அவன் பெருமைகளை  எடுத்துப் பேச வரிசையில் காத்து நிற்கின்றன. அது ஏனென்று புரியவில்லை. வாழும்போது அவனை வாழ்த்த முடியாதவர்கள் அவன் இறக்கும் வரை காத்திருப்பது எதற்காக?
தாம் நன்மைகள் செய்யாவிடினும் செய்தவனை புகழ்ந்தாவது புகழ் பெறலாம் என்ற  சுடலை ஞானமா?
அல்லது போய்விட்டான்தானே என்ற அலட் சியமா ?
அவன் வாழும்போது அவனை புகழ்ந்திருந்தால் அவன் மனம் சந்தோஷமடைந்து சமுதாயத்திற்கு மேலும் நன்மைகள் புரிந்திருப்பானே! அவனால் பயன் பெறும் சமுதாயத்தினுள் நீயும் ஒரு அங்கம் அல்லவோ! ஒரு மனிதனை இனிய சொற்களால் இன்பமடைய செய்வதுவும் புண்ணியம் அன்றோ! 
எனவே  சமுதாயத்தினை வளர்ப்போரை வாழும்போது வாழ்த்துவோம். நாமும் வாழ்வோம்.வளர்வோம்! ..[தீபம்]


ஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:04


நூல்:மாறிய நாட்களும்,மாறாத சூரியனும்.
ஆசிரியர்:வை:திவ்யராஜன்.
..அடுத்த செவ்வாய் தொடரும்..

இயற்கையின் மோகம்


மண்ணில் விழுந்து
 மறைந்து போகும் 

மழை நீரை போல, 

உன் அன்பும் 
என் மீது விழ -அதை 
நானும் நுகரலாம் 
என நினைக்க, 

மழை நீர் போல 

உன் அன்பும் நிற்காமல்
 ஓடி ஒழிந்ததடி!


இயற்கைக்கும் 
மழைநீரை போல வேறு 
ஒரு உறவும்  இல்லை, 

அது போல அன்பே

உன் அன்புக்கு நிகரான 
வேறு உறவு இல்லையே!

 இயற்கை மீது மழை 
காதல் கொண்டால்  
இயற்கை வலிமையடைந்து 
அதன் வெறுமை நீங்கி 
செழிப்படையும்,  

 பெண்ணே   நீயும்
 என் மீது காதல் கொண்டால்

 என் வாழ்வின் தனிமை 
 எனும் வறுமை நீங்கி 
வாழ்வும்  வலிமை கொண்டு 

வாழ்வு சிறந்திடும்.


                                  அகிலன்,தமிழன்                                

ஆன்மா என்றால் என்ன? [சற்குரு ]

உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி மனதில் ,யாரோ சொல்வதை வைத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்வதால், என்ன சாதிக்கப் போகி ன் றீ ர்கள். ஆன்மா என்பது பற்றி மொத்த சமூகமே கூடி நின்று எதோ சொன்னாலும் அது உங்கள் அனுபவத்தில் வராதவரை [தெரியமுடியாத,அறியமுடியாத]  அதை பற்றிப் பேச என்ன முக்கியத்துவம் இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கக் கூடிய அனுபவங்களைப்பற்றி முற் கூட்டியே வேறு ஒருவர் சொல்வதை வைத்து மனதை தயார் செய்து வைப்பது, மனதை ஒரு சிறையில் அடைத்தது போலாகிவிடும் அல்லவா? ஆன்மா இருக்கிறதா இல்லையா என நான் விவாதிக்கவில்லை. ஆனால் உங்கள் நேரடி அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றிப் பேசுவது என்பது பொய்களை விதைப்பது போலாகும். அவற்றை  நீங்கள் நம்புவது பொய்யான ஒரு வாழ்க்கைக்கு உங்களை நீங்களே தள்ளுவது போலாகும் என்று கூறுகிறார் சற்குரு.
ஒருவர் இறந்துவிடடால் அதுவும் அவர் இந்துவாக இருந்துவிடடால் மட்டும் இந்து ஆன்மாவினை  முத்தியடைய செய்ய ஒரு தரகர் தேவைப்படுகிறார். அதுவும்  இந்த இந்து இறந்து ஒருமாதத்தில் செய்யப்படும் அந்தியேட்டிக் கிரிகையில் ஓதும் தரகர் அன்று தான் மோட்ஷத்திற்கு அனுப்புவதாகவே ஓதுகிறார்.அது முடிந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர் இறந்த திதியில் மோட்ஷத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் அவர் அத்துடன் விட்டபாடில்லை. ஒவ்வொரு வருடமும் அவ் இந்து இறந்த திதியில் மோட்ஷ பூசை செய்யவேணும் என்கிறார். அப்படியெனில் இந்து எப்போது தான் மோட்ஷத்தை எட்டி அடையப்போகின்றானோ புரியவில்லை.
ஒரு ஆன்மாவை எத்தனை தரம் தான் மோட்ஷத்துக்கு அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் சற்குருவின் விளக்கம் ஒரு முடிவாகவே புரிகிறது.
                                                                                                                          

