இந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:

சங்க காலத்தின் பின் இந்து சமயக் கோயில்களில் பிற சிற்பங்கள் இடம் பெறுவது போல் பாலியல் சிற்பங்களும் இடம் பெறுகின்றன.இச் சிற்பங்கள் பெரும்பாலும் கோபுரம், விமானம், தூண்களின் சதுரப் பகுதி போன்ற இடங்களில் இடம் பெறுகின்றன.அதே போல, கோயிலில் காம நிலைகளில் கடவுள் சிற்பங்களும் வடிமைக்கப்படுள்ளன. தமிழிலக்கியத்தில் காதல், களவு, காமம் ஆகியவை சிறப்பாக கூறப்பட்டுள்ளன. 1800 ஆம் ஆண்டுக்கு பின்னரே ஆண்களும் பெண்களும் மேற்சட்டை அணியும் வழக்கம் தமிழ்ச் சூழலில் பொதுவாக ஏற்பட்டது.முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர்.தமிழர் வரலாற்றில் பெண்ணுக்கு கண்டிப்பான கற்பு, குடும்பம் போன்ற ஒழுக்க விதிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆண்களுக்கு அப்படி இருக்கவில்லை. எனினும் பாலியலை இயற்கையான தூண்டுதலாக தமிழர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பது எட்டுத் தொகையையும், பத்துப்பாட்டையும் வாசிக்கும்போது புரிகிறது. அதனை தீயது, பாவம், அசிங்கம் என்று ஒதுக்கும் போக்கு அன்று இருக்க வில்லை. உதாரணமாக,குறுந்தொகை 39 இல் தலைவனின் பிரிவால் எப்படி தலைவியின் மனநிலை இருந்தது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. என் நெஞ்சில் தலை வைத்து உறங்க தலைவன் மறுத்து சென்றான் என்று சொல்லாமல்,என் குளிர்ச்சி நிறைந்த முலைகளுக்கு இடையில் உறங்க மறுத்து,தொழிலை விரும்பி,என் தலைவன் பிரிந்து சென்றான் என்கிறாள்.
"வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே."-குறுந்தொகை 39
சங்க காலத்தில் தமிழ் நாட்டிலே கட்டப்பட்டிருந்த சில கட் டிடங்களைப் பற்றிய குறிப்புக்களும் வர்ணனைகளும் இலக்கிய ஆதாரங்களிலே கிடைக்கின்றன. கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட பட்டினப்பாலை,சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் கட் டிடங்களைப் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. அத்துடன்,அதற்கு முன்னைய அகம், புறம் கூறும் பெரும்பாலன சங்க இலக்கிய செய்யுள்களில் நடுகல் கோயில்களை பற்றிய செய்திகள் வருகின்றன. இவற்றின் உதவி கொண்டு தமிழ் நாட்டின் கட் டிடங்கள் பற்றி சில தகவல்களைப் பெற முடிந்தாலும் கட் டிடங்களின் பாணி பற்றி தெளிவாக வரையறுத்துக் கூறமுடியாதுள்ளது. இவை செங்கல், மரம், ஓடு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டப்பட்டனவென்று பொதுவாக கூறப்படுகின்றது.
பரிபாடலில் (10:43-48) மதுரையில் இருந்த மாடம் ஒன்றினையும் அதில் இருந்த சிற்பங்களையும் பற்றியும் விளக்கப் பட்டுள்ளது.அதாவது, மாட மதுரை நகரப் பெருந்தெரு ஒன்றில் சில நிலைகளையுடைய அழகிய மாடம் ஒன்று இருந்தது. அந்த மாடத்தில் பல உருவங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அவற்றில் வேங்கைப் புலி யுருவம் மிகச் சிறந்த அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தமையால் அது உயிருள்ள வேங்கை உருவம் போலவே பொலிவுடன் தோன்றியது. அவ்வழியே சென்ற ஒரு பெண் யானை அந்த உருவத்தை மெய்யான வேங்கை என்று நினைத்து அச்சமடைந்து பாகனுக்கும் அடங்காமல் அலையத் தொடங்கியதாம்.
"நடத்த நடவாது நிற்ப மடப் பிடி
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல்
செல் மனம் மால் உறுப்ப சென்று எழில் மாடத்துக் 45
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று
மை புரை மடப் பிடி மட நல்லார் விதிர்ப்புற
செய் தொழில் கொள்ளாதுமதி செத்துச் சிதைதர"-பரிபாடல் 10:43-48
மேலும் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சிற்ப உருவங்கள் அமைக்கப் பட்டிருப்பதை, இந்திர விழாவின் போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனராம். இதனை மணிமேகலை,
"வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியங் கண்டு நிற்குநரும்"
(மலர்வனம் புக்க காதை - 126-131) --என்று கூறுகிறது.
சங்க காலத்திலும். சங்கமருவிய காலத்திலும் கிராமிய மட்டத்திலான ஆலயங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. தெய்வங்களுக்குரியனவாக அவ்வாலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையை முற்றுமுழுதான மாறதலுக்குள்ளாக்கியவர்கள் பல்லவராவார்.இவர்கள் கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து நின்று ஆட்சி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரையில் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த கட் டிடக் கலைமரபிற்கு பதிலாக ஆகம கலைமரபை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.ஆகமங்கள் என்பவை, கோயில் நடைமுறைகளைப் பற்றிக் கூறும் விதிமுறைகளைக் கொண்ட நூல்கள். கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், குட முழுக்கு எப்படி நடைபெற வேண்டும், பூசைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற தகவல்கள் ஆகமங்களில் இடம் பெற்றுள்ளன. அதிலும், சிவன் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு, வைணவக் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு ஆகும் . அந்த ஆகம விதிகளுக்கு அமைவாக கோயில் கட் டிடங்களை ஆக்கினர். அந்த வகையில் கற்பக்கிரகம், அந்தராளம் [அந்தராள மண்டபம்], முன் மண்டபம், மகா மண்டபம், கொடி மண்டபம். சுற்றுப் பிரகாரம், சுற்றுப் பிரகார தெய்வங்கள், விமானம், கோபுரங்கள் உள்ளிட்ட கட் டிட நிலைகளை அமைக்க ஆகம முறைகளைப் பயன்படுத்தினர்.வட இந்தியாவைப் போன்றே, தமிழகத்திலும் பல்லவ, பாண்டிய, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கோயில் வாயிலின் நிலைகளின் மேற்பகுதியில் சிற்பங்கள் அமைக்கும் வழக்கம் பின்பற்றப் பட்டது. இதற்கான கருத்துகளைப் புராணங்களி லிருந்தும், இராமாயணம்,  மகாபாரதம் ஆகியவற்றிலிருந்தும் எடுத்துக் கொண்டனர். உதாரணமாக வைணவக் கோயில் கதவுகளில் மேல் தட்டில் விஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களும், கணபதி சிற்பமும் உள்ளன. அடுத்த தட்டில் இராமாயணச் சிற்பங்கள் தொடர்ச்சியுடைய கதை நிகழ்ச்சி களாகவோ, அல்லது குறுக்கு வெட்டு அமைப்பிலோ செதுக்கப் பட்டிருக்கின்றன. இதற்குக் கீழே மகாபாரதச் சிற்பங்கள் இதே அடிப்படையில் அமைந்துள்ளன. அதற்கும் கீழ்த்தட்டில் பாலியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.இங்கே ஒன்றை கவனியுங்கள். இன்று பாலியல் வார மாத இதழ்களை கடைகளில் மேல் தட்டில் வைப்பதே வழக்கம்.இதற்கு மாறாக கீழ்த்தட்டில் பாலியல் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.இதன் நோக்கம் யாதோ?
கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது.இதன் மூலம் என்ன 
தெரிவிக்கிறார்கள்?  கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும்? எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும்?.ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா? அப்பிடி இருந்தாலும்,ரெண்டு பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள்,அது எதை விளக்க வருது?இப்படி, கோவில்கள் மற்றும் புராணங்கள், இதிகாசங்கள் என அனைத்திலும் பாலியல் தொடர்பான கதைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருக்கின்றன. பாலியல் சிற்பங்கள் ஏன் அமைக்கப்படுகின்றன? என்பதற்கு சில காரணங்கள் கூறப்பட்டுள்ளன .அவை பின்வருமாறு:
கோயிலின் விமானம் மற்றும் கோபுரம் ஆகிய பகுதியில் திருஷ்டிபடாமலிருப்பதற்காக அமைக்கப்படுகின்றன.
கோயில்களில் இடம் பெறும் சிற்பங்கள் பெரும்பாலும் புராண, இதிகாசச் சிற்பங்கள் மற்றும் மனித வாழ்வில் நிகழக்கூடிய இயற்கையான நிகழ்வுகளும் என்பதால். மனித வாழ்வில் ஓர் அங்கமாக விளங்கும் பாலியலைத் தவறாகவோ புனிதமற்றதென்றோ கருத வேண்டிய தில்லை.எனவே இத்தகு பாலியல் சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
ஆரியர்கள் தந்த ஆகமங்களில் இத்தகு பாலியல் சிற்பங்களைக் கோபுரம் மற்றும் விமானங்களில் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் இவை கோயில்களில் அமைக்கப் பட்டு இருக்கின்றன.
மனிதன் கோயிலுக்குள் செல்லும் பொழுது மனத்தைக் கண்டபடி ஓடவிடாது அடக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகு பாலியல் சிற்பங்கள் கோயில்களில் இடம் பெறுகின்றன.
மனித வாழ்வில் பாலியலும் ஒரு பகுதியாக இருப்பதால் இனப் பெருக்கத்தின் அவசியம் காரணமாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
இந்து சமயம் சார்ந்த சில புராணங்கள் இந்தப் பாலியல் தொடர்புடையதாக உள்ளன.மேலும் “யோனி வணக்கம்” (Yoni cult) பழங்காலம் முதல் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழிபாடு மக்கள்தொகை பெருக்கம் அல்லது மனிதன் பிறந்து வந்த வழியை நினைத்து நன்றி கூறுவதற்காக என்று தொடங்கி யிருக்கலாம்.
கோயில்களில் இடம் பெறும் பாலியல் தொடர்பான சிற்பங்கள் அழகுணர்ச்சியைத் தூண்டும்படியாக அமையாமல் அருவருக்கத்தக்க வகையிலேயும் அமைந்துள்ளன. இவற்றை இடம் பெறச் செய்தது அரசன் என்பதை விட சிற்பியின் படைப்பாற்றலுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது பாலியல் சிற்பங்களை அமைக்கும் சிற்பியின் மிஞ்சிய பாலியல் உணர்வுகளுக்கான வடிகாலாக இருக்கலாம்.
குழந்தை வரம் வேண்டிக் கோயிலுக்குச் செல்லும் தம்பதியினருக்கு இத்தகு சிற்பங்கள் தாம்பத்யத்திற்கு ஒரு தூண்டுகோலாகவும் அமையுமென்பதால் இத்தகு சிற்பங்கள் இடம் பெற்றிருக்கலாம்
பாலியல் தொடர்பான செய்திகளை மக்கள் தெளிவாக அறிந்து அதன்படி இன்பமடைய பிற தகவல் தொடர்புச் சாதனங்களோ இல்லை என்பதால் மக்களுக்கு பாலியல் தொடர்பான அறிவை புகட்ட கஜீராஹோ பகுதியில் உள்ள பல கோயில்களில் இத்தகு பாலியல் சிற்பங்கள் பெருமளவில் இடம் பெற்றிருக்கலாம் .
