கொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...?

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கொடி படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ். 
அரசியல் பின்னணியில் இப்படம் தயாராகியுள்ளது.
படத்தில் வரும் இரண்டு தனுஷ்களில் ஒருவர் அரசியல்வாதி. அதை சாக்காக வைத்துக் கொண்டு நிகழ்கால அரசியலை புட்டு புட்டு வைத்துவிட்டாராம் டைரக்டர் துரை செந்தில்குமார். 

 அந்த அரசியல்வாதி இருக்கிறார் அல்லவா? அவரை ஒரு கும்பல் கொலை செய்துவிடும். அந்த நேரத்தில் அதை கவனித்துவிடும் மற்றொரு தனுஷ், தானே அந்த அரசியல்வாதி போல வேஷம் போட்டுக் கொண்டு, அந்த அரசியல்வாதியின் கனவுகளை நிறைவேற்றுவாராம். இறுதியில் நான் அவனில்லை என்று சொல்லி சுபம் போடுவார்கள் போலிருக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷ் அப்பா - மகனாக நடித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

''கொடி''யில் த்ரிஷா அரசியல்வாதியாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
                                 



No comments:

Post a Comment