Ø அவன் கஷ்டத்து மத்தியிலும் கார் வாங்கினான்.வாங்கின காருக்கு காப்புறுதி கட்டக்கஷ்டப் படுகிறான்.சுகமான சவாரி விரும்பியா அவன் கார் வாங்கினான்?இல்லை.நாலு பேர் தன்னை உயர்வாக பார்க்கவேண்டும் என்பதற்காக!
Ø அவன் அடுத்தவர் வீட்டினை விடப் பெரிய வீடாய் கடன்பட்டு வாங்கினான்.பட்ட கடனை திருப்பிக் கட்டமுடியாமல் கஷ்டப் படுகிறான்.வசதியாக வாழவா வீட்டை வாங்கினான்?இல்லை பிறர் தன்னைப் பார்த்துப் புகழ வேண்டும் என்பதற்காக!
Ø அவள் அதிக பணம் கொடுத்து குதி உயர்ந்த செருப்பினை வாங்கினாள்.அதை அணிந்து சிரமப்பட்டு நடக்கின்றாள்.அதில் சௌகரியத்தினையா கண்டாள்?இல்லை.தன்னை உயரம் குறைந்த பெண்ணாக பிறர் பாராமலிருப்பத்தற்காக.
Ø ஒரு அலுவகத்திற்கு தொழில் புரியவரும் பெண் மிகவும் இறுக்கமான,குறுகிய ஆடைகளை அணிந்து வந்து கதிரையில் இருக்கும்போது மிகவும் சிரமப்படுகின்றாள்.தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை,பிறர் தன்னை நாகரிக மங்கையாக கருதவேண்டும் என்பதற்காக.. பிறருடைய பார்வையில் தான் குறைவாக தோன்றி விடக் கூடாது என்பதற்காக மனிதன் தேவையில்லாமல் அளவுக்கு மிஞ்சி எவ்வளவோ சிரமப் படுகின்றான் என்பதற்கு இவை சில உதாரணங்களே.
Ø குழந்தையுடன் தமிழில் பேசி வீதியில் நடந்துவரும் தாய் எதிரே ஒரு தமிழனைக் கண்டால் உடன் பேசும் மொழியைய் மாற்றி குழந்தையுடன் ஆங்கிலம் பேசி தனக்கும் அம்மொழி தெரியும் என அவனுக்கு காட்டிட சிரமப்ப டுகின்றாள்.
Ø குழந்தைகளோடு ஆங்கிலம் பேசும் பெரும் மனிதர்கள் மேடையில் ''தமிழரோடு தமிழில் உரையாடுவோம்,தமிழை அழிவிலிருந்து காப்போம் '' என்று பேசி பார்வையாளரின்நிறைந்த கைதட்டலை வாங்க சிரமப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment