சிவகார்த்திகேயன்
நடிப்பில்
உருவாகி
வரும்
புதிய
படம்
‘ரெமோ’.
இப்படத்தில் இவருக்கு மீண்டும் ஜோடியாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் உள்ளிட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படத்தின்
படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் தொடங்கியுள்ள வேளையில், இப்படத்தின் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றி வரும் ரசூல் பூக்குட்டி இப்படத்தில் தன்னுடைய பங்களிப்பு குறித்து மாலைமலர்.காம் நேயர்களுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது
அவர்
கூறும்போது,
இந்திய
சினிமாக்களில் தமிழ் சினிமாவில் மட்டும்தான் சாதாரண ஒருவர்கூட படத்தில் ஹீரோவாக முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் சாதாரண ஒரு மனிதராக இருந்து இன்று பெரிய ஹீரோவாக உருவாகியிருக்கிறார். அவருக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இந்த படத்தில் நான் பணியாற்றியுள்ளேன்.
அதுமட்டுமில்லை.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பெண்ணாகவும் நடித்துள்ளார். பொதுவாக மற்ற படங்களில் பெண் கதாபாத்திரத்தில் ஒரு ஹீரோ நடித்தால், அவருக்கு ஒரு பெண்ணை வைத்து டப்பிங் செய்வார்கள். ஆனால், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தானே அந்த பெண் வேடத்துக்கு டப்பிங் செய்வதாக கூறினார்.
முதலில்
சிவகார்த்திகேயனை அந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய சொன்னதும், அவர் பெண் குரலில் மிமிக்ரி செய்து பேசினார். ஆனால், அது சரியாக வரவில்லை. எனவே, நான் அவரை சாதாரணமாக பேசுவதுபோல் பேசச் சொல்லி, அதன்பிறகு சில சாப்ட்வேர்களை வைத்து அந்த குரலை பெண் குரலாக மாற்றப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment