ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2. ஓ
படம் முழுமையான 3 டி படமாக உருவாகிறது.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும்
படம் 2.ஓ. இந்தப் படத்தில்
ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து
வருகிறார். அக்ஷய் குமார் உள்ளிட்ட
3 வில்லன்கள் உள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் டெல்லி, சென்னை மற்றும் வெளிநாடுகளில் மாறி மாறி நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, வருகிற நவம்பர் 20-ந் தேதி இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சங்கர்-ரஜினி கூட்டணியில் அமைந்துள்ள படம் என்பதால் இப்படத்தில் கண்டிப்பாக பிரம்மாண்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரும் இப்படத்தில் வில்லனாக நடிப்பது படத்திற்கு மேலும் பலமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே, ரசிகர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் ‘2.ஓ’ டீசர் பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment