நீ எங்கே போனாயடி?


உன்னில்
என்னையே தொலைத்து
ஆனந்தம் கொண்டு
காதல் கொண்ட கண்களும்
உன் பிரிவால்
கண்ணீர் சிந்தி நிக்கின்றன-ஆருயிரே
நீ காதலை பிரித்து வைத்து
எங்கே போனாயடி?

நீயும்
பிரிவை தராமல் -என்னை
புரிந்து கொள்வாய் என நம்பி
நான் உன்னை புரிந்து இருந்தேனே
நீயோ என்னை
புரிந்தும் புரியாமல் இருந்து விட்டு
பிரிவை தந்து எங்கே போனாயடி?

உன் நினைவுகள்
மனம் முழுதும் நிறைந்தால்
என் நினைவுகள்
உயிர் இன்றி  போய்
உன்னையே   தினமும் தேடுகின்றன
ஆருயிரே
நீ   மீண்டும் ஒரு முறை    வந்து
என்னை அரவணைத்து கொள்வையா ?

 ஆக்கம்:அகிலன்,தமிழன்.

No comments:

Post a Comment