தமிழரின் நம்பிக்கைகள்,பகுதி/Part-03"B",

 superstitious beliefs of tamils:
மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்ட  அல்லது அதில் ஏற்படும் நோய் குணங்களை கொண்ட சில நம்பிக்கைகள் :  "தும்மல்/விக்கல்/கண் வெட்டசைவு/உள்ளங்கை அரித்தல் sneezing/hiccups//twitching of the eye/itching of palm:"
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
.Compiled by: Kandiah Thillaivinayagalingam] 
[கண் வெட்டசைவு & உள்ளங்கை அரித்தல்]

கண் வெட்டசைவு:
மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்ட நம்பிக்கைகலில் குறிப்பாக பெண்களின் இடது கண் துடிப்பது முக்கியமானது.

பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் துர்நிமித்தம்[அபசகுனம்] என்றும் கூறுவார்கள். இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.

  "நுண்ணேர் புருவத்த கண்ணு மாடும் 
   மயிர்வார் முன்கை வளையுஞ் 1செறூஉம் 
   களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி 
   எழுதரு மழையிற் குழுமும் 
   பெருங்க னாடன் வருங்கொ லன்னாய்"
   [ஐங்குறுநூறு218.]

நுண்ணிய அழகிய புருவத்தை யுடைய இடக்கண்ணை துடிக்கும் பெண்டிர்க்கு ,இடக்கண் துடித்தல் நன்னிமித்தம்[Omens – நிமித்தங்கள்] என இங்கு கூறப்படுகிறது 

பெண்களின்  வலது கண் துடிப்பதால் தீமை விளையும் என்பதனையும் இடது கண் துடிப்பதால் நன்மை விளையும் என்பதனையும்  இளங்கோவடிகள்  இந்திர விழாவின் போது கடலாடச் செல்லும் கோவலன்,மாதவி இருவரும் பிரியப் போவதையும் கோவலன் கண்ணகியிடம் திரும்புகிறான் என்பதையும் மிக அழகான ஒரு முன் காட்சியால் உணர்த்துகின்றார்.

"கண்ணகி கருங்கணும், மாதவி செங்கணும்
உள்நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன"
(சிலம்பு.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை, 238-240)


என்ற வரிகளில் பிரிந்திருந்த கண்ணகியின் கண்களும் கூடியிருந்த மாதவியின் கண்களும் கண்ணீர் சிந்தின.ஆனால் துடிக்கும்போது கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தன என்று கூறுகின்றார். இக்கண் துடிப்புகள் முறையே நன்மை, தீமை நேரப் போகின்றன எனக் குறிக்கும் சகுனங்கள் என்பது நம்பிக்கை.கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதை,இவ்வாறு கூற வந்த கருத்தைக் குறிப்பினால் உணர்த்தியுள்ளார் இளங்கோவடிகள்.

கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது.ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன்,இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல.பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர். 

இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இராமாயணத்திலும்,மகாபாரதத்திலும் இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு இலக்கியத்திலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, தன்னிடம் அன்பு செலுத்தும் திரிசடையிடம்,எனக்குக் கண்புருவம் முதலியன இடப்பக்கம் துடிக்கின்றன.இத்துடிப்பால் வருவது நன்மையா? தீமையா?எனக் கேட்டதாகக் குறிப்பிடுகின்றனர். இதனை,

”பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல்
வலந்துடிக் கின்றில வருவது ஓர்கிலேன்”
என்ற பாடல் மூலம் அறியலாம்.

போர்க்களத்தில் தன் மகன் அபிமன்யூ இறந்த போது அருச்சுனன் கண்ணும் தோளும் இடப்பக்கம் துடித்தன.அதனால் அவன் அச்சமுற்றுக் கண்ணனைப் பார்த்தான்.அவன் கண்களும் கலங்கியிருந்தன.இன்றைய போர்க்களத்தில் தன் தமையனோ,மகனோ இறந்திருக்கக் கூடும் என்பதை இடப்புறம் துடித்ததால் உணர்ந்து கொண்டவன் கண்ணனிடம் யார் இறந்திருப்பார்? எனக் கதறிக் கேட்கின்றான் என்பதை,

”என்கண்ணும் தோளும் மார்பும்
இடனுறத் துடிக்கை மாறா
நின்கணும் அருவி சோர நின்றனை
இன்று போரில்
புன்கண் உற்றவர்கள் மற்றென் துணைவரோ
புதல்வர் தாமோ”
இப்பாடலால் உணர முடிகிறது

உள்ளங்கை அரிப்பு:

சாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று நாம்
சொல்வது போல, மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது.அதேபோல உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று இந்தியர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள்.

உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று ஊரில் சொல்வார்கள்.வலது கை அரித்தால் பணம் வரும் -இடது அரித்தால் செலவாகும்.பெண்கள் விஷயத்துல இது தலைகீழாகும் .ஒன்று மட்டும் உண்மை .உள்ளங்கை அரித்தால் கண்டிப்பாய் பணம் வரும் தோல் நிபுணருக்கு [ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்[skin specialist] டாக்டருக்கு]!"

ஆனால் தமிழ் இலக்கியங்களில் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை இது "சாக்சன்கள்"   ["Saxons"] அரிப்புக்கு உட்பட்ட  தோலை  வெள்ளியால்["silver"]  தேய்க்கும் போது குணமாகும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்ததாக இருக்கலாம்?  

பகுதி/Part 04:"கிரகணம் [ வானகோளங்களின் ஒளிமறைப்பு ]  & வீடும் சமையல் அறையும்  /Eclipse and Home  & kitchen" அடுத்த வாரம் தொடரும் 

19 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete