நான் என்று சொல்லும் இந்த உடம்பு, இந்த நான் ஆவதற்கு முன்பு நீர், காற்று, மண் என்று பல அணுக்களாக இந்த உலகில் பல இடங்களில் இருந்திருக்கும்.அது தான் இப்போது நான்.
இந்த நான் வாழ்ந்த பிறகு மீண்டும் நீர், காற்று, மண் என பல அணுக்களாக இந்த உலகில் பல
இடங்களில் இந்த நான் சென்று கலந்துவிடும். இது இயற்கையின் சுழற்சி, இது தான் வழக்கை.
வாழ்க்கை
வாழ்வதற்கு தான் கஷ்டங்களை அனுபவிக்க அல்ல. [சிலரோ வலிந்து கஷ்டங்களை தேடி அதற்காகவே உழைத்து மடிகிறார்கள்] உண்ண உணவு, இருக்க இடம், இருக்க உடை இது
தான் வாழ்க்கைக்கு தேவை. இது நமக்கு முழுமையாக கிடைத்தால் நாம் வாழ்ந்ததாக பொருள்.
இந்த மூன்றையும் பெற நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். தேவையான அளவு, அதிகம், உழைத்தல்
நமக்கு கஷ்டம், குறைவாக உழைத்தல் சமுதாயத்திற்கு பாரம், அளவாக உழைத்தால் இருவருக்கும்
நன்று.இதை பெற பிறகு மரியாதை, மதிப்பு, பதவி, பாராட்டு என்று ஏதோ ஒரு இனம் புரியாத
இன்பத்துக்கு ஆசைப்பட்டு நான் என்ற வலையில் சிக்கி கொள்ள கூடாது.
இயற்கை
நமக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்ததும் நான் என்ற வலையில் நாம் சிக்கி கொண்டு கஷ்டமான,
துயரமான வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
நம்மை போல் இந்த பூமியில் நீராகவும், காற்றாகவும், மண்ணாகவும் கலக்க போகும் இவனிடம்
இருந்து நமக்கு எதற்கு பாராட்டு, பதவி, மதிப்பு, என்று எண்ணி அமைதியான உண்மையான வாழ்க்கையை
வாழ்வோம்.
நன்றி:விஜயகுமார்
0 comments:
Post a Comment