அன்று காலையில் டொராண்டோவில் நடை பெற்ற மாகாண சங்கீதப் பொதுப் பரீட்சைக்கு சந்தோசமாகவே அக்காவை கூட்டிச் சென்ற பாட்டி பயங்கரக் கோவத்துடன் வீடு வந்து சேர்ந்தார்.
பாட்டியின் கோவத்திற்கு காரணம் இல்லாமலில்லை.
அங்கு சங்கீதப் பரீட்சை நடாத்த வந்த பெண் ஆசிரியர்களில் சிலர் பரீட்சை எழுதப் பஞ்சாபி உடையுடன் சென்ற அக்காவினை தமிழ் கலாச்சாரம் தெரியாதவள் என்று கேலி செய்து பரீட்சையினை சரிவரச் செய்ய முடியாதபடி நடந்துகொண்டார்களாம்.
குமுறினாள் பாட்டி.
ஆண்களுக்கு மட்டும் கலாச்சாரம்,பண்பாடு என்று எல்லாம் கிடையாதா?அவர்கள் வேட்டி சால்வையோடையா வந்து அங்கு பரீட்சை எழுதினார்கள்?பெண்களுக்கு எதிரி பெண்கள்தானா?முதலில் இவர்கள்தமிழரோடுஒழுங்காகதமிழில்உரையாடுகிறார்களா?ஏன்?இவர்களின் பாட்டிமார் புடவை உடுத்த மாதிரியா எவர்கள் இன்று புடவை உடுக்கிறார்கள்?
இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்குவரையும் தான் புடவை,பாவாடை அணிகிறார்களே அவர்களெல்லாம் தமிழர்களா? பண்டைய கிரேக்க நாகரிக காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய இந்த நீளமான துணி சுற்றும் பழக்கம் அன்னியர் ஆட்சியில் இந்தியாவில் புகுந்தது பழைய கதை.அது தமிழனுக்குத் தொற்றிக் கொண்டதில் தவறொன்று மில்லை.
இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்குவரையும் தான் புடவை,பாவாடை அணிகிறார்களே அவர்களெல்லாம் தமிழர்களா? பண்டைய கிரேக்க நாகரிக காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய இந்த நீளமான துணி சுற்றும் பழக்கம் அன்னியர் ஆட்சியில் இந்தியாவில் புகுந்தது பழைய கதை.அது தமிழனுக்குத் தொற்றிக் கொண்டதில் தவறொன்று மில்லை.
இந்தக் காலத்துப் பிள்ளைகள் பின்பற்றும் கலாச்சாரம் சரியில்லை என்றால் எது சரியான கலாச்சாரம்?நீங்கள் பின்பற்றும் கலாச்சாரமா?இல்லை,உங்கள் பாட்டன்,பாட்டி அல்லாது அவர்களின் பாட்டன் பாட்டி பின்பற்றிய கலாச்சாரமா?ஏன் கேட்கிறேன் என்றால்,அவரவர் அவரவர் காலத்தில்,அவரவர் வசதிக்கும்,வாழும்
சூழலுக்கும் ஏற்ப தங்கள் கலாச்சாரத்தினை மாற்றி அமைத்து வாழ்ந்து வாழ்ந்தார்கள்.
மேலும்,இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை இன்றுவரைக்கும் இந்தியாவினைப் பின்பற்றியும்,குறிப்பாகத் திரைப் படத்தில் வரும் தமிழ் தெரியாத வட நாட்டு நடிகைகளைப் பின்பற்றியே உடைகளை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
கலாச்சார மாற்றம் என்பது ஒரு இரவில் நடப்பது அல்ல.மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வருவது.மாற்றம் என்ற சொல்லைத்தவிர எல்லாமே மாற்றம் அடையக் கூடியது என்பதே உண்மை.
இதில் கலாச்சாரம் மட்டும் விதி விலக்கு அல்ல.நல்ல உடைகளே நல்ல கலாச்சாரம் ஆகும்.ஒரு உடைபெண்ணினது கண்ணியத்தினை பேணும் வகையில் இருக்குமேயானால்,அவ்விதமான உடைகள்
எவைகளையும் அணியலாம் என்பதே தமிழுக்கு அழகு.
இதில் கலாச்சாரம் மட்டும் விதி விலக்கு அல்ல.நல்ல உடைகளே நல்ல கலாச்சாரம் ஆகும்.ஒரு உடைபெண்ணினது கண்ணியத்தினை பேணும் வகையில் இருக்குமேயானால்,அவ்விதமான உடைகள்
எவைகளையும் அணியலாம் என்பதே தமிழுக்கு அழகு.
அதேவேளை,ஒவ்வொரு பெற்றோரும் நேரப் பற்றாக்குறை மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பல வருடக்கணக்காய் நேரத்தினையும் பணத்தினையும் செலவழித்து தமிழ்க் கலை வகுப்புக்களுக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று,எப்போ பரீட்சை வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து பிள்ளைகளை அழைத்து வருகின்றனர்.அந்த வேளையில்,இப்படியான சம்பவங்கள் சகிக்க முடியாத அனாகரிகங்களாகும்.அதிலும் கனடாவில் வாழும் தமிழ் பிள்ளைகளில் 10 வீதத்திலும் குறைவான பிள்ளைகளே தமிழ்க் கலைகளை கற்றுத் தேறுகின்றனர்.மேற்படி வழிகளை கையாண்டால் எதிர் காலத்தில் தமிழ்க் கலைகளை பிள்ளைகள் கற்கும் நிலை அற்றுப் போய்விடும்.
பாட்டியின் பக்கம் நியாயம் இல்லாமலில்லை.
."ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்."
ஆக்கம்:பேரன் செ.மனுவேந்தன்
அருமையான கருத்து. பண்டைய கிரேக்க நாகரிக காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய இந்த நீளமான துணி சுற்றும் பழக்கம் அன்னியர் ஆட்சியில் இந்தியாவில் புகுந்தது பழைய கதை.அது தமிழனுக்குத் தொற்றிக் கொண்டதில் தவறொன்று மில்லை.
ReplyDeleteவருங்காலத்தில் கோர்ட்டும், சூட்டும், ரையும்தான் நமது உடைகள் என்று மாறி, யாராவது வேட்டி உடுத்தால் உதைத்துத் தள்ளவும் கூடும்!
ReplyDeleteவரும் காலத்தில், கோர்ட், சூட், ரை தான் எங்கள் கலாச்சார உடுப்பு என்று சொல்லிக்கொண்டு, வேட்டியுடன் வருபவர்களை ஒரு மாதிரிப் பார்த்தாலும் பார்ப்பார்கள்!
ReplyDelete