இந்தியாவிலே கடவுளின் எண்ணுக்கணக்கற்ற உயர் திரு அவதாரங்கள்,மறு பிறப்புகள், அருள் பொழியும் யோகிகள், அற்புதம் நிகழ்த்தும் சுவாமிகள், சக்திமிகு சித்தர்கள் என்று தோன்றி, அவர்களுக்கு பக்தர்கள் நாளாந்தம் பூசைகளும், வழிபாடுகள், பஜனைகளும் பாடி வணங்க,தொழுதோருக்கு ஆசிகள் பல வழங்கிக்கொண்டு இருக்கும் இந்தக் கடவுளுக்களுக்கு மத்தியில், சற்று வித்தியாசமானதாகத் தோற்றும் ஒரு மனிதர்தான் இந்த சத்குரு ஆவார்.
சத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ், இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில், ஒரு தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்து,தற்சமயம் தமிழ் நாட்டு கோயம்பத்தூரில் 'ஈஷா யோக மையம்' என்று ஒன்றை நிறுவி, சகல தர மக்களுக்கும் யோகா, தியானப் பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு யோகி அல்லது குருவாக இருப்பவர்.
இம்மையத்தின் கிளைகள் இந்தியா
மட்டுமல்லாதுஅமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, சீனா,நேபாளம், லெபனான், உகாண்டா எனப் பல நாடுகளில் நிறுவப்பட்டு,தியான வகுப்புகளுடன் வேறு பல சமுதாய மற்றும் சுற்றாடல் அபிவிருத்தித் திடட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன.
இம்மையத்தின் உயரிய செய்கைகளினால் ஈர்க்கப்படட ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூகப் பிரிவு இவரது மையத்தை தமது விஷேச ஆலோசகர் அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கின்றது..
இவர் தம் 12 ஆவது வயதிலே யோகாசனம்
பற்றிய தேடலை ஆரம்பித்தார்.மைசூரில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் மோடடார் சைக்கிளில் ஊர், ஊராய்ச் சுற்றினார். கோழிப்பண்ணை,செங்கட்டி சூளை, கட்டுமான வேலைகள் என்று பல வெற்றிகரமான தொழில்களில் ஈடுபடடாலும் ஆன்மிகத் துறையில்தான் அவரின் நாடடம். அதிகம் செல்ல ஆரம்பித்தது. இவர் மணமாகி மனைவியை இழந்தவர்.
பற்றிய தேடலை ஆரம்பித்தார்.மைசூரில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் மோடடார் சைக்கிளில் ஊர், ஊராய்ச் சுற்றினார். கோழிப்பண்ணை,செங்கட்டி சூளை, கட்டுமான வேலைகள் என்று பல வெற்றிகரமான தொழில்களில் ஈடுபடடாலும் ஆன்மிகத் துறையில்தான் அவரின் நாடடம். அதிகம் செல்ல ஆரம்பித்தது. இவர் மணமாகி மனைவியை இழந்தவர்.
இவரைப் பற்றி ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை திரும்பத் தருவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இவர் என்ன மாதிரி மற்றைய 'சுவாமி'மார்களிடம் வேறுபடுகின்றார் என்பதை பார்ப்பதுதான் எனது நோக்கம்.இது மேலெழுந்தவாரியாகப் பார்த்து அறிந்ததே! உள்ளே புகுந்து கிண்டிக் கிளறுவது என் எண்ணம் அல்ல!
* இவர் தன்னைச் சுவாமி என்று கூறிக்கொள்ளுவது இல்லை. இவர் ஓர் ஆன்மீகக் குருவாகவே தன்னைக் காட்டுகின்றார். தியானத்தின் பலன்களைப் பற்றி மக்களுக்கு எடுத்து விளக்குகின்றார்.
(நேரில் மையத்தில் சேர்ந்தால், அல்லது விசேட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்தால் பணம் செலுத்த வேண்டும்; என்றாலும், அவரின் காணொளிகள் பல இலவசமே!)
*இவரின் உடை மிகவும் எளிமையானதாக இருக்கும். வெறும் கதர் உடைபோலத் தோன்றும். மற்றைய பல சுவாமிகளைப் போல, பட்டுகள்,பதக்கங்கள், வெல்வேற்றுத் தலப்பாக்கள், கிரீடங்கள் என்று மேக்கப்புகள் ஒன்றும் இல்லை. (விலை கூடிய ஜீன்ஸ், உடைகள் என்றும் சொல்கின்றார்கள்; அப்படி என்றால் கோவணம் கட்டிடத்தான் சொல்கிறார்களோ தெரியாது)
*மிகப்பெரிய, விலை உயர்ந்த, அலங்கார, அரச சிம்மாசத்தில் உயர் மேடையில் இவர் உட்க்காருவது கிடையாது. வெறும் மரத்தால் செய்யப்படட வாங்கு, அல்லது வீட்டுச் சோபா நாற்காலியில்தான் உடகாருவார். பின்னால் வெறும் கல் சுவர்தான் தெரியும்; ஒருவித ஆடம்பர அலங்கோலங்களும் இருக்காது (ஈஷா மையத்தினுள் என்ன மாதிரியோ, அறிந்தவர் சொல்லவும்)
*அவரைப் பின்பற்றுவோர், அவருக்கு விளக்குக காட்டிப் பூசை செய்து,பஜனை பாடித் தொழுவது கிடையாது. அவர் அதை அனுமதிப்பதும் இல்லை; எதிர்பார்ப்பதும் இல்லை.
*ஒன்று, இரண்டு மொழிகள் மட்டும் தெரிந்த பல சுவாமிகளின் நடுவே இவர் பல மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றல் பெற்றுள்ளார்.
*இவரின் பேச்சில் அவசியமற்ற அலம்பல்கள், அலட்டல்கள் கிடையாது.எடுத்த விடயத்தை நறுக்காக விளங்கப்படுத்தி முடிப்பதில் வல்லவர்.
* இவரின் நகைச்சுவைகளுடன் கூடிய சொற்பொழிவு பலரையும் கவரும்.
* இவரது பேச்சில் கூடிய அறிவியல் காணப்படும். கண்ணை மூடிக்கொண்டு, விளக்கமே இல்லாமல் எதையும் நம்பு என்று கூறாது,எவர் என்ன கேடடாலும் அறிவியலுடன் கூடிய விளக்கம் கூறுவதில் வல்லவர்.
கடந்த 30 ஆண்டுகளாக மனித நல்வாழ்விற்காக பாடுபட்டு வரும் ஈஷா அறக்கட்டளை, சமத்துவத்தையும் நல்வாழ்வையும் வளர்ச்சியையும் கொண்டு வருவதில் நாட்டம் கொண்ட ஒரு நிறுவனம். பல சமூகநலத் திட்டங்கள், சுற்றுப்புறச் சூழலுக்கான திட்டங்கள், பசுமைப் புரட்சித் திட்ட்ங்கள், இலவச மருத்துவம், சுகாதாரம், விளையாட்டு, என்பன மூலம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி,நல்வாழ்விற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் ஒருங்கே ஈஷா யோக மையம் வழங்குகிறது.
என்றாலும், இடைக்கிடை சில விரக்தியாளர்களால் இவரைப் பற்றி குற்றங்களும் சுமத்தப்படுகின்றன.
இரு மகள்களையும் ஈஷா யோகா மையத்தினர் மூளை சலவை செய்து,சிறை வைத்துள்ளனர் அவர்களை மீட்டுத் தாருங்கள் என்று ஒரு தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவினை ஆராய்ந்த நீதி மன்றம், அது பொய்யானது, அவர்கள் சொந்த விருப்பிலேயே இருக்கின்றார்கள் என்று மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
தன் பிள்ளைகளை கழிப்பறை கழுவ விடடார்கள் என்று இன்னொரு தகப்பன் முறையிட்டார்..அவர் வீட்டில் மட்டும் யார் கழுவுவார்களோ தெரியாது! பிள்ளைகள் என்றால் எல்லாம் பழகுவதுதான் அவர்கள் வாழ்க்கைக்கு உகந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாமே!
சதகுரு அவர்கள் தனது மனைவி இறக்கக் காரணமாய் இருந்தார்; அதன் காரணமாகத்தான் பெற்றோர் வரமுதலே பூத உடலைத் தகனம் செய்தார் என்றும் நிறுவ முடியாத குற்றச்சாட்டும் இருந்தது.
எது எப்படி இருந்தாலும், சத்குருவின் உலக மக்களுக்கான சேவை அளப்பரியது என்றுதான் சொல்லவேண்டும்.
இதுவரை, பணப் பதுக்கல், போதைப் பொருள் மயக்கம், காம லீலைகள் என்று ஒன்றுமே நடவாது இருக்கும் ஒரு மையமாகத் தொடர்ந்து இருந்துகொண்டு வருகிறது என்று அறியும்போது சத்குரு ஓர் உயர்ந்த மனிதர் என்று கூறுவதில் ஒரு மகிழ்ச்சியே!
என்பதாலேயே தீபமும் அவருடைய ஆரோக்கியமான எண்ணங்களை தனது பக்கங்களில் அவ்வப்போது வெளியிட்டு பெருமை கொண்டது.
ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன்
good
ReplyDelete