ஒளிர்வு:76- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி ],2017

   

தீபம் வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம்,
மீண்டும் மாசி மாதத்தின் பிறப்பில் உங்களுடன் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பொறாமை- மனிதனை ஆட்டிப் படைப்பதில் இன்று பெரும் பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவனும் தமது விருப்புகளுக்கேற்ப வெவ்வேறு விதமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறான். வெவ்வேறு திறமைகளைக் கொண்டிருக்கிறான். அதில் வெற்றியும் கண்டிருக்கிறான். அவ்வெற்றிகளை அடையாதவன் எதோ ஒரு விதத்திலாவது சில நன்மைகளை அடைந்தாலும் கூட மற்றவன்  பெற்றதும் தனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை அடைகிறான். பொறாமையினால் மன அழுத்தம் காரணமாக நோய் வாய்ப்படுகிறான்.உறவுகளை இழக்கிறான்.பின் தன்னையும் இழக்கிறான்.
ஒருவன் தனக்கே எல்லா சுக போகங்களும் கிட்டிட வேண்டும் என எண்ணுவது பேராசை.அதுவே பொறாமைக்கு வழிகோலுகிறது. இறுதியில் அவன்  அனைத்தையும் இழக்கிறான்.
எனவே,வாழ்வில் நல் முயற்சிகள் தொடரட்டும்.வாழ்வில் வளர்ந்தோரை வாழ்த்துவோம், இணைந்தே வளர்வோம்.[தீபம்]

0 comments:

Post a Comment