"THINK HUMAN [HUMANITY] FROM TODAY!"-:PART:02
There was a old story about the frog? They say if you drop a frog into a pot of boiling water that it will immediately jump out, but if you place the frog in a pot at room temperature and gradually raise that temperature, the frog will actually sit there until it boils to death. We are now in this position ,But our Tamil Siddhas even 1500 years ago jump out from the religious pot and show us the real truth ! All of siddhars wanted to subjugate the senses.Winning over the five senses offers an absolute control of the body leading to the control of the wandering mind.One of them refers to the five senses as “five thieves”.The most popular and well known of the siddhar’s is "Pambatti Siddhar" (பாம்பாட்டிச்சித்தர்/the snake character) who may be taken to be a true representation of his tribe. He takes the snake for a symbol to represent the human Soul and uses the expression :"Aadu pampe"(ஆடு பாம்பே/Dance Snake) as a refrain at the end of each stanza of his poem.The poem of this siddhar is in fewer than six hundred lines and deals with philosophic and spiritual matters in the authentic siddhar pattern with great passion.Three of his poems are given below:
Four vedas, six shastras, several treatises on strategies,
Puranas, Agamas espousing arts, Varieties of several other books_ Oh Snake!
Dance! Declaring all these as useless books.--Verse/98
["சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே."]
While the Two gathered mud One built the kiln for ten months.
The kiln, though wonderful, Is not worth a fraction of a coin.
Dance! Oh Snake! Saying this.--Verse/61
["இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!"]
No one can cook the gourd that is painted on paper.
Likewise despite searching in the eight directions there is no refuge.
They build a temple for every town and pray ceaselessly. But has never seen the Lord’s feet.
Dance! Oh Snake ! Saying this.--Verse/94
["ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே."]
Sivavakkiyar[சிவவாக்கியர்] was another great Tamil Poet/siddhar who lived in the period preceding the 10th Century A.D.He was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies.Three of his poems are also given below:
Where is the pariah woman?
Where is the high-caste woman?
Are there numbers inscribed on the skin and flesh?
Is the pariah woman’s delight different from that of a the high-caste woman?
Analyse the pariah woman and the high-caste woman in you.-- Verse/39
["பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!"]
Drawn milk doesn’t return to the breast.
Churned butter doesn’t return to the butter-milk.
The broken conch’s sound and the beings don’t re-enter the body.
The blossomed flower and the fallen half-ripe fruit never return to the tree.
The dead are never born. Never, never, never.Verse/47
["கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே"]
Where are the temples? Where are the holy ponds?
You loathsome people who worship the temples and ponds! Temples and ponds are in one’s mind.
There is neither creation nor destrution.
Never, never, never.Verse/34
["கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே."]
The God or religions are there to make person good human and not the ego centric racist. Every christian or Muslim or hindu should be more acceptable and should be ready to appreciate others religion by visiting each others church mosque and temples.We all believe in one god and its just our way of remembering the Divine power is different. but the bloodshed, hatred and ego shows that there are some loops holes present in the religion and because of this the society is suffering .United we stand, divided we fall, imagine if the World could be one, no Religions, no borders, no wars. The basics all begin at home, if the family can stand as one, that will be the beginning. If brothers & sisters learn to love and live in harmony, that is the beginning.Lets strive for well being, for a beautiful life on this planet. Let's break through the lines of religion, caste, community and even country. lets dissolve the borders. Let us be citizens of this planet. Let us care for this earth.Even Saiva Siddhantam[சைவ சித்தாந்தம்] Philosophy of Tamils is a way of life and This does not advise us to practice anything against nature or interfere with freedom and liberty of people. There is no place for superstitions and blind faith.In the name of God and religion, it does not divide or dissect people.They taught us that "God is LOVE and LOVE is God" ["அன்பே சிவம்" "ANBE SIVAM." -"தென்னாடுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி"]Our Saiva view of life is universal even,2000 years ago.Puranaanooru, proclaimed to the whole wide world :"யாதும் ஊரே, யாவரும் கேளீர்"/"every country is my own and all the people are my kinsmen."and there by proclaimed universal peace!
[Kandiah Thillaivinayagalingam]
Part:03 Will follow
அக்கி ஆபத்தில் சிக்கமுன்....
கிட்டத்தட்ட 3-இல் 1 நபருக்கு அவரது வாழ்நாளில் ''அக்கி'' உருவாவுதற்கான ஆபத்து உள்ளது என்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கே அதிக ஆபத்து என்றும் மருத்துவ நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர்.
சின்னம்மை நோய் வந்து குணமடைந்த மனிதனின் உடலில் உள்ள நரம்பணுக்களில் நிரந்தரமாக தங்கிவிடும் சின்னம்மை-நச்சுரியி சில வருடங்களில் அறியப்படாத காரணங்களால் மீண்டும் செயற்பட்டு அக்கியை உருவாக்குகின்றன.
கொப்புளமும் வலியும் நிறைந்த ''அக்கி '' கழுத்தின் கீழ் ஆரம்பித்தாலும் நாளடைவில் முகம்,கண்கள் கூட ப்பாதிக்கலாம்.
தொடர்ந்து அச்ச உணர்வு,சரும நோய் தொற்று,பலவீனம்,தசை செயலிழப்பு,செவிட்டுத்தன்மை, என்பவற்றினை அனுபவிக்க நேரிடும்.
இந்நோயினை உணர்ந்தவர்கள் ,வெயிலில் இருந்து ஒதுங்கி ஓய்வினையும் கொண்டிருக்க வேண்டும்.
தற்காலத்தில் தடுப்பூசி மருந்து புழக்கத்திற்கு வந்திருப்பதால் நோய் வரும்வரை காத்திராது உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சிந்தியுங்கள்!"பகுதி:01
"THINK HUMAN [HUMANITY] FROM TODAY!"
நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனை பற்றிய கருத்து,அல்லது சமயம்,அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு,எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன.நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும்,ஆண்டவனும் நாத்திகமும்,சாதியும் சமத்துவமும்,போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும்.இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது,மற்றது அதை எதிர்க்க தலை காட்டும்.எல்லோருக்கும் நன்றாக தெரியும் கேள்விகளுடன் தான் அறிவு வளர்ச்சி அடையும் என்று. "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்,பாயும் மீன்களில் படகினைக் கண்டான்,எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்....மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்,தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்,அது வேதன் விதி என்றோதுவான்,மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்..." இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான்.ஆமாம்,என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக்கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருது கிறார்கள் என்பதே! எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி,சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன
மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள்.இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்த தார்கள். கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம்.'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்,உருவம் இல்லா உண்மை அவன்.இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாக கூறினான்.இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார்.இந்த எல்லா சாஸ்திரங்களும்,வேதங்களும்,புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள்.பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது.பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில்,அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும்.பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்.'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது.எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது,ஏன் நாம் புனித நீராட வேண்டும்?ஆலயம் போகவேண்டும்?புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார்.கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார்.ஒரு பவுல்[Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்?போகும் வழியெல்லாம் ஆலயம்,போகும் வழியெல்லாம் மசூதி,போகும் வழியெல்லாம் குருக்கள்,எல்லா பாதையும் மூடி விட் டனவே??[the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது மற்றும் ஒரு பவுல் பாடல்:"இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொரு வனும் லாலனை கேட் டனர்.லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்?நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள்,சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என,ஆனால் நான் கேட் கிறேன் ,நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா?இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? '[Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது.சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப் படுகிறது[கி மு 700 to கி பி 300],எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்த தாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு,முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார்.அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார்.இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்.அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால்,அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால் எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்? அதே போல,"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ?காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ?மானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோ?கதிரோன் சிலரைக் காயே னென்னுமோ? ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே" என பிற் கால கபிலர் [கபிலர் அகவல்] கேட் கிறார்.