Superstitious Beliefs Of Tamils /Part 04 B

"The kitchen & Home"
[Based on Tamil article "தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி 04 B:"வீடும் சமையல் அறையும்" published in theebam.com]


Through the centuries, myths and superstitions based in and around the kitchen have developed and stayed with people even to this day. Ever heard someone say that it's bad luck to put your shoes on the table?It's most likely a belief borne out of hygiene. Putting shoes on the table could easily spread disease from the streets to your food.It could have caused death, bearing in mind low hygiene and medicine during those days.Cholera, typhus and blood infections may have been passed on.So,this superstition was an only way of warning people at that time.

The kitchen is virtually the temple of a Tamil home and the highest levels of hygiene are expected to be maintained.Most Hindu[Saiva] Tamils do not enter a kitchen with their shoes on, as it is said to induce the wrath of the gods.Menstruating women are regarded unclean and are isolated. They cannot enter the kitchen till they are ‘clean’ again.This belief originated when kitchens were traditional, with mud stoves in a corner. Families sat on the floor and ate off plates or leaves placed on the ground. This required the kitchen to be absolutely clean. Another belief linked to this was that before eating their food, people sprinkled water around their plates supposedly in remembrance of their ancestors. Actually, the water around the plate acted as a barrier against the ants and insects that crept about the kitchen floor.A cat crossing one's path near one's home means that one should check one's kitchen,rather than return home & start journey again.

What is Vastu! When Vastushastra came into being there were no municipalities, town development authorities and building by-laws. Vastu says, logically enough, that the kitchen in a house should be in leeward direction for the simple reason that the wind would take away kitchen smoke instead of spreading it inside the house. There were no exhaust fans nor chimneys,as in today.

According to Vastushastra, an establishment with an entrance from the south is inauspicious and doom is guaranteed. But half the shops on commercial streets have south entrances. Are they doomed en masse? The White House in Washington DC has a door facing south. It further defies Vastu in that it has a door in the middle of a wall. But it has had Presidents of the United States and is the dwelling of the head of the biggest super power in the world.Hence We should decide what part of Vastu should be used in the changed circumstances of today.

Doors and windows in those days had to be in a straight line for cross ventilation and the straight pattern was to help the women of those days who used to stay shyly in the interiors and needed the facility to talk from far with in the house. One treatise says that the west should have shady trees. It was a common sense instruction to cut the sun in that particular region.
Vaastushastra["science of construction", "architecture") ] originated thousands of years ago in ancient India/Tamil country. In those days people were dependent on the elements of nature to fulfill all their basic needs. Sun provided light & heat, wind gave cool breeze, rivers & rain were the main source of water, earth provided food & shelter and fire heat & protection. Thus the principles of the building science laid down during those days too were based purely on the effect of elements of nature. In the age when it was formulated, the society was largely illiterate, the illiteracy
generating a fear of the unknown. Science was beyond the realm of their understanding while religion was omnipresent. It was therefore simpler for the ancient Vastu experts to spread the concepts of the Vastu Shastra through the intricate network of religion and superstition. Unfortunately, as time passed only the superstition filtered down the generations, while the actual theory eluded the world
Additional informations :
"AAMAI puguntha veedu urupudathu":i.e when Tortoise enters a house it is bad omen and the house will shatter to pieces.
The above is the belief And in the village many of them do pooja when it comes to their house.This is incorrect.But the real meaning is like this
கல்லாமை ---kallamai---Illiteracy,Ignorance
இல்லாமை---Illaamai---deficiency of necessary or desirable ingredients, qualities, etc.
இயலாமை---Iyalaamai---Inability to perform
பொறாமை---poraamai---jealousy
If in a house,the house members have the above principles , characters or Gunaas etc they will perish.That is what our ancestors told us. But see how the whole thing has twisted!
[Kandiah Thillaivinayagalingam]
Part 05 A:Suttipodal/‘drishti’ or evil eye will follow 

தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05"B" கண்ணேறு [திருஷ்டி],வேலன் வெறியாட்டம் &தாயத்து

தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.


