அப்படியெனில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் மாஸ்க்கை முகத்திற்கு போடுங்கள். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் ஒரே வாரத்தில் மறைவதைக் காணலாம். சரி, இப்போது ஏழே நாட்களில் சரும சுருக்கங்களைப் போக்கும் அந்த மாஸ்க்கை எப்படி செய்வதென்றும், பயன்படுத்துவதென்றும் காண்போம்.
படி #1
முதலில் ஒரு பல் பூண்டு எடுத்து தோலுரித்து, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
படி #2
பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
படி #3
அடுத்து அதோடு 1 டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
படி #4
பின் முகத்தில் உள்ள அழுக்கை, பாலில் நனைத்த பஞ்சுருண்டை பயன்படுத்தி துடைத்து எடுத்துவிட வேண்டும்.
படி #5
பிறகு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 20-30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையுடன் மிளிர்வதைக் காணலாம்.
No comments:
Post a Comment