ஆண்டவனோ அல்லது சமயமோ ,எதற்க் காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை.ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை போதித்து.அதன் மூலம் எம்மை,எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும்."உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்...தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா "ஆனால்,இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை,எம்மை பிரிக்கிறது.சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல,அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன.சமயம் பழைமை நெறிவாத த்தையும் சகிப்பு தன்மை யின்மை யையும் எமக்கு கொண்டுவந்து இன்று மிக பெரிய பிரச்சனை கொடுக்கிறது.இதனால்,மத வெறியர்களை உண்டாக்கி,எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால் நாசம் பண்ணுகிறது.ஆகவே,எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும்,வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், வேறுபட்ட சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும்.எல்லா சமயங்களும் மனிதாபிமான த்தையே அறிவுறுத்தின.ஆகவே அதை அப்படியே பின்பற்ற லாமே?அமைதி எமக்குள்ளே தான் உண்டு.அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு.ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு.எனவே கடவுளே அன்பு,அன்பே கடவுள்,இதை அறிந்தால்,எமக்கு அது உள் அமைதி தரும்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே.வெறுப்பு,பொறாமை, பேராசை,ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாது?அன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே.அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது.ஆனால் சமயம் அப்படி அல்ல.இதை நாம் அறிய வேண்டும்.ஆகவே நாம் மனித நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]
பகுதி:02 தொடரும்
"THINK HUMAN [HUMANITY] FROM TODAY!"-:PART:01
Most, if not all of us are force fed the concept of god, religion, and the suspect practices that come with the package from the time we can walk.One must understand that Faith and disbelief, God and atheism, caste and equality are twin born foes[opponents]. When one is born, the other rises to challenge it. As every one knows,Knowledge progresses with questioning.What annoys and probably intrigues me is why all these so called believers take offence when their beliefs are questioned.Our so called Tamil siddhars too did the same thing,They challenged these so called believers with questions.A Siddha is a free thinker and a revolutionary who refuses to allow himself to be carried away by any religion or scripture or rituals. One Tamil Siddhas says: "A Siddha is one who has burnt the sastras". All the sastras, Vedas, Puranas, and the various religious sects turn humanity into conditioned
animals.Karai Siddhar draws a distinction between a Siddha and a non-Siddha by saying that a Siddha points to the path of the experience whereas a non-Siddha points to the path of scriptures.While poly-theism was an unquestioned canon of their time siddhars dared to speak of “One Indivisible God”. Siddhars like Siva Vakkiyaar have directly attacked the empty and meaningless rituals practised by the brahmins of their time.He raises a pertinent question: why should we go out to the sacred rivers, temples, mountains, etc.,when the threshold is in us.According to Sivavakkiyar a Siddha does not worship any deity in the temple. As a Baul sings: "the road to the Absolute is blocked by temples, mosques and the teachers and another Baul songs says :"Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion
look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? " .The Tamil Siddhas do not belong to any religion or samayam. "Samayam" in Tamil means "convention", "rule".Some of their ideologies are considered to have originated during the First Sangam period [700BC to 300AD],And formulating over a five hundred year period,between the 7th and the 11th centuries,but fully flowering only after the 12th century.siddhars[சித்தர்],Who lived outside the pale of society, asked blunt questions: ‘What is this mantra you mumble within your mouth going round and round a planted stone,offering it flowers? Can a planted stone talk when the Lord is within you? Can the pot and the spoon feel the taste of food cooked in them?”-Sivavakkiyar [“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..”--சிவவாக்கிய சித்தர்.].“Will the rains fall only for a few and exclude others? Will the winds discriminate against a few? Will the earth refuse to bear the weight of a few? And the sun refuse to shine on some?”["மாரி தான் சிலரை வரைந்துபெய்யுமோ?காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ?மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ?கதிரோன்சிலரைக் காயே னென்னுமோ?......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே"] asked a latter-day Kapilar in a famous " Akaval" poem [கபிலர் அகவல்]

It is a fact,God or Religions today no longer serve the purpose for
which they came into existence. The very basic theme of each religion was to teach, how to love each other and bring us closer to ourselves and to truth. Today the opposite is happening, Religions are not uniting but dividing us. Forget the differences from religion to religion, each now has so many divisions. The biggest problem Religions are bringing in is Fundamentalism and in-tolerance, giving birth to Fanatics, who are ready to destroy our freedom, just in the name of religion.It is about time, to rectify our vision, rectify our way of life, and mould them to what the various religions originally desired. Humanity is the religion which all religions preach, so why not follow it as such .Peace is within us, Love is within us, God is within us. That means, God is Love, Love is God, and the understanding of this truth gives us that internal Peace.When a child is born, the only thing he/she knows is love. The rest we teach, hatred, jealousy, greed, even terrorism.As we sow, so shall we reap, this is the age-old saying, So why not sow seeds of Love and reap tons of Love !Love is not something which can be given by force, but Religions as they stand today are given by force, by parents to children. Anything given by force can never have fruitful results and can turn us into completely different people, and take us miles away from truth and Humanity.So let’s embrace Humanity and begin a new way of life!

