சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்!


திரைவானிலே முற்றிலும் குழந்தைகளே நடித்த சினிமாக்களும் உண்டு. குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்த சினிமாக் களும் உண்டு. இத்தகைய படங்கள், குழந்தைகளுக்கு நீதிபோதனைகளை போதிப்பது மட்டுமல்லாது, பெரியவர்களும் பயன் பெறும் படியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதும் உண்டு.
பக்திக்கும் குழந்தைகள் சினிமா பயன்பட்டது. இத்தகைய சினிமாக்களில் ஒரு சில படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

பாலயோகினி (1937)

பேபி சரோஜா
சரோஜா, சரசா என்ற இரு பெண்கள். சமுதாய அந்தஸ்திலேயே இரு துருவங்கள். ஆனால் அன்பினால் இணைந்த உள்ளங்கள். இவர்களைச் சுற்றிச் சுழலும் சாதி சமயங்களும், சமுதாய மார்க்கங்களும் அவைகளின் மூர்க்கமான தாக்குதல்களாலும் இச்சிறுமிகளின் அன்புப்பாலம் எப்படி அலைபாய்கிறது என்பதை விவரிப்பதே கதை.

படத்தில் சரோஜாவாக பேபி சரோஜாவும்சரசாவாக பேபி பாலசரஸ்வதியும் நடித்தனர். (பின்னாளில் பிரசித்தி பெற்ற பாடகியாக பாலசரஸ்வதி ஒளிர்ந்தார். உதாரணத்திற்கு  ‘ராஜி என் கண்மணிஎன்ற படத்தில் வரும்மல்லிகைப் பூ ஜாதி ரோஜாபாடலாகும்)

படத்தில் தெய்வத்தன்மை பொங்கும் பேபி சரசாவை ஒருபாலயோகினிஎன்று படம் சுட்டிக்காட்டுகிறது.

படத்தில் கே.பி.வச்சல், செல்லம் போன்றோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இயக்குனர் கே.சுப்பிரமணியன். இப்படத்தில் இவர் அறிமுகப்படுத்திய பேபி சரோஜா, குழந்தை நட்சத்திரமாகவே படங்களில் நடித்து பிரபலமானார்.

இக்கால கட்டத்தில் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பெரும்பாலும்சரோஜாஎன்றே பெயரிட்டு மகிழ்ந்தனர் என்றால் இந்த குழந்தையின் புகழை என்னவென்று சொல்வது.

விமோசனம் (1940)

ஜெயாஇந்துஸ்தான் தயாரிப்பில் வெளிவந்த படம்விமோசனம்’. தமிழ் சினிமாவின் வரலாற்றில் முற்றிலும் குழந்தைகளைக் கொண்டே தயாரிக்கப்பட்ட முதல்படம் இது. இதில் மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால், படத்தில் நடித்த அனைவரும் பெண் குழந்தைகளே!

ஹேமலதா, பேபி ஜெயா, சிந்தாமணி போன்ற குழந்தைகள் இப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்தனர். இப்படத்திற்கான கதைவசனம் எழுதியவர் சசி. இயக்கியவர் டி.மார்க்கோணி. உண்மையில் இப்படம் முதல்முயற்சி மட்டுமில்லை, ஒரு துணிகர முயற்சியும் கூட.

'களத்தூர் கண்ணம்மா'

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில்   வழக்கறிஞர் சீனிவாசன்மனைவி ராஜலட்சுமி தம்பதிக்கு  நான்காவது மகனாக 1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார் கமல்ஹாசன்.

 ஏ.வி.எம். ஸ்டுடியோ அதிபர் ஏ.வி. மெய்யப்பச்செட்டியாரின் கண்ணில்படவே, களத்தூர் கண்ணம்மா படத்தில் ஒப்பந்தமானார் கமல்.

1960ல் ஜெமினி கணேசன் - சாவித்ரி நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கமலுக்கு வழங்கப்பட்டது.


குழந்தைகள் கண்ட குடியரசு (1960)

குழந்தைகள் கடவுளுக்குச் சமம்’, ‘குழந்தைகளே நாட்டின் செல்வங்கள்’, ‘குழந்தைகளே நாட்டின் சொத்து’, ‘குழந்தைகள் எண்ணமே தாயின் எண்ணம்’, ‘இன்றைய குழந்தைகளே எதிர் காலத்தலைவர்கள்’. இவைகளேகுழந்தைகள் கண்ட குடியரசுதிரைப்படத்தின் கரு.

