ஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா!



செல்வம் வழங்கும் இன்பத்தமிழ் மீது-நடிகா
உனக்கேன் இந்தக் கொலை வெறி,
தமிழில் இனிதாய்ப் பல்சுவை இருந்தும்-தமிழா
உனக்கேன் ஆங்கில மொழி வெறி !

 சுகம் பல பெற்றும் அடங்கா மனிதனாய் - தமிழா
உனக்கேன் இந்தப் பண வெறி,
மனிதனாய் பிறந்தும் மிருகமாய் வாழும் - அதூயா
உனக்கேன் இந்த அவா வெறி!

வசதிக்கெனப் பல்மனைதான் இருந்தும் - மகனே
உனக்கேன் இந்த ஆசை வெறி,
இருக்க இடமும், உணவும் உடையும் - இழக்கா
உனக்கேன் இந்தக் கருமி வெறி!

 பயணம் செய்யப் பல வண்டி இருந்தும் - சுகனே
உனக்கேன் இந்த அந்தஸ்து வெறி,
வண்டியோ வண்டிலோ உளம்தான் அளவே
உனக்கேன் இந்த மறதி வெறி!

அடுத்தான் உயந்தால் தடம் பிடித்திழுக்கும் - மனிதா
உனக்கேன் இந்தப் பொறாமை வெறி,
இழுத்தால் பணிய விழுவது நீயே -ஐயனே
உனக்கே இந்த அடாத்து வெறி!

 இறைவன் குளிரப் பல் பொருள் வழங்கும் -குலமே
உனக்கேன் இந்த மடை வெறி,
வழங்கும் அவைதான் இல்லோர் சேர்க்கா - மூர்க்கா
உனக்கேன் இந்தக் குல வெறி!

 பணம் பல இருந்தும் சீதனம் கேட்கும் - அப்பா
உனக்கேன் இந்தப் பொருள் வெறி,
சீதனம் பெருக்கி ஆதனம் சேர்க்கும் - மொக்கா
உனக்கேன் இந்த ஆசை வெறி!

 எவ்வளவிருந்தும் சில்லறை சேர்க்கும்- சனமே
உனக்கேன் இந்த அவா வெறி,
சேர்த்ததை தானும் செலவும் செய்யாக் - கருமியே
உனக்கேன் இந்த சொத்து வெறி!

துணைவியார் இருந்தும் பிறர் மனை தேடும் - புல்லா
உனக்கேன் இந்த மோக வெறி,
மனைவியே செல்வம் என்பது திண்ணம்- மனிதா
உனக்கேன் இந்தப் பித்த வெறி!

 இருந்திடும் ஒத்த மறந்திடும் சுற்றம் - ஐயனே
உனக்கேன் இந்த மோச வெறி,
சுற்றம் போனால் நித்தம் உலரும்- அவனே
உனக்கேன்  இந்த நடிப்பு வெறி!

வாழும் மனிதர் வாக்கினில் வளரும் மந்திரியே
உனக்கேன் இந்தக் கதிரைவெறி,
கதிரையைக் காக்க இனத்தையே கொல்லும்
உனக்கேன் இந்த இரத்தவெறி!!!...

…………………………………….ஆக்கம்:செல்லத்துரை சந்திரகாசன்



0 comments:

Post a Comment