Part:02 Will follow
(In Tamil-tomorrow)
குழந்தைகளின் கேள்விகளுக்கு.....
சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.
ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை" என எண்ண வைத்துவிடும்.
"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.]
குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு.
ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும்.
ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும்.
அதற்கு பல காரணங்கள் உண்டு.
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது:
நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். இதில் நாம் சந்தோசப்பட வேண்டிய விசயம், நம் குழந்தை விடை கிடைக்கும் வரை எவ்வளவு தூரம் போராடுகிறது என்பது?. எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்,
முறை.1: பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால், "அம்மா, முக்கிய வேலையாக இருக்கிறேன், வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்" என்று சொல்லுங்கள்.
காரணம்: சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன், ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். அப்பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
முறை.2. சுருக்கமாக ஒரு பதிலை சொல்லிவிடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலை கொடுத்துவிடலாம். ஆனால் வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம் பிடிக்கலாம்.
முறை.3. வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.
சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.
ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை" என எண்ண வைத்துவிடும்.
"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
பதில் தெரியாத இடத்தில் "தெரியாது" என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.
முறை.1. "அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்" என்று கூறலாம்.
பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.
முறை. 2. "இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்" என்று சொல்லலாம்.
பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.
முறை.3. குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், "நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்" எனலாம்.
பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.
முறை.4.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து "இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது" எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து "இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா" என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.
ஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/தொடர்-01
நடந்து முடிந்த ஈழ யுத்தத்தில் கொலை, கற்பழிப்பு, சித்திரைவதை, கடத்தல் ,காணாமல் ஆக்கப்படடமை எனபல சொல்லொணா துன்பங்களை சந்தித்தவர்கள் தமிழினம். அவர்களுள் ஒருவராக தான் அனுபவித்தமைகளை எம் முன்னே நூல் வடிவில் கொண்டு வருகிறார் கலைஞர் திவ்வியராஜன்.அவற்றுள் சில பக்கங்கள்.;-
நூல் : ''மாறிய நாட்களும்,மாறாத சூரியனும்''
ஆசிரியர்:வை.திவ்வியராஜன்
...................ஆறாத வலிகள் :செவ்வாய் தொடரும்......................
திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்
திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் ,கணப் பொருத்தம் ,மகேந்திரப் பொருத்தம் ,ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் ,யோனிப் பொருத்தம் ,ராசிப் பொருத்தம் ,ராசி அதிபதி பொருத்தம் ,வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ,வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கை நிகழ்வான கோள்களை வைத்துப் பார்க்கிறான். யாரை வைத்துப் பார்க்க வேண்டுமோ அதை மறந்து விடுகிறான்.அந்த ஆண்-பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய மனப் பொருத்தத்தையோ, அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டிய பொருத்தங்களையோ,அவர்கள் ஒன்றாக வாழ்க்கை நடத்த உதவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் சொந்த பந்தம் போன்றவற்றை மதிக்கும் இயல்புகளையோ பொதுவாக பார்ப்பதில்லை.மூல நட்சத்திரம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகிய இந்நான்கு நட்சத் திரத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்யப் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணம் செய்யும் பையனின் தந்தைக்குக் கேடு.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் பையனின் தாயாருக்குக் கேடு.இப்படி பல கூறுகின்றனர்.எனினும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அதாவது நட்சத்திரத்தன்று பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் குறை ஏற்படும் என்பதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. பண்டைய சங்க காலத்தில் இப்படியாக பொருத்தங்கள் பார்த்ததாக எந்த குறிப்பும் இல்லை.இப்படி ஆண்-பெண் இருவர் சேருவதை திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர்
குறிப்பிடுவர்.உதாரணமாக, நாலடியார் கல்யாணம் (பாடல் 86:பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணஞ் செய்து கடிப்புக்க.... ) என்கிறது. ஆசாரக் கோவை (பாடல் 48:கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று...) கலியாணம் [வடமொழி] என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232:நேர் இறை முன் கை பற்றி நுமர் தர நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்...) மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61:..நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே.) என்கிறது.தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி,வரைவு,வதுவை என்றும் குறிப்பிடுகிறது.என்றாலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப் பியரும் பத்து பொருத்தங்களைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் அவர் கூறும் பொருத்தங்கள் அறிவு பூர்வமானவை.
"நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்."
தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது.ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும் ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது.எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில்
முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும்.அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்.அவர்களுக்கு ஒரு பொது நம்பிக்கை வேண்டும் அது எழுமலையானகாவோ அல்லது வேறு ஒன்றாகவோ இருக்கலாம்.நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்ற இயற்கையை ஐம்பெரும் பூதம் என்கின்றனர் முன்னோர்.ஆகவே இது உலகின் முன்னிலையில் என நாம் கருதலாம்.மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் அல்லது காமம் துய்த்து வீடுபேறடைதல் என கொள்ளலாம்.திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம்.ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே.உண்மையான அன்பிற்கு ஏது எல்லை. எல்லை கடந்த அன்பின் ஆழத்தில் தானே காதல் இன்பமும் இருக்கின்றது.இதை குறுந்தொகைப்பாடல் ஒன்று "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று,நீரினும் ஆர்அள வின்றே - சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு,பெருந்தேன் இளைக்கும் நாடெனொடு நட்பே" என்கிறது.அன்பு வயப்பட்ட காதலர்கள் இருவரும் இதயத்தால் ஒன்றுபடுகின்றனர். இந்த இதயப்பிணைப்பு எப்படி இருக்கிறது தெரியுமா? 'செம்புலப் பெயல் நீர்போல' இருக்கிறதாம் இன்னும் ஒரு குறுந்தொகைப்பாடல்.
"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."

"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த, காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திருவென
முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே"
என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. ஒத்த பிறப்பும்[ஒத்த குடியில் பிறத்தல்], ஒத்த குடி ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும்[ஆண்மை என்பது இங்கு ஆண்தன்மையைக் குறிக்காது. ஆளும் தன்மையைக் குறிக்கும். குடியாண்மை எனப்படும். இது பெண்களுக்கும் உரிய பண்பே.], ஒத்த வயதும்[வயது ஒற்றுமை ], ஒத்த உருவும்[உருவழகு], ஒத்த
அன்பும்[இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக இருத்தல் வேண்டும்], ஒத்த நிறையும்[ கட்டுப்பாடு], ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்ற பத்துப் பண்புகளிலும் ஒத்தவர்களாக இருக்க வேண்டுமென் பது இதன் பொருள்.அதாவது,குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.

அன்பால் இணைந்த காதலர்கள் திருமணம் புரிந்து இல்லறத்திற்குள் நுழைகின்றனர்.திருமணம் முடிந்ததும் கணவனுக்குப் பிடித்தமான மோர்க் குழம்பு வைக்கிறாள் தலைவி.தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் கட்டித்தயிரை மெதுவாகப் பிசைகின்றாள். அப்போது கட்டியிருந்த பட்டாடை சட்டென்று நழுவுகின்றது. மற்றொரு கையாலே சரிசெய்து கொண்டு தாளிக்கின்றாள். தாளிக்கும் போது உண்டான புகை, 'கயல்' போன்ற அவளது விழிகளை கலங்க வைக்கின்றது. துடைத்துக் கொள்கிறாள். இப்படி ஆசையோடு சமைத்து முடிப்பதற்குள்ளேயே வெளியில் சென்ற கணவன் வந்து விட்டான். முகத்திலும், ஆடையிலும் அழுக்கு அப்பியிருக்கின்றது. உணவைப் பரிமாறுகிறாள். அவனும் அவளது புறத்தோற்றத்தைக் கண்டு வெறுக்காமல் அகத்தின் அன்பினை நினைத்து இனிது, இனிது என்று பாராட்டிக் கொண்டே சாப்பிடுகிறான்.அந்தப் பாராட்டைப் பெற வேண்டும் என்று தானே அவள் இப்படி விரும்பிச் சமைத்தாள். இந்த இனிய இல்லறக் காட்சியினை தருகிறது இன்னும் ஒரு சங்க பாடல் :
'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம்
கழாஅது உடிஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்து இட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!'
இன்று திருமணம் முடிக்கும் மணமக்களுக்கு இதைவிட அறிவுரை சொல்ல வேறு ஏதேனும் இருக்கமுடியுமா. இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும்,கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை.மேலே கூறியவாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர்,பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் -தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது.கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன்.கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!!
_:-கந்தையா தில்லை விநாயகம் பிள்ளை.
Subscribe to:
Posts (Atom)