ஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி;09


நூல்: ''மாறிய நாட்களும்,மாறாத சூரியனும்''
ஆசிரியர்: வை.திவ்வியராஜன்.

செவ்வாய் தொடரும்...

எல்லாமாய் நீயே!



என்னைத்  தாங்கும் என்னவளே! 

எப்படிச் சொல்வேன் உன் அன்பை
ஓர் இரு வார்த்தையில்


 சொல்லி விடலாமா ?

நிழல் கொடுக்கும் மரம் போல 
எனக்கு தோல்வி வரும் போது
ஆறுதல்  கூறி அரவணைக்கும்

 நிழல் நீ அல்லவா!


  கடும் சொல் கொண்டு 
 நான் பேசினாலும், 

உன் உணர்வை ஊமை  ஆக்கி

உன் அன்பை பொழிந்து 
என் கோபத்தை தணியச்  செய்து 
நான் விடும் தவறை எல்லாம் சரி செய்து 
என்னை வழிப்படுத்தி  

குடும்ப  சக்கரத்தை வளப்படுத்தும் 
துடிப்பே நீ அல்லவா!!!
             அகிலன்,தமிழன்         

பூமியை ஒத்த ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு !-[இது செய்தி அல்ல!]

நாசா விஞ்ஞானிகள், உயிரினங்கள் வாழக்கூடியதாக நீர், வெப்பநிலை கொண்ட ஏழு புதிய கிரகங்களைக் கண்டு பிடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய செய்தி கேட்டு உலகில் உள்ள சகல தரப்பு விஞ்ஞானிகளும், விண் வெளி ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும்  மிகவும் பரபரப்பு, சந்தோசம், உற்சாகம், மெய் சிலிர்ப்பு அடைத்துள்ளனர்

இவை பூமியை ஒத்த காலநிலையைக் கொண்டுள்ளதானதாகவும், பூமியிலும் சிறிய பருமன் உடையதாகவும், இவற்றின் சூரியன் மிகவும் மங்கலாக ஒளிர்வதனால்  அவை அச்சூரியனுக்கு அண்மித்து அதைச் சுற்றினாலும், அவற்றின் நில வெப்பம் 0 -100  பாகை சென்டிகிரேட் மட்டும்தானாம். இதனால், இந்த ஏழிலும் நமக்கு -அல்லது உயிரினம் வாழ- ஏற்ற சுவாத்தியம் இருக்குமாம். மூன்று கிரகங்களில் பெரும் சமுத்திரங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் கூட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சரி, எமக்கு இங்குள்ள இடப்பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை எல்லாம்  முடிவுக்கு வந்துவிட்டன; இனி அங்குபோய் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி ஹாயாகச் செட்டில் ஆகி விடலாம் என்று யோசிக்கலாம். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு எல்லாம் ஆர்வம் மிக்கவர்களுக்கும், கற்பனைக் கதை எழுதுபவர்களுக்கும் உதவுமே ஒழிய, மனிதன் ஒரு காலத்திலும், எந்த வழிகளிலும் அங்கு போய் சேருவதற்கு  எந்தவித சாத்தியக்கூறும் அறவே இல்லை.

பக்கத்தில் (~) 385 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருக்கும் சந்திரனுக்கே உருப்படியாகப் போக முடிய வில்லை. அப்போலோ ராக்கெட் மூன்று மாசம் எடுத்தது.

கொஞ்சம் அப்பால்,  இருக்கும் செவ்வாய் (~) 225  மில்லியன் (6 சைபர்கள்) கி. மீ. தூரத்தில் இருந்தாலும் அங்கு என்ன இருக்கின்றது என்று இன்னமும் புரியவில்லை. இங்கு இதுவரை மனிதன் போகவில்லை. நாசா ப்ளூட்டோவுக்கு அனுப்பிய ஓர் ஆளற்ற ரொக்கட் 58  000  கி.மீ. வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. இந்த வேகத்தில் செவ்வாய் செல்ல ஆறு மாசம் எடுக்கும். ஆனால், திரும்பி வர, செவ்வாய் நமக்குச் சமீபமாக வரும் வரை 20  மாசங்கள் காத்திருந்து விட்டுத்தான் வரவேண்டும். ஆளுடன் அனுப்பினால் வேகம் குறையும்.

