எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா?


விழுப்புரம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் திருச்சி – சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது.இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.

காராணை விழுப்பரையன் மடல் என்ற நூலை செயங்கொண்டார் இயற்றினார். இந்நூலில் குறிப்பிடப்படும் காராணை என்னும் ஊர் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர். காராணைக்காரனான ஆதிநாதன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதி. ஆதிநாதன் விழுப்பரையன் என்னும் குடிக்கு உரியவன். இவர்கள் விழுப்பாதரயன்,விழுப்பதரையர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரில்தான் இன்றைய விழுப்புரம் நகரம் பெயர் பெற்றுள்ளது.
விழுப்புரத்திற்கு விழிமா நகரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
                                                                                

0 comments:

Post a Comment