.
சிலுவையில் நீ நின்றாய்
அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன்
சிலகாசுக்கு விலை போனான்
அன்று முளைத்த இந்த வஞ்சகன்
சிறிதாய் பெரிதாய் வளர்ந்து
இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான்
சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!
சிலுவையை தோலில் சுமந்தனர்
அன்னை பூமி முழுவதும் உன்
சிந்தனையில் வழி காட்டினர்
அன்று கண்ட மனித நேயம்
சிறிதாய் பெரிதாய் வளர்ந்து
இன்று நாம் உரிமையாய் வாழ
சிலுவையில் எம்மை அறைகிறோம் !!
உன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம்
சிலுவையின் பெருமை உணர்ந்தோம்
அன்னை வாள் தந்து அனுப்பும்
சிறந்த பண்பு கண்டோம்
அன்று நம்பி மோசம் போனதால்
சிதைந்து மதிப்பு இழந்தோம்
இன்று படும் துயரம் போக்க
சிலுவையை மீண்டும் சுமப்போம்!!!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.
No comments:
Post a Comment