அனுராத புரத்தில் தமிழர்:

கி மு மூன்றாம்  நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை  "திஸ " என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டு இருந்தான்.அவன் அவ் மதத்தில் கவரப் பட்டு ,தனது மக்களுடன் மதம் மாறினான்.அத்துடன் தனது பெயரையும்  "தேவ நம்பிய  திஸ " [King Devanampiya Tissa/307-267 BC ] என்று மாற்றினான். இவ் மன்னன் இறந்த சில ஆண்டுகளின் பின்பு, கி.மு 237 ஆம் ஆண்டு அளவில் ,சேன [ஈழசேனன் /சேனன்],குத்தக [நாககுத்தன் /குத்திகன்] [Sena and Guththika/237-215 BC] என்ற இரு தமிழ் மன்னர்கள் மொத்தம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் அனுராத புரத்தில் இருந்து ஆட்சி செய்தனர்.இவ்விரு தமிழ் மன்னர்களின் பின் சில காலம் கழித்து,எல்லாளன் [Elara] என்ற தமிழ் மன்னன் கி மு 205–161  ஆண்டு அளவில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.இவன் துட்ட காமினி [Dutthagamani] யால் தோற்கடிக்கப் பட்டான்.மீண்டும் கி மு 103 ஆண்டு அளவில்,ஐந்து  தமிழ் மன்னர்களால்
[அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் என அழைக்கப்பட்ட புலஹத்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகும் ]கி மு 89 ஆண்டு வரை ஆளப்பட்டது.இப்படி தமிழ் மன்னர்களால் நீண்ட காலம் அனுராத புரம் ஆளப்பட்டதை பாளி நூலில் கூறப் பட்டுள்ளது.