இன்னும் ஒரு  திருவருட்பாவில் கண்ணூறு பற்றி இப்படியும்  கூறப்படுகின்றது..

 "திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே."
[திருவருட்பா]

திருவருட் பேற்றுக்குரிய திருநீற்றைச் சிவ சண்முகா என்று வாயால் சொல்லி அணிந்து கொண்டால் அணிபவர்க்கு நாள்தோறும் உண்டாகின்ற தீமையும் நோய்களும் நீங்கும்;பிறவித் துன்பங்கள் கெட்டொழியும்; இவ்வுலகம் மேலுலகமாகிய இரண்டிலும் புகழ் பரந்து நிலைபெறும்;கவச மணிந்தது போலத் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் கண்ணேறுகளும் துன்பம் செய்யா,

ஐங்குறுநூறு 247 – கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது 

"அன்னை தந்தது ஆகுவது அறிவென்
பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி
முருகென மொழியும் ஆயின்
அரு வரை நாடன் பெயர்கொலோ அதுவே".

உன்னுடைய அழகிய இல்லத்தில் புது மணல் பரப்பி, உன் கையில்
தாயத்தைக்கட்டி,முருகனின் கோபத்தை தணிப் பதற்கான சடங்குகளைச்  செய்ய,உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது உன்னுடைய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ?
இப்படி "தாயத்து" பற்றிய செய்தியையும் சங்க பாடல் ஒன்றில் காணக்கூடியதாக உள்ளது. 

வேலனின் வெறியாடல் பற்றிப் பல சங்க இலக்கியப் பாடல்கள் பேசுகின்றன.தலைவியின் காதல் அறியாத் தாயும் செவிலியும்[foster-mother,வளர்த்த தாய்] தலைவியை வாட்டுவது எதுவென்றறிய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்றே வெறியாடல்.இந்த வெறியாடலை வேலன் செய்ததாகவே இலக்கியங்கள் பேசுகின்றன.அங்கே தலைவியின் நோய்க்குக் காரணம் அறிய வெறியாட்டு நிகழ்ந்தது.அதை முன்னின்று நடத்தியவள் தாய்.

முன்னர் பௌர்ணமி நாளன்று நடு இரவில் வெறியாட்டு நிகழும்.முருகாற்றுப்படுத்த வேண்டி களத்தில் நின்று வேலன்,முருகனை தன் மீது வரும்படி அழைப்பான்.இவ்வாறு வேலன் அழைக்கையில் அச்சம் தருகின்ற முறையில் முருகன் அவன்மீது வந்திறங்குவான். அவ்வாற்றலால் வேலன் வருங்காலம் உணர்த்துவான் என்று சங்க பாடல்கள் கூறுகின்றன. 

ஐங்குறுநூறு 241 – கபிலர், குறிஞ்சி திணை -  தோழி தலைவியிடம் சொன்னது 

"நம் உறு துயரம் நோக்கி அன்னை
வேலன்  தந்தாள் ஆயின் அவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே."


நான் படும்  துயரத்தை நோக்கி என் தாய்,வேலனை அழைத்தாள்,ஆனால் அந்த வேலன் மிகுந்த நறுமணம் கமழும் நாடனுடைய,நட்பு அறிவானா இல்லையா?திருத்தமான பற்கள் உடையோளே! என்று இப்பாடல் கூறுகிறது.இப்படி பல பாடல்களை சங்க இலக்கியத்தில் காணலாம்.


பழைய சடங்குகள் சம்பிரதாயங்களில் ஏதாவது ஒன்றை நாம் செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில்,அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை கைவிடாமல் இருக்கின்றோம்.அவை தேவையற்றது/பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை இன்னும் நாம் கடைபிடிக்கின்றோம்.

எனவே, நாங்கள் செய்வது சரியானதா/தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் மட்டுமே சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும்.அப்படி என்றால் காலத்தின் தேவைக்கு ஏற்றவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும்.மற்றவை கைவிடப்படும்.  

பகுதி/Part 06:"பயணமும் நல்ல நாளும்" அடுத்தவாரம் தொடரும் 

ஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்../பகுதி:03

நூல்:மாறிய நாட்களும்,மாறாத சூரியனும்.
ஆசிரியர்:வை:திவ்யராஜன்.
டுமீல்..அடுத்த செவ்வாய் தொடரும்..

