ஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் அன்புடன் வணக்கம்,

 பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
 மக்கட் பதடி யெனல்.-[திருக்குறள்]


அதாவது,பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும் என்று கூறுகிறார்  திருவள்ளுவர்.
ஏன்,வீட்டினில் அவசியமற்று இருப்பனவற்றை குப்பைத்தொட்டியில் தானே எறிகிறோம்.அதேவேளை கூட இருப்போரிடம் பயனற்ற விதத்தில் அலம்பி எமது நேரத்தினையும்,அறிவு வளர்ச்சியினையும் வீணடிக்கலாமா!
அதேபோலவே,மனித சமுதாயத்திற்கு அவசியமற்ற விடயங்களை ஊடகங்களும் தவிர்த்துக் கொள்வது இவ் இயந்திர உலகின் கட்டாய தேவையாகும்.
அதனை நாம் என்றும் கவனத்தில் கொண்டே எமது சஞ்சிகையினை தினசரி வெளியிட்டு வருகிறோம். அதற்கு ஆதரவு நல்கும் அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகள்..
please click 'like' on theebam magazine-thanks 


குழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….?

ஒரு குழந்தை பயப்படுகிறது என்றால், நாம் உடனே பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும்போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பெற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும்போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது.

மாறாக பெரியவர்களுக்கு பயந்து குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோபூச்சாண்டி வருகிறான்என்று பயமுறுத்தி பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல். ‘இவனுடன் பேசாதே‘, ‘அவனுடன் பழகாதேஎன்று கூறி வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்

உடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தைவிட அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள்.

பெரிய மீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டுமல்ல, பயத்தை போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.

பயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொள்வது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது.

மேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின் விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பஸ் விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த பாலம் இடிந்து நம் தலையில் விழுந்துவிடுமோ என்றெல்லாம் நிறையப் பேர் பயப்படுவதுண்டு.

இத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழகவிட வேண்டும். வீட்டுக்குள்ளே அடைத்துவைத்துவீடியோ கேம்ஸ்ஆட விடும்போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகமாகி விடுகிறது.


அதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பய குணம் தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள்.

காதல் கொண்டதால்...

ஆக்கம்:அகிலன்,தமிழன் 

‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி?

விஜய் தற்போது தனது 60-வது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘கத்திபடத்திற்கு காமெடி நடிகர் சதீஷும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜுலை 8-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், படக்குழு தரப்பிலிருந்து இதுவரை இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தனது எடையை 10 கிலோ வரை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படப்பிடிப்பில் விஜய் இன்னும் இளமையாக தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. முதன்முறையாக இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது