திலகம் இட்டு
மங்கையர் வலம் வந்து
தீபம் கொளுத்தி
ராவணன் எரித்து
வேங்கையர் துள்ளி ஆடி
தீய சொற்களால்
சீதைக்கு எய்தவனை
நங்கையர் மூக்கு அறுத்தவனை
மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!"
"தீர மிக்க
வாலியை வஞ்சித்து
தீவின் சிறையில்
நிமிர்ந்து நின்றவளை
இரக்கமின்றி
தீயில் இறக்கியவனை
தீதோ நன்றோ
ஒன்றாய் வாழ்ந்தவளை
இரக்கமற்று
காடு அனுப்பியவனை
தீபம் ஏற்றி
'ராம-சீதை'யாக வாழ
உரத்த குரலில் தொழுகின்றனர்!!"
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment