எங்கள் கிராமத்தின் வாசனை மீண்டும் கிடைக்குமா..? [ஆக்கம்:அகிலன் தமிழன் ]

இருள் தனை களையும் பொழுது
 எம் விட்டு சேவல்கள் கூவும் சத்தமும் 
  காகங்கள்  கரைந்து எம்மை எழுப்பும் ஒளியும் 
அதனை தொடந்து கதிரவனின் வருகையும் 
 எங்களின் வருகையை எதிர் பார்த்து 
எம் வீ ட்டு வளர்ப்பு பிராணிகளின் குதூகளிப்பும் 
கிராமத்தின் காலை காட்சி இன்பம் மறக்க முடியுமா..?



                                                                                                   
தாய்   முகத்தை காணவும் 
அவள்   குரலும் ஓசைக்கும் 
அவள் தரிசனத்துக்கு 
காத்து இருந்து விழிக்கும் தருணமும் 
எங்களுக்கு சேவை செய்ய
 அவள் காத்து இருந்த கணங்களும் 
மீண்டும் வருமா?



அம்மாவை விட்டு பிரிய மனம் இன்றி 
பாடசாலைக்கு போகாமல் இருந்தாலும் 
அக்கா அல்லது  அண்ணன் 

இழுத்து கொண்டு பாடசாலைக்கு சேர்க்கும் 
அழகிய பொழுதுகள் மீண்டும் கிடைக்குமா ? ...

                                                 கணித வாத்தியார் அடிப்பார் என்று சொல்லி 

                            இரண்டு கால்சட்டையை அணிந்து

      பள்ளி சென்ற தருணம்..

      என்னிடம் ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது                என பெருமைபட்ட தருணம் 

      புதிதாக வாங்கும் மை பேனாவும்
    அதை  நண்பர்களுக்கு காட்டி 
    பவுதிரம்மாக வைத்து இருக்கும் போது 
      அதை கொண்டு தங்களின் 

                கையெழுத்தை எழுதி   பார்க்க
 கூடும் நண்பர்களும்...

                                                    ஒருவருக்கு ஒருவர் பட்ட பெயர் வைத்து கூவுவதும் 
அதனால் வரும் 

இனம் புரியா   கோவமும் சண்டயும்

மீண்டும் வருமா!


மாலை பொழுது என்றதும் 

வெற்றி மடத்தில் விளையாடும் விளையாட்டும் 
வாழைப்பழத்துக்கு ஆக 

போட்டி போட்டு விளையாடும்  கிளி தட்டும் 
கிட்டி புல்லு விளையாட்டும் 

ஒப்பு விளையாட்டும் மறக்க முடியும்!
 

உடம்பு வெயர்க்கும் போது 
சட்டையை கழற்றி  
 நண்பர்களுடம் கொடுத்து விளையாடிய தருணமும்
 நண்பர்கள் சட்டையை ஒளித்து வைப்பதும் 
அதானல் எழும் சண்டையை பார்க்க 

நண்பர்கள் துண்டிவிடுவதும்
அப்  பொழுதுகள் மீண்டும் வருமா! 




     கோயில் திருவிழாவுக்காக 

இரவு வேளை   களவாக 
     தென்னை குருத்தை வெட்டி 
                  தோரணை செய்து நண்பர்களுடன்

 கோயிலை சோடிப்பதும் 

              அதில் சில நண்பர்கள் களவாக 


                     இளநி பிடிங்கி கொண்டு வருவதும் 

                     அதை பறித்து குடிக்கும் போட்டியும் 


                   அடுத்த நாள் நல்ல பிள்ளைகளாக 

                                     வாழ்ந்து திரிந்த காலமும் மீண்டும் வருமா!

திருவெம்பாவை வந்ததும்  

விடிய காலை  நண்பர்களுடம் எழும்பி
தேவாரம் படித்து திரிந்த காலமும் 

அந்த நேரம் பொடியளுக்காக 
தின் பண்டங்கள் செய்து 

தேனீர் வைத்து தரும் கிராமத்தின் மக்களின் 
பாசமும் மீண்டும் கிடக்குமா!

                                                                                            

6 comments:

  1. கலற்றி - கழற்றி
    ஒளித்து - ஒழித்து
    குதூகளிப்பும்- குதூகலிப்பு குதூகலம்

    ReplyDelete
    Replies
    1. நல்லது

      Delete
    2. நன்றி மறைந்த எழுத்து மொழியை சரி செய்வதற்கு ..

      Delete
  2. கிட்டி புள்ளு

    ReplyDelete
  3. நகுலன்Monday, March 28, 2016

    நல்லது; ஆனால் கொஞ்சம் 'ல', 'ள' க்களைப் பாருங்கோ தம்பி!

    ReplyDelete