உலகிலேயே தற்காலத்தில் பிரதானமாக அனுசரிக்கப்படும் சமயங்களில் சைவ சமயத்தினர் மட்டுமே ஆண் தெய்வங்களுக்கு ஈடாகப் பெண் தெய்வங்களுக்கும் சமனான அல்லது கூடுதலான சக்தியைக் கொடுத்து அவர்களை வழிபட்டு வருகின்றார்கள்.
ஆண் காரணம் இல்லாமலேயே விவாகரத்துச் செய்யலாம்; பெண் பள்ளிவாசல் செல்ல, வேலைசெய்யஅனுமதி இல்லை. வெளியில் தந்தை, கணவன் இன்றி செல்ல முடியாது. யூத நீதிமன்றத்தில் பெண் சாட்சி ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.சீக்கியமதத்தில் பெண்ணாய்ப் பிறந்தால் சொர்க்கம் போக இயலாது. பிற்காலத்தில், இயேசுவின் தாயார் என்பதால் மேரிக்குக் கட்டுப்படுத்தப்பட்ட வணக்கம் செலுத்தப் பட்டது.
சைவசமயத்தில், நிஜ வாழ்விலே பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவில்லை என்றாலும், பெண் கடவுளர்களுக்கு பெரும் சக்திதனைக் கொடுத்துள்ளனர். அவர்களாவன:
பராசக்தி:ஆதிபராசக்தி, உலக மகா சக்தி. சிவனின் துணைவியார். சிவனே முழு முதற் கடவுளானாலும் சக்தி இன்றேல் சிவனால் தனித்து இயங்க இயலாது.அண்டங்களின் இயக்கத்திற்கு எல்லாம் காரணமானவர்.
இலக்குமி: காக்கும் கடவுள் விஷ்ணுவின் துணைவி. செல்வம், பொருள் அள்ளி வழங்குபவர். இவரின் வழங்கல் நின்றால் விஷ்ணுவின் பராமரிப்பு வேலை ஸ்தம்பித்து விடும்.
சரஸ்வதி: கல்வி அறிவுக்குத் தெய்வம். படைத்தல் கடவுள் பிரமாவின் துணைவி. இவரின் அறிவு, கலை, விஞ்ஞானம், தொழில் நுட்பம் இல்லையேல் பிரமாஒருவெறும் மாதான்.
துர்க்கை:பெரும் கெட்ட சக்திகளை விரட்டி ஒழிக்கும் தெய்வம். பல ஆண்சக்திகளின்ஒருதிரண்டபலம்கொண்டவர்.
காளி:துர்க்கையின் தலையில் இருந்து தோன்றிய தெய்வம்.சாமர்த்தியத்தால் துர்க்கையையும் ஏமாற்றித்தப்பித்திருக்கும்எக்கொடியவரையும் துவம்சம் செய்யக்கூடிய அபார சக்தி கொண்டவர்.
ராதை: இலக்குமியின் அவதாரம்.செல்வம்,வெற்றிஅளிப்பவர்.
சீதை: இலக்குமியின் அவதாரம் நல்ல கணவர் வேண்டி வழிபடுவர்.
கண்ணகி: கற்புடை மாந்தர்இலட்சியத்தெய்வம்.
அர்த்த நாரீஸ்வரர்: எல்லாவாற்றிலும் மேலாக, சிவனும் சக்தியும் உடம்பினைச் சரி பாதியாகப் பகிர்ந்து கொள்ளுவது; அதுவும் முக்கியமான இருதயம் இயங்கிக்கொண்டு இருக்கும் இடப்பக்கத்தினைப்பெண்ணின்உறைவிடமாக்கியது,சைவசமயத்தில்பெண்ணுக்குவழங்கப்பட்டிருக்கும் உயரியஸ்தானத்தைப்பறை சாற்றுவதாக அமைகின்றது.
மேலும்,ஐரோப்பியஆண்கள்,பெண்தெய்வம் அற்றசமயங்களால்பெண்களைஇழிவுபடுத்தியதுபோதாதென்றுஅவர்கள் மொழியில் ஒன்றானஆங்கிலத்தின்உள்ளும்புகுந்துபெண்களை எவ்வாறு இம்சைப் படுத்துகிறார்கள் என்று பாருங்கள்!
fe - MALE
LAD - y
wo - MAN
s - HE
MR - s
MEN - ses
MEN - opause
பெண்ணுக்குள்ஆண்தான்மிஞ்சிநிக்கிறான். அத்தோடு மனித இனம் என்றாலே அது ஆணைத்தான் குறிக்கும் என்று hu - MANs என்று அழைத்துக் கொண்டான். பெண்கள் எல்லாம் sub - humans!
பெண் உரிமை,சமத்துவம் என்று பேசிவரும் வளர்ந்த நாடுகளில் கூட எல்லாமே அச்சலுகைகள் உதட்டளவிலும்,எழுத்துவடிவிலுமே அழகாக காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் எமது சமுதாயத்தில் இந்து சமயத்தில் ஆவது வழிபடும் தெய்வங்களாகவும்,அவர்கள் ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் மதிக்கப்படுகிறார்கள் என்பது பெருமைப்படவேண்டியதே!
.......ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்.
0 comments:
Post a Comment