இப்படி ராஜா காலத்து கதைகளிலும் குழந்தைகளை முக்கிய பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியும் என்ற புதியதொரு கருத்தை இப்படம் புரிய வைத்தது. இளவரசன் வில்லேந்தி, கொடியவன் சொல்லேந்திரனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடுகிறான். இதனால் வெகுண்ட சொல்லேந்திரன் தன் பிடியிலிருக்கும் வில்லேந்தியின் தாயின் கண்களை குருடாக்குகிறான். அனல் பிழம்பான இளவரசன் வில்லேந்தி, ஆயிரமாயிரம் குழந்தைகளை படை திரட்டி போராடி கொடுங்கோல் சொல்லேந்திரனைக் கொன்று முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

பின் குழந்தைகள் திரண்டு புரட்சிகரமானகுடியாட்சியைநாட்டில் நிறுவுகின்றனர். இதுவேகுழந்தைகள் கண்ட குடியரசுபடத்தின் கதைச் சுருக்கம்.

வில்லன்  சொல்லேந்திரனாக ஜாவர் சீதாரமன் கர்ஜிக்கிறார். சிறையில் அடைக் கப்பட்டு கண்ணிழந்த வில்லேந்தியின் தாயாராக எம்.வி.ராஜம்மா நடித்து கண்ணீர் வடிக்கிறார். முடிவில் குழந்தைகளே வெற்றியை நிலை நாட்டுகின்றனர்.

குழந்தைகள் பாத்திரத்தில் மாஸ்டர் கோபி, வெங்கடேஷ், பேபி லட்சுமி, சித்ரா, சரளா ஆகியோர் தோன்றினர்.

இந்தப்படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டுமக்கள ராஜ்யம்என்ற பெயரில் வெளிவந்தது. இவ்விரு மொழிப்படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விஞ்ஞானியாக ஒரு சிறிய பாத்திரத்தில் விநோத மேக்கப்புடன் தோன்றியுள்ளார். இத்தகையதொரு படத்தை தயாரித்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர்.

குழந்தைக்காக (1968)

பேபி ராணி
விஜயாசுரேஷ் கம்பைன்ஸ் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் உருவான படம்குழந்தைக்காக’.

குழந்தை பேபி ராணியை முன்னிலைப்படுத்தி, மேஜர் சுந்தரராஜன், ஆர்.எஸ்.மனோகர் மற்றும் எஸ்.வி.ராம்தாஸ் ஆகிய மூன்றுகொடிய திருடர்களைஇணைத்து எடுத்த படம். இம்மூன்று கொடியவர்களில் ஒருவர் இந்து, இன்னொருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறிஸ்தவர்.

போலீசுக்கு பயந்து மலைக்குகையில் இம்மூவரும் பதுங்க, உடனிருப்பதோ சுமார் 5 வயதாகும் ஒரு பெண் குழந்தை, அத்துடன் ஒரு தாதி. குழந்தை தன் அன்பினால் இக்கொடியவர்களை கட்டிப் போட்டு திருத்தும் திரைப்படம் இது. திருடர்கள் திருந்துவதுடன் போலீசிலும் சரணடைகின்றனர்.

குழந்தை ராணி, சீதாவாகவும், தாதியாக பத்மினியும் நடித் திருந்தார்கள்.

மத ஒற்றுமையைதேவன் வந்தான், தேவன் வந்தான் குழந்தை வடிவிலேஎன்ற படப்பாட்டு பறைசாற்றுகிறது. அன்பு மனிதர்களை நல்வழிப்படுத்துகின்றது. மதநல்லிணக்கத்தை உருவாக்குகிறது என்பதை திரைப்படம் அழகாகச் சொல்கிறது.

ஸ்கூல் மாஸ்டர் (1964)

1954–ம் ஆண்டில் வெளிவந்தஊன் பவூஸ்என்ற மராத்திய மொழிப் படத்தை தழுவியதுஸ்கூல் மாஸ்டர்’.

கடமை தவறாது கல்விக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை பற்றிய படம் இது. பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பங்கென்ன என்பதை பாங்குடன் சொல்வதே படம்.

கடமையே உருவான பள்ளித்தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தம் (ஜெமினி கணேசன்); ஊரையே கொள்ளை அடிக்கும் பள்ளி நிர்வாகி நாகப்பன். தனது ஊழல்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஞானசம்பந்தத்தின் வீட்டை தீக்கிரையாக்குகின்றான் நாகப்பன். ஆசிரியர் குடும்பம் நடுத்தெருவில் தத்தளிக்கிறது.