நீ இல்லாத காதல் ..


நீ இல்லாத  தருணங்கள் 
உன்னோடு  வாழ்ந்த  
அழகிய காதல்  
எண்ணிப்பார்க்கையில் 
 என்  விழிகளில்
  கண்ணீர்    கசிந்து 
வலியுடன் உன்  நினைவை 
அசை போடுகின்றன -அன்பே
இருள் நிறைந்த  என் வாழ்வில்l
நீ காதல்  தென்றலாக  வந்து
  வாசம்  வீசினாய்
உன் காதல் வாசத்தால்
 ஈர்க்கப்பட்ட நானும் 
உன் சுவாசமே 
உயிர் எனக்கொண்டு உன்னை 
இதயத்தில் பூட்டி வைத்தேன் 


உன்னுடைய காதல் தென்றல் 
இதயத்தில் படும் போது
ன் தனிமையை மறந்து
 உறவுகளை மறந்து 
புது சுகம் கண்டு 
ஆனந்தம் கொண்டேன்
தென்றலாக வீசிய  காதலும் 
உன் மௌனத்தால் முடங்கி போனதால்   
 என் இதயமும் திசை தெரியாமல் 
தத்தளிக்குதே!

அகிலன்,தமிழன் 

சிவகார்த்திகேயன் மட்டுமா?, இவங்களும்தான்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று வெள்ளித்திரையில் ஹீரோக்களாக வளர்ந்திருக்கும் `வீஜே டு ஆக்டர்' கள் சிலரின் பட்டியல்  இது...
சிவகார்த்திகேயன் :
`கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞனாக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் `மோஸ்ட் வான்டட்' நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆன பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆரம்பித்தார்தொகுப்பாளராக ரைமிங், டைமிங் காமெடிகளால் ரசிகர்களை ஈர்த்த சிவா, 2011 ஆம் ஆண்டு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விகடன் விருதையும் வென்றார். டிவி நிகழ்ச்சிகள் மூலமாகவே பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்திருந்தவர் `மெரினா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் எட்டே படங்களில் ஹீரோவாய் நடித்து எட்ட முடியாத அளவு உயர்ந்து நிற்கிறார்.
ப்ரஜின் :
சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார் ப்ரஜின். அதன் பிறகு சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்த ப்ரஜினுக்கு  `காதலிக்க நேரமில்லை' நாடகம் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. அது கொடுத்த வெளிச்சம் வெள்ளித்திரை வரை அவரை கூட்டி சென்றது. ஆரம்பத்தில் சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர் `தீக்குளிக்கும் பச்சைமரம்' படத்தின் மூலம் நாயகன் ஆனார். இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'.
மாகாபா ஆனந்த் :
`ரேடியோ மிர்ச்சி'யில் பல ஆண்டுகள் பண்பலைத் தொகுப்பாளராக பணியாற்றிய மாகாபா ஆனந்த், அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் `சினிமா காரம் காப்பி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அதைத்தொடர்ந்துசூப்பர் சிங்கர், ‘அது இது எதுநிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். பின்னர் 2014 ஆம் ஆண்டு `வானவராயன் வல்லவராயன்' படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த மாகாபா `நவரசதிலகம்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கடலை,அட்டி,பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.
முரளி ராம் :
சன் மியூசிக், இசையருவி என இரண்டு சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி பட்டையை கிளப்பியவர். சினிமா நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்து, தொகுத்து வழங்கியபோது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. 'மதுரை சம்பவம்' படத்தின் இயக்குநர் யுரேகா இயக்கிய `தொப்பி' படத்தில் நாயகனாக நடித்தார்.



சுரேஷ் ரவி :
இவரும் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றிவர். `கால் மேல காசு', `காஃபே டீ ஏரியா' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். இவர் சமீபத்தில் வெளியான `மோ' எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இப்போது 'அதிமேதாவிகள்' எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.



அசார் :
சூரியன் எஃப் எம் ஆர்ஜே, ஆதித்யா டிவி விஜே, மிமிக்ரி கலைஞர், நடிகர் என பலமுகம் கொண்டவர் அசார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் `ஏன்டா தலையில எண்ண வெக்கல' விரைவில் வெளியாகவுள்ளது. அந்த திரைப்படத்தின் இயக்குநரும் விக்னேஷ் கார்த்திக் எனும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தான்.