.
ஆலயத்தின் வெளிபகுதியில் (உள்வீதியில்) இந்த சிலைகள் அமைந்து இருக்கும், அதாவது போகம், யோகம்.. என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள்... போகியாக இருக்கும் மனிதன் யோகத்தை அடையும் வழியை ஆலயம் சொல்கிறது.. அதில் சிற்றின்ப சுகங்களை கடந்து பேரின்பமாகிய யோகத்துக்குள் புகுதல்(ஆலயத்துக்குள்) என்பதை அர்த்த படுத்துகிறது...
மற்ற மதங்கள் எல்லாம் கலவியை இறைக்கு அப்பாற்பட்டே பார்க்கின்றன.பிராமண இந்து மதம் மட்டும் தான் அதையும் இறையோடு சேர்த்தது. கடவுளுக்கு உருவம் கொடுத்து அவருக்கு திருமணமும் செய்து வைத்தது. பழைமையான கோயில் கோபுரங்களை நன்றாக உற்று நோக்குங்கள். அங்கே கலவி பாடமாக சிற்பங்கள் இருக்கும். ஆயிரமாயிரம் சிலைகளினுள்ளே அதை தேடுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் படியாய் செய்திருப்பார்கள்.பெரும் வணிகராய் இருந்தவர் பட்டினத்தார்."காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே” என்ற ஒரு வாக்கியம் அவரை பெரும் யோகி ஆக்கியது.அதன் பின்னர் அவர் பெண் இன்பத்தை வெறுத்து பாடியதில் ஒரு துண்டு ஒன்றை கிழே தருகிறேன்
"நித்தம் பிறந்த இடத்தை நாடுதே
பேதை மட நெஞ்சம் - கறந்த 
இடத்தை நாடுதே கண்!"
கோவில் பிராகாரங்களில், தூண்களில், கோபுரங்களில் சில உடலுறவுச் சிற்பங்கள் சிறிய அளவு இருக்கும். தேடுவோர் கண்களுக்கு மட்டும் தெரியும் ஆனால் பலர் இதைக் கண்டு கொள்வதே இல்லை?சமயம் என்பது மனிதனை நல் வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆலயத்துக்கு வரும் பத்தரின் உணர்வுகளை தூண்ட வைக்கும் இப்படியான கடவுள் சிலைகளை வைப்பது சரியாக எனக்கு தோன்றவில்லை.ஆண்டவனை வழிபட என அமைக்கப்படும் ஆலயங்களில் இப்படியான சிற்பங்கள் திணிப்பது நியாயமானதா? மேலும் தொன்மையான தமிழ் இலக்கியங்கள் எதுவும் பெண்களை இப்படிச் சித்தரிக்கவில்லையே! வடமொழி இந்து மதப் புராணங்கள்தானே பெண்களை இப்படிச் சித்தரிக்கிறது.தமிழுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதிலிருந்தாவது விளங்குகிறதா?எமது சமயம் சைவம்.அது பிற்காலத்தில் பிராமண இந்து மாதத்திற்குள் உள்வாங்கப்பட்டு விட் டன .அதனால் தான் இந்த கேவலம்? சங்கத் தமிழ் இலக்கியங்கள் தமிழன் எழுதியவை. அங்கு எந்த இடத்திலாவது இப்படி உள்ளதா?ஆரிய பார்ப்பனர்கள் எழுதிய புராணங்களில் வன்புணர்வுகள்,பாலியல் பலாத்காரங்கள் மலிந்து கிடக்கின்றன. இப்பொழுது கட்டப்படும் ஆலயங்களில் கூட இவ் அலங்கோலங்கள் சிலவேளை அல்லது ஓரளவு தொடர்கின்றன. அவர்கள் அதை எதோ ஒரு புனிதம் என்று நினைத்து கண்மூடித் தனமாக பின்பற்றுகிறார்கள்.அவர்களால், இது திராவிடரின் பண்பாட்டை சிதைக்கிறது என்ற அறிவு, இன்னும் ஏற்படவில்லை. எனவே,முதலில் அவைகளை ப்பற்றிய "விழிப்புணர்வை" கொடுத்து உண்மையை அறிய செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் மூடிய கண்கள் திறக்கும் பட்சத்தில் அவர்களே அதை தூக்கி எறிவார்கள் என நான் திடமாக நம்புகிறேன்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


5 comments:

  1. இன்று பாலியல் வார மாத இதழ்களை கடைகளில் மேல் தட்டில் வைப்பதே வழக்கம்.இதற்கு மாறாக கீழ்த்தட்டில் பாலியல் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.இதன் நோக்கம் யாதோ?
    கோவில்கள் மற்றும் புராணங்கள், இதிகாசங்கள் என அனைத்திலும் பாலியல் தொடர்பான கதைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருக்கின்றன. பாலியல் சிற்பங்கள் ஏன் அமைக்கப்படுகின்றன? கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது.இதன் மூலம் என்ன
    தெரிவிக்கிறார்கள்? எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும்?.
    கருத்தாடல்:உங்கள் கேள்விகள் நியாயமானதுதான்.ஏன் நாம் அதிக தூரம் செல்ல தேவையில்லை;இலங்கையில் புலிகள்,மக்கள் அழிக்கப்பட்டு போராடடம் நசுக்கப்பட்ட்டபின் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கையினை உற்று நோக்குங்கள்.இளைய சமுதாயத்தின் உணர்வுகளை திசை திருப்பி தம் வசப்படுத்துவதற்கு ஆபாச வீடியோ க்களையும் ,போதை பொருட்களையும் தமிழர் மத்தியில் அறிமுகம் செய்து நாசம் விளைவிக்க ஆரம்பித்தனர்.அது தொடர்கிறது.ஆரியரின் வருகைக்கு முன் உண்மையான ஆன்மிகத்தில் திராவிடம்ஆழ்ந்து இருந்தது .ஒருவனின் பலவீனத்தினை அறிந்தால் அதனைப் பாவித்தே அவனை அடிமை கொள்ள முடியும்.
    ஆகவே ஆரியர் இறைவனை காட்டியே ஆபாசத்தினையும்,[அன்று இருந்த ஒரே வழி ஊடகம்]ஆபாச பொம்மைகளையும் தொடர்புபடுத்தி திராவிடரை அடிமைகொள்ளும் தந்திரத்தினை கொண்டிருக்கலாம்.மக்கள் கோவிலுக்கே அதிகம் வருவார்கள்.அங்கே ஆபாசங்களை பார்க்கும் விதத்தில் வைத்து அவர்கள் சிந்தையை வேறு திசையில் சிதறடித்து ஆரியர் தாம் விரும்பிய வல்லுறவு,பாலியல் ஆடசியினை தொடர்ந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. திருக்குறள்,திருமந்திரம் போன்ற நூல்கள் மனிதனுக்கு தேவையான பலவிடயங்களையும் எடுத்து சொல்லும்போது ஆலய சிற்பங்கள் மட்டும் ஆபாசங்களை மனிதனுக்கு விளக்குவதன் தீய நோக்கம் புரிகிறது.

      Delete
  2. தமிழனை நாசமாக்க எழுந்த பிற்கால தரங்கெட்ட திராவிட உணர்வு வெளிபாடே 1000 ஆண்டுகாலத்து கோயில் காமம் சிற்பங்கள் .

    ReplyDelete
  3. All this status are not in Tamil Nadu but in Madhya Pradesh

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் புராதன ஆலய தேர்கள்,கோபுரங்களில் இவற்றை இளவயதில் பார்த்து அருவருத்திருக்கிறோம். உதாரணமாக சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயம்

      Delete