உன்னை பார்த்த உடன்
ஏன் உன்னுடன் காதல் கொண்டேன்
என் காதல் உனக்கு புரியாது
உன் காதல் எனக்கு தெரியாது
உன்னை கண்டால்
பேச வார்த்தைகளும் வருவதும் இல்லை
ஏன் என் மனமும்
உன்னை காணாத போது வாட்டி கொல்லுதே!
எதிரி கூட என்னை இப்படி
தீண்டவில்லை பெண்ணே!
எப்படி வந்தது உன்னுடன் காதல் இப்படி
உன் நிழல் கூட தெரியாத போதும்
என் மனம் ஏங்குது உன்னை பார்பதற்கு
உன்னை பார்த்து பார்த்து
ஒரு முறை வானத்தில் பறக்கிறேன்
மறு முறை இதயம் உடைந்து
நொறுங்கி போகிறேன்
பெண்ணே என் காதலுக்கு உயிர் தருவாயா?
அல்லது மரண வாசலுக்கு அழைப்பாயா?
பதில் சொல்லி போ ஒரு முறை அன்பே !!!
அகிலன்,தமிழன்
No comments:
Post a Comment