சரி, இப்போது நமது அந்தப் புதிய பூமிகளுக்கு வருவோம். இவை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா? 40  ஒளி வருட தூரத்தில்! அதாவது (~) 380  ட்ரில்லியன் (12 சைபர்கள்) கி.மீ தொலைவில்! இந்த தூரத்தை, அந்த ஆளில்லாத ரொக்கட் போய்ச் சேரவே 750 000  வருடங்கள் செல்லும். மனிதனுடன் செல்லும் விண் வெளிக் கலம் இதுவரை 28,160 கி.மீ. வேகத்தில்தான் செலுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வேகத்தில் போனால் 1 . 5  மில்லியன் வருடத்தில் போய்ச் சேரலாம்!

ஒளியின் வேகமாகிய 300 000  கி.மீ. (வினாடிக்கு, மணிக்கு அல்ல) வேகத்தில் சென்றால் மட்டுமே 40  வருடத்தில் போய் விடலாம். ஆனால், இது நடை முறை சாத்தியமே இல்லை. இந்த வேகத்திற்கு கிட்டிய வேகத்தில் செல்லுவதற்கு, ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் வேண்டிய உந்து சக்தி ஒரு பத்து இமயமலையிலும் கூடிய அளவில் தேவைப்படும். இது நடக்கக்க கூடியதா?

மேலும், உணவும், நீரும், வெப்பமும், காற்றும் மட்டும் நாம் வாழ்வதற்கு போதுமானவை அல்ல. நமது உடம்பு புவியின் புவியீர்ப்புக்கு மட்டுமே பழக்கப்பட்ட்து. சந்திரனில் பூமியின் ஈர்ப்புச் சக்தியின் 0 .16  அளவும், செவ்வாயில் 0 .38  அளவும் மட்டுமே காணப்படும். மனிதன் அங்கு கவசம் இன்றிச் சென்றால், கணப்பொழுதில் வெடித்துச் சிதறிவிடுவான்!  

ஆதலால், இந்தப் பெரும் செலவு செய்து கண்டுபிடிக்கப்படும் அற்புத செய்திகள், விநோதங்கள், ஆச்சரியங்கள் எல்லாம், விஞ்ஞானிகளின் உயரிய அறிவுத்திறன்களைக் காட்டி, கேட்போர் செவிகளுக்கு இதமானதாய் இருக்குமே ஒழிய, மனிதகுலத்திற்கு எதுவித பிரஜோசனமும் தரப்போவது இல்லை! அங்கு நிலம் கிடப்பதால் இங்கு வசதி வரப்போவது இல்லை!

சிலவேளை, கடவுள் எங்களை அங்கு வாழக்கூடியவர்களாக மாற்றி, ஒரு கை அசைப்பின்மூலம் அங்கு அனுப்பி வைப்பாரோ என்னவோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

 கருத்தோட்டம்:செல்வதுரை,சந்திரகாசன் 

காலை உணவை தவிர்த்தால் என்ன கிடைக்கும்?


சர்க்கரை வியாதி : காலையில் சாப்பிடாமல் இருந்தால் குறிப்பாக பெண்களுக்கு , இன்சுலின் சுரப்பதில் பாதிப்புகள் உண்டாகி, டைப்-2 சர்க்கரை வியாதி உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முடி உதிர்வு : கூந்தல் கற்றைகளுக்கு தேவையான கெரட்டின் உருவாக காலையில் சாப்பிடும் புரத உண்வால் அளிக்க முடியும். காலையில் உணவை தவிர்ப்பதால் போதிய புரதம் கிடைக்கப்பெறாமல் முடி உதிர்வு சொட்டை உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.
மைக்ரைன் : ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேனால் , காலை உணவை தவிர்ப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது சர்க்கரை அளவு குறைந்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் ஒற்றை தலைவலி உண்டாகும்.
பலதரப்பட்ட நோய்கள் : காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம், இவை மெல்ல உருவாகி இதனல் இதயத்தின் செயல்கள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் உருவாகும் சாத்தியங்கள் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாள் உழைக்க தேவையான எனர்ஜி மற்றும் செல்களுக்கு தேவையான சத்துக்கள் காலை உணவிலிருந்தே பெறப்படுகின்றன. ஆகவே காலை உணவை எக்காரண கொண்டு தவிர்ப்பது மிகவும் தவறு.