உண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது நடந்த உண்மை சம்பவம்சி3’ படமாக தயாராகி உள்ளது’’ என்று நடிகர் சூர்யா கூறினார்.
 அவர் கூறியதாவது:–

சினிமா வாழ்க்கை
‘‘எனது சினிமா வாழ்க்கை 1997–ம் ஆண்டு ‘‘நேருக்கு நேர்’’ படத்தில் ஆரம்பித்தது. அப்போது சிங்கம் மாதிரி ஒரு அழுத்தமான அதிரடி கதையிலும் துரைசிங்கம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு நிறைய டைரக்டர்கள் என்னை ரசிகர்கள் விரும்புகிற மாதிரி நல்ல கதாபாத்திரங்கள் தந்து சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். ஒரே டைரக்டருடன் அதிக படங்களில் ஒரு கதாநாயகன் நடிப்பது இல்லை. பாலசந்தர், பாரதிராஜா காலங்களில் அது நடந்து இருக்கிறது.

ஆனால் நான் டைரக்டர் ஹரியுடன் 5 படங்களில் நடித்து விட்டேன். ஹரி படம் ஒவ்வொன்றும் வெகு ஜனங்கள் விரும்பும் படமாகவே இருக்கின்றன. அவரது இயக்கத்தில் நான் நடித்துள்ள ஆறு, சிங்கம் ஆகிய படங்கள் ரசிகர்கள் அனைவரையும் சென்று சேர்ந்து இருக்கிறது. சிங்கம் படத்தின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் பெரிய வெற்றி பெற்றன. மூன்றாம் பகுதியையும் எடுப்போம் என்று நினைக்கவில்லை. ஒருநாள் சிங்கம்3 படத்துக்கு நல்ல கரு கிடைத்து இருப்பதாக ஹரி என்னிடம் கதை சொன்னார். பிடித்துப் போனது. இப்போது படத்தையும் முடித்து விட்டோம்.

உண்மை சம்பவம்
 இந்த படத்தின் கதை விசாகப்பட்டினத்தில் நடப்பது போல் இருக்கும். தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதல்வர்களாக இருந்தபோது இரு மாநிலங்களுக்கும் தொடர்புள்ள ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்தது. அப்போது இரண்டு முதல்வர்களும் கலந்துபேசி அதன் அடிப்படையில் ஆந்திராவுக்கு உதவ தமிழகத்தில் இருந்து போலீஸ் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே சி3 என்ற பெயரில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது.

சிங்கம் படத்தில் இருந்த நடிகர்நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்த மூன்றாம் பாகத்திலும் இருக்கிறார்கள். முந்தைய இரண்டு படங்களையும் விட இதில் கூடுதலாக நிறைய விஷயங்களை சேர்த்து இருக்கிறோம். அனுஷ்காவுக்கும் எனக்கும் திருமணம் நடப்பதுபோன்றும் காட்சி உள்ளது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும்தானா சேர்ந்த கூட்டம்படத்தில் நடுத்தர வயதுள்ள இளைஞனாக வருகிறேன். அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிப்பதைவிட நல்ல கதையம்சம் உள்ள தரமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது.

ஜோதிகா
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு பதற்றத்தோடுதான் செல்கிறேன். டைரக்டர் நம் நடிப்புக்கு ரசிகனாக மாறவேண்டும். அப்போதுதான் நாம் சிறப்பான நடிப்பை கொடுத்ததாக அர்த்தம். ஜோதிகா நடிக்கும்மகளிர் மட்டும்படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. மொழி, காக்க காக்க, 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்கள் ஜோதிகாவுக்கு நல்ல படங்களாக அமைந்துள்ளன. அதுபோல்மகளிர்மட்டும்படமும் சிறப்பாக வந்துள்ளதாக ஜோதிகா என்னிடம் தெரிவித்தார்.

இவ்வாறு சூர்யா கூறினார்.

No comments:

Post a Comment