மேலும்  சிங்கள மொழி எந்த ஒரு நாட்டிலும் முன்பு பேசப் படவில்லை.கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு ,பாளி மொழி இறந்த மொழியாக  மாறிக் கொண்டிருந்தது.எனவே இதற்கு பிரதி யீடாக ஹெள மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது.அதன்  பின் கி பி எட்டாம் நூற் றாண்டில், பிராகிருதம், பாளி,தமிழ் போன்ற மொழிகளையும் உள்வாங்கி சிங்கள மொழியாக முதல் முதல் வளர்ச்சி அடைந்தது.ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை.ஆனால் கி மு 300 ஆண்டு அல்லது அதற்கு முன்பே தமிழ் ஓர் இலக்கிய மொழியாக,இன்று
உள்ளது போலவே வளர்ச்சி பெற்றிருப் பதை காண்கிறோம். அதே போல,மகிந்தன் அல்லது மகிந்தரின் வருகைக்கு முன்பு [கி.மு.3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி] பௌத்த மதம் இலங்கையில் கட்டாயம் இருந்து இருக்காது. ஆகவே அதற்கு முன்பு இலங்கை மக்கள் என்ன மதத்தினராக இருந்தனர் என்பது அவர்களின் இன அடையாளத்தை ஓரளவு காட்டும்.கி மு 247 இல் முடி சூடிய மன்னன் தேவ நம்பிய திஸவின் தந்தையின் பெயர் பாளி நூல்களில் மூதசிவன்  [மூத்தசிவன்/Mutasiva] எனக் குறிக்கப் பட்டுள்ளது.இவன் கி மு 367 தொடக்கம் கி மு 307  வரை  அனுராத புர அரசனாக இருந்துள்ளான்.மேலும் மகாசிவன்[Mahasiva] என்பவனும் கி மு 257-247 காலப் பகுதியில்  அனுராத புர அரசனாக இருந்து ள்ளான்.இங்கு சிவன் என்ற பெயர் வழக்கில் இருந்தமை அக் காலத்தில் சிவ வழிபாடு இருந்ததை உறுதிப்
படுத்துகிறது.அதாவது சைவ சமயம் அனுராத புரத்தில் இருந்தமை எமக்கு இதனால் தெரிய வருகிறது.சைவ மதம்,தமிழ் பண்பாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை நிலவும் பாரம் பரியமாகும்.இதற்கு மேலும் எடுத்துக் காட் டாக ,வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயனின் [Walagamba ] ஆட்சியின் போது [கி மு 103 -கி மு 89] ,பிராமணர்களின் குடியிருப்புக் களையும் வேதம் ஓதும் மண்டபங்களையும் யாக சாலைகளையும் அவன் அமைத்தான் என மகாவம் சத்தில் இருந்து அறிய முடிகிறது.இதுவும் தமிழர்கள் அனுராத புரத்தில் அன்று வாழ்ந்ததை சுட்டிக் காட்டுகிறது.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது   போல, மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலிலும்  கி.மு. 109 தொடக்கம் கி.மு. 103 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனான  கல்லாட நாகன்,மற்றும்  சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன் போன்ற மன்னர்களையும் காண்கிறோம்.நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது.இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து ஆகும்.இந்த நாகர்கள்[Naga people ],மற்றும் இயக்கர்கள்[ Yaksha ], வேடர்கள்[Veddas] ஆதிதிராவிட இனமக்கள்[Adi-Dravida people] என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.[.According to the mahavansa, yakkhas confined to the center of the Island and Naga dominated the northern and western parts in sixth century B.C.].ராணி
அனுலா[Queen Anula] ,சிவா 1 [Siva I]என்ற அரண்மனை இரவுக்காவலாளி[doorman],பின் வடுகன் [Vatuka]என்ற தமிழ்த் தச்சன்,அதன் பின் நிலிய [Niliya] என்ற  தமிழ்ப் பிராமணப் பூசாரியையும் திருமணம் செய்தார்.இதனால் தமிழ் மன்னர்கள் அக் காலப்பகுதியில் அனுராத புரத்தில் ஆட்சி செய்தார்கள் எனவும் அறிய வருகிறது. அது மட்டும் அல்ல அக்காலத்தில் அரண்மனையில் தமிழர்கள் கடமை புரிந்ததும் தெரிய வருகிறது.இவை நடை பெற்ற காலம் கி மு 47 -42  ஆகும்.அத்தோடு,அப் பிரதேசத்தில் பெருமளவு தமிழ் மக்களும் செல்வாக்குடன் வாழ்ந்து இருக்க வேண்டும்.அல்லாவிடில் தமிழ் மன்னர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.மேலும் அங்கு பல சிற்றரசுகள் இருந்ததும் தெரிய வருகிறது .அவைகளில் கட்டாயம் சில தமிழ் அரசுகளும் இருந்து இருக்கலாம். மேலும் பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியதும் குறிப்பிடத் தக்கது [993–1077].இவை எல்லாம் அநுராத புரத்தில் ஆதி காலம் தொடக்கம் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை காட்டுகிறது. அத்தோடு ,கி பி 1658  இல் இருந்து ஆட்சி செய்த ஒல்லாந்தர் [Dutch] காலத்தில் நடை பெற்ற சம்பவம் அக் காலம் வரை தமிழர் அங்கு வாழ்ந்ததை மிகத் தெளிவாக வரலாற்று உண்மையை நிருவிப் பதாக உள்ளது.பதினேழாம் நூற்றாண்டின்  இறுதி பகுதியில் வர்த்தகரான ரொபெர்ட்  நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயன் கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்டான்.எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி,காடுகளையும் மலைகளையும் கடந்து அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது,சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான்.ஆகவே அநுராத புரம் வந்த  ரொபெர்ட்  நொக்ஸ்,அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி ,சிங்கள மொழியில் பேச முற்பட்டான்.ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்க வில்லை.அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று.இதனை இவர் Historical Relation of Ceylon என்ற தனது நூலில் இப்படி எழுதி உள்ளான்-

 "To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low.

Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323]

இவை எல்லாம் தமிழர்கள் பெருமளவு அனுராத புரத்தில் வாழந்ததையும்,மற்றும் ஆட்சி செய்ததையும்  எந்த வித ஐயத்திற்கும்  இடம் இன்றி எடுத்துக் காட்டு கின்றன.என்றாலும் இன்று நிலைமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது.இன ஒற்றுமையும் உருக் குலைந்து விட்டது.இவை வருத்தத்திற்கு உரியனவே! 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment