யோசி

..............................................................
bridal shower 
..................................... 
அக்காலத்தில் மேலை நாடுகளை இருந்த திருமண பெண்களுக்கான சீதனம்- பிரச்சனைகளில் இருந்து தடுத்து அப்பெண்ணை  வாழ வைப்பதற்காக உறவுகளும் நண்பர்களும் வழங்கும் கொடைகளுக்காக உருவாக்கிய விழாவே மணமகளுக்கான நீராட்டு வைபவம்.
1860 களில் பெல்ஜியம்,பிரேசில் போன்ற நாடுகளில் இவை தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது.16 ஆம் ,17 ஆம் நூற்ராண்டில் நெதர்லாந்திலும் இது நடைமுறையில் இருந்ததாக அறியப்படுகிறது.
இடைக்கால இங்கிலாந்தில் ,திருமணத்திற்கு முன்னர் மணமகள் விருந்தினரை விழாவுக்காக அழைத்து அதி கூடிய விலைகொண்ட மதுவினை அவர்களுக்கு விற்று பணமாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது.
1890 இல் அமெரிக்காவின் நகரப்பகுதிகளுக்கு பரவிய இம் மணமகள் மழை 1930 களில் அந்நாட்டின் கிராமப் புறங்களிலும் பொழியத் தொடங்கியது.
அமெரிக்காவில் வாழ்ந்து பின் இந்தியா திரும்பிய  இந்தியர்களால் இவ்வழக்கம் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட்து. அவற்றினை திரைப்படமும்,தொலைக்காடசி நாடகங்களும் தமிழரிடம் இலகுவாகத் திணித்துக்கொண்டது.
இன்றய நவீன உலகில் அது பெரும் மாற்றங்களுடன் மணமகள் மழை பெருகிறது
....................................................................................
baby-shower
.....................................................................................
பண்டைய எகிப்தியர்கள் முதன் முதலில் கர்ப்பவதிகளுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும்  விழா எடுக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தனர்.எனினும் அவர்கள் [ baby-shower ]நீராட்டும் வைபவத்தினை கொண்டிருக்கவில்லை.
பண்டைய கிறிக் மக்கள் பிள்ளை பிறந்ததும் விழா எடுக்கும் வழக்கத்தினை கொண்டிருந்தனர்.
கர்ப்பவதி ஆவதுவும், குழந்தை பிறப்பதையும் விதித்திரமாக கருதிய அன்றய மக்கள் அதனை கொண்டாடி அத்தாயினையும்உற்சாகப்படுத்தி  மகிழ்ந்தனர்.
விக்ரோறியா காலமான 1837 – 1901 இல் விக்ரோறியன் மக்கள்உருவாக்கிய  நவீன சடங்கே குழந்தைகளுக்கான நீராட்டு வைபவம் [ baby-shower ]  ] ஆகும்.
நவீன வளைகாப்பு குழந்தை வளர்ச்சி சகாப்தத்தில் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய தொடங்கியது 
இருபத்தி ஓராம் நூற்றாண்டு: தொழில்நுட்ப வளர்ச்சி அதனை பல இன மக்களிடையேயும் பரவும் வழி செய்தது.
 இந்தியாவில் நுழைந்த இந்த வழக்கம் பின்னர் தொலைக்காடசி வழியாக தமிழரையும் தொற்றிக்கொண்டது.
....................................................

No comments:

Post a Comment