ஒரு கடையின் முன்பு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு பத்து வயது சிறுவனும் இருந்தான். ஒரு வழிபோக்கன் அங்கே வந்து என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது? என்று அங்கிருந்த அந்த சிறுவனிடம் கேட்டான்.
'என்னுடைய தந்தையும், இன்னொருத்தரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர்' என்றான் அவன்.
அந்த இருவரில் உன்னுடைய தந்தை யார்? என்றான் வழிபோக்கன்.
தந்தை யார் என்று தானே அவர்களிருவரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றான் அந்தச் சிறுவன். இம்மாதிரி இவ்வுலகிலுள்ள மதவாதிகள் பல நூற்றாண்டுகாலமாக சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
-வள்ளலார் குறிப்பிலிருந்து..
0 comments:
Post a Comment