அக்கி ஆபத்தில் சிக்கமுன்....


கிட்டத்தட்ட 3-இல் 1 நபருக்கு அவரது வாழ்நாளில் ''அக்கி'' உருவாவுதற்கான ஆபத்து உள்ளது என்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கே அதிக ஆபத்து என்றும் மருத்துவ நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர்.
 சின்னம்மை  நோய் வந்து குணமடைந்த மனிதனின் உடலில் உள்ள நரம்பணுக்களில் நிரந்தரமாக தங்கிவிடும் சின்னம்மை-நச்சுரியி சில வருடங்களில் அறியப்படாத காரணங்களால் மீண்டும் செயற்பட்டு அக்கியை உருவாக்குகின்றன.
கொப்புளமும் வலியும் நிறைந்த ''அக்கி '' கழுத்தின் கீழ் ஆரம்பித்தாலும் நாளடைவில் முகம்,கண்கள் கூட ப்பாதிக்கலாம்.
தொடர்ந்து அச்ச உணர்வு,சரும நோய் தொற்று,பலவீனம்,தசை செயலிழப்பு,செவிட்டுத்தன்மை, என்பவற்றினை அனுபவிக்க நேரிடும்.
இந்நோயினை உணர்ந்தவர்கள் ,வெயிலில் இருந்து ஒதுங்கி ஓய்வினையும் கொண்டிருக்க வேண்டும். 
தற்காலத்தில் தடுப்பூசி மருந்து புழக்கத்திற்கு வந்திருப்பதால் நோய் வரும்வரை காத்திராது உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
                                                                                                                    




No comments:

Post a Comment