மனதில் ஊறட்டும் உற்சாகம் !


 1.சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை . சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான் . எனவே கன்ட்ரோல் நம்மிடம்தான் . எனவே ஆனந்தமாக இருக்க வேண்டுமா , வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டும் தான் .

2.வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாக கழிக்காதீர்கள். கொஞ்சம் இலகுவாகவும் நகைசுவையாகவும் அணுகுங்கள் அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள் . தினமும் இரண்டு , முன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள் . சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாக பரவும் .

3.உடற்பயிட்சியும் ஆரோகியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும் .உற்சாகமாக உணர்வீர்கள் . உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும்என்டோர்பின்களால் மனது புத்துணர்வு பெரும் என்கிறது மருத்துவ உலகம்.

4.வேலை , கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது , நன்றாக ஒரு குளியல் போடுவது ,இசை கேட்பது ….இப்படி ஏதாவாது உங்கள் மனதுக்கு பிடித்த ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் .அதேபோல் , தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சிதரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள் .

5.ஆனந்தம் என்பதுலக்அல்ல , நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள் .அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களை கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள் .

6.தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி கடலில் போடுங்கள் . ஏதேனும் தவறு , தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர ,,,,,,,,,,,,, நத்தை ஓட்டுக்குள் முடங்கி விடகூடாது

7.உங்கள் மனதை நீங்கள் தான் ற்சாகபடுத்தவேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணகங்கள், நல்ல நகைசுவை திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கிறார் ஆராச்சியாளர்கள் .

8.திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்க பழகுங்கள் . மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும் ,ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வைக்கும்.

9.புது இடங்களை பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்கையின் வழித்தடங்கள் . எனவே அவ்வப்போதுவெளியேசெல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இடங்கள் இதற்கான சிறந்த இடமாக இருக்கும் .

10.ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள் .

11.கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்கையின் ஒரு பாகமாக் ஏற்றுக்கொள்ளுங்கள் . காலம் கவலையை ஆற்றிவிடும்.

12.விருப்பமிருந்தால் ஒரு செல்லப்பிராணியை வளருங்கள் . அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள் . எதிர்பார்ப்பில்லாத அன்பு , அதனிடம் நிறையவே கிடைக்கும் !


13.தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காக காத்திருக்கிறது என்று விழித்து கொள்ளுங்கள் .இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள் . யாரையாவது காயபடுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவெடுங்கள்.
                                                    நன்றி :சுபா,ஆனந்தி.

0 comments:

Post a Comment