அன்று சனிக்கிழமை காலை பாடசாலை விடுமுறை ஆகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்தேன். பக்கத்து அறையில் வழக்கம் போல் பறுவதம்பாட்டி யும் அண்ணாமலைத் தாத்தாவும் ஏதோ தலைப்பில் விவாதித்துக் கொண்டிருந்ததை உணர்ந்து அந்த பக்கமாக என் காதுகளை நீட்டிக்கொண்டேன்.
''கேட்டியே பறுவதம், உவள் கமலம் நேற்று 2,3 கோவிலுக்கு போயிட்டு வந்தவளாம்.''
''ஏன் உப்பிடியும் ஏதன் நேர்த்திக்கடனே?''
''இல்லை, பறுவதம் முதல்ல ஒரு கோவிலு போக எண்டு தான் மேனைக் கேட்டாளாம். அப்ப முருகன் கோவிலுக்கு அவன் கூட்டிக் கொண்டு போனவனாம்.முருகன் கோவிலில கும்பிட்டு முடிய முருகன்ட தமையன் பிள்ளையார் கோவிப்பான் என்றுவிட்டு மேனைக் கேட்க அவனுக்கும் சின்னப்ப பயம் வந்திட்டுது போல .அப்ப அவன் பிள்ளையார் கோவிலுக்கும் கூட்டிக் கொண்டு போனவனாம்.''
''ஐயோ தேப்பன்,தாய் இருக்கினம்.அவை மட்டும் குறை நினைக்க மாட்டினமே''!! பாட்டியும் விடட பாடில்லை.
''ஓம் பறுவதம் . சிவன் கோவிலும் போய் தானாம் வந்தவை.''
பாட்டியின் சிரிப்பொலி அறையே அதிர்ந்தது.
''என்ன பறுவதம் உப்பிடி சிரிக்கிறாய்.''
''பின்ன என்ன.கடவுளிலை ஒரு நம்பிக்கை இல்லாமலெல்லே இப்பிடியெல்லாம் நடக்கினம். சினிமா படங்களில ஒரு ஊரின் தாதாக்களை பயந்து நடப்பது போல -கடவுளை தங்களை மாதிரி ஒரு பொல்லாத மனுஷனாய் நம்பியெல்லே பயப்பிடுகினம். .இவையெல்லாம் கடவுளில நம்பிக்கை இல்லாத நாஸ்திகர்.''
''அப்ப பறுவதம் இவையளை நாஸ்திகர் எண்டோ சொல்லுறாய்.''
''வேறென்ன.இவர்கள் கடவுளை நம்பாம தானே இப்பிடி அலையினம். நாஸ்திகர் எண்டு சொல்லுற என்ன!முடிவே அதுதான்.
பாட்டியின் சிந்தனைகளோடு அம்மாவின் வழமையான தேவாரம் ஆரம்பிக்கவே நானும் காலைக்கடன்களுக்காக எழுந்து விரைந்து நடந்தேன்.
ஆக்கம்:பேரன் செ .மனுவேந்தன்
அப்போ கடவுளு பயப்பிடாம பாவம் பழி எல்லாம் செய்யலாம் என்று சொல்லுறியாலோ?
ReplyDeleteஅப்படி நினைப்பது தான் அறியாமை. கடவுளை நம்பியவன் கோவிலிலும் கோழியை வெட்டிடமாடடான்.கடவுளை மனித உருவத்தில் காட்டியவன் மனிதன்.தன்னைப்போலவே கடவுளையும் பணம்,பொருள் பெண் ஆசைகள் கொண்டவனாக சித்திகரித்து கடவுளை கேவலப்படுத்தி தனம் சம்பாதித்துக் கொண்டவன் தன்னை ஆஸ்திகன் என்று போர்வை போர்த்திக்கொண்ட உண்மையான நாஸ்திகன்
ReplyDeleteஅப்போ நேர்த்திக்கடன் -அதற்கு என்ன சொல்கிறியர்கள்.
Deleteஅது அடுத்த திருட்டுத்தனம்.கடவுளே அனைத்தையும் படைத்தான் என்று சொல்கிறீ ர்கள்.பின்னர் அவன் படைத்ததை அவனுக்கே அளித்துவிட்டு நீங்கள் கொடுத்ததாக உலகெல்லாம் பறை போடுகிறீ ர்கள்.இது பெரிய அநியாயம்.
ReplyDelete