அரியலூர்
அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.
பெயர்க்காரணம்
விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.
தனித்துவம்
இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.
மக்கள் வகை
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
அரியலூர் சிமெண்ட் ஆலைகள்
1.டான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.
2.ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT)கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்போது 3 மில்லியன் டன்(MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
3.டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்க்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY
EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
4.செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர்.
5.அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
6.இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR
SAKTHI) தளவை.
ஆனால் தோண்டப்படும் சுண்ணாம்பு காரணமாக உருவாகும் பாதாளக் கிடங்குகள் நிரப்பப்படாதவரை இவ் அருமையான ஊர் எதிர்காலத்தில் அழியாது வாழும் என்பது அவநம்பிக்கையினையே அளிக்கிறது.
No comments:
Post a Comment