ஆசிரியர் மீது மட்டற்ற பாசமும் நேசமும் கொண்ட அவரது பள்ளி மாணவர்கள் தங்களது பிஞ்சுக்கைகளால் கம்புகளையும், செங்கற்களையும் சேகரித்து புது வீடு கட்டி ஆசிரியரை குடிபுகச் செய்கின்றனர்.

ஓடி வாங்கடா, ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடாஎன்ற அவர்களது பாட்டு மாணவர்களின் தாரக மந்திரமாகக் கொள்ளத்தக்கது. இதுதவிர பின்னாளில் முதுமையைச் சுமந்து தள்ளாடிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டபோது, அப்போது இன்ஸ்பெக்டராயிருந்த அவரது முன்னாள் மாணவன் கண்ணன்(சிவாஜிகணேசன்), ஆசிரியரை வீண்பழியிலிருந்து காப்பாற்றி தெய்வமாக வாழவைக்கிறான்.

இப்படம் கன்னடத்திலும், மலையாளத்திலும் வெளிவந்து வெற்றி பெற்றது. முதன்முதலாக சிவாஜி கணேசனும், சவுகார் ஜானகியும் மலையாளத்தில் நடித்த படம்ஸ்கூல் மாஸ்டர்என்பது குறிப்பிடத்தக்கது.

துணைவன்’-(1967)

ஸ்ரீதேவி (Sridevi, 13 ஆகத்து 1963 - 24 பெப்ரவரி 2018) தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டியில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 

1969ல்  ‘துணைவன்  திரைப்படத்தில், 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.


வா ராஜா வா (1969)

மாஸ்டர் பிரபாகரன்
சி.என்.வி. தயாரிப்பில் .பி.நாகராஜன் இயக்கத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் தான்வா ராஜா வா’.

படத்தில் மாஸ்டர் பிரபாகரன்ராஜாவாக நடித்திருந்தான்.

தவிர மாஸ்டர் சேகர், பேபி சுமதி, உமா, மைதிலி, மீனாகுமாரி, செல்வி, பிரபா மற்றும் ரோஜாரமணி. இப்படத்தில் இடம்பிடித்த குழந்தைகள் தவிர சீர்காழி கோவிந்தராஜன், சுருளிராஜன் போன்றோரும் படத்தில் இடம்பெற்றனர்.

மாமல்லபுரத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகளுக்கு கைடாக இருக்கிறான் மாஸ்டர் ராஜா. மன்னர்கள் வரலாறு, சித்த மருத்துவம், முன்னோர்கள் பழமொழி என்று பலவற்றின் காலச்சுவடுகளாக இருக்கும் கல்வெட்டு ஒன்றில் கீழ்கண்ட பழமொழி செதுக்கப்பட்டிருந்தது:

1. விரும்பிப் போனால் விலகிப்போகும்.

2. விலகிப்போனால் விரும்பிவரும்.

3. காண்பதெல்லாம் உண்மையில்லை.

4. உண்மைக்கு என்றும் அழிவில்லை.

5. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.

6. நினைப்பதைப் போல நடப்பதில்லை.

7. நேரம் வந்தால் கூடிவரும்.

இந்தப் பழமொழிகளை பரீட்சார்த்தமாக ராஜா ஆய்ந்து தனது அனுபவங்களினால் அவை முற்றிலும் உண்மை என்பதை அறி கிறான்; ரசிகர்களும் உணர்கிறார்கள்.

படத்தின் பெரும்பகுதியை மாஸ்டர் ராஜா தான் ஆக்கிரமித்துக் கொள்கிறான். படத்தைப் பார்க்க ரசிகர்களை ராஜா இப்படித்தான் அழைக்கிறான்: ‘பெரியவங்க வாங்க. தாய்மாருங்கெல்லாம் வந்து பாருங்க. வரும்போது தவறாம உங்க குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு வாங்க. ஏன்னா... எங்க கதையிலே ஏதாவது நல்லது இருந்தா அது உங்க குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்கும்’ – ராஜா,

இப்படம், மாஸ்டர் பிரபாகர், பேபி சுமதி ஆகிய இருவருமே நடிக்கபாலராஜூ கதாஎன்ற பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது.

 நம்ம குழந்தைகள் (1970)

மேஜர் சுந்தரராஜன் மற்றும் பண்டரிபாயுடன் மாஸ்டர் ஸ்ரீதர், சுரேந்தர், பிரபாகர், சேகர், பேபி ரோஜா ரமணி, ஷீலா ஜெயலட்சுமி என்று குழந்தைகளின் பட்டாளமே நடித்தபடம்நம்ம குழந்தைகள்’.

இவர்களில் சிலர் வளர்ந்து பின்னாளில் திரையில் கதாநாயகன், கதாநாயகி தரத்துக்கு உயர்ந்திருக்கிறார்கள். தாய் தந்தையர்கள் எவ்வாறு குழந்தைகளை பராமரிக்கவேண்டும், என்னென்ன போதிக்க வேண்டும், எந்த வகையில் கண்டிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் உயிரோட்டமுள்ள கதையைக் கொண்டது இப்படம். பெரியவர்கள் அணுகு முறையை சுட்டிக்காட்டும் இப்படத்தில் குழந்தைகளின் சிற்றறிவுக்கு எட்டிய பேரறிவின் வெளிப்பாடுகளையும் படம் சுவையாக சித்தரித்தது.

நடுத்தரக்குடும்பம், ‘காலை மூடினால் தலை தெரியும், தலையை மூடினால் கால் தெரியும்என்ற ரீதியிலேயே குடும்ப வரவுசெலவுப் பட்டியல். நிதிப்பற்றாக்குறையால் தடுமாறும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். குடும்பப் பொறுப்பை குழந்தைகள் சுமக்கின்றார்கள். வரவுசெலவு கணக்கை சமன் செய்ய குழந்தைகள் மேற்கொள்ளும் முயற்சியை படம் புதுமையாகச் சொல்கிறது.

விஜயாசுரேஷ் தயாரிப்பானநம்ம குழந்தைகள்கதையை பூவண்ணன் எழுதியிருந்தார். இயக்கம்
ஸ்ரீகாந்த்.

 மழலைப் பட்டாளம் (1980)

இந்தியில் நடிகர் அசோக்குமார் நடித்து 1977–ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘காட்டா மீட்டா என்ற திரைப்படக் கதையின் தழுவலே ‘மழலைப் பட்டாளம். இரு அணிகளாகப் பிரிந்து சிண்டு முடித்துக் கொள்ளும் கள்ளம் கபடமற்ற மழலைப்பட்டாளம் எப்படி ஒன்று சேருகிறது என்பதை நகைச்சுவையுடன் படம் சொல்கிறது. நடுத்தர வயதாகிய மனைவியை இழந்தவர் விஷ்ணுவர்தன். கவுரி மனோகரி என்பது படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர். ஆறு குழந்தைகள். அத்தனையும் ரெட்டை வால்கள்.

தன் சகோதரியின் ஐந்து குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டு நடுத்தர வயது அடைந்தவர், சுமித்திரா

இருவருக்கும் இடையே காதல் மலர, குழந்தைகளுக்கு பயந்து அவர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவீட்டில் தனித்தனியாக வாழ்ந்த காதலர்கள் இப்போது ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கவுரி மனோகரி தன் பிள்ளைக் கூட்டத்தை சுமித்திரா வீட்டிற்கு அழைத்து வர, மழலைகள் எலியும் பூனையுமாக இரு அணிகளாக மோதி நிற்கின்றனர். அவர்கள் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூறுகிறது படம்.

படத்தின் மையக்கருத்தான ‘குழந்தைகள் ஒற்றுமையை படம் நெஞ்சில் பதிய வைக்கிறது. போராட்டக் குழந்தைகளாக பேபி இந்திரா, சாந்தி, லட்சுமி, மாஸ்டர் லட்சுமி நாராயணன், ராமு, சந்திரசேகர், குமுதன், சுனில், ஹரி, குமார் முதலியோர் நடித்திருக்கின்றனர்.

ஸ்டார்ட் ஆகாத பழைய மோட்டார் வண்டியை ‘தள்ளுமாடல் வண்டி இது, தள்ளி விடுங்க என்று கவுரி மனோகரி தன் ‘வானரப் படைகளுடன் பாடிக்கொண்டே தள்ளி வரும் காட்சி ரசிக்க வைக்கிறது. படம் நகைச்சுவையை மையமாகக் கொண்டதால் டி.பி.கஜேந்தரின் மேற்பார்வை படத்தில் தெரிகிறது. படத்தை இயக்கியவர் பிரபல நடிகை லட்சுமி என்பது முக்கியச் செய்தி.

 புரந்தரதாசர் (1981)

ஸ்ரீ கணேச எண்டர்பிரைசஸ் தயாரிப்புதான் ‘புரந்தரதாசர். தமிழ்நாட்டில் தயாராகி தமிழக அரசினால் 1979–80–ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சிறந்த குழந்தைகள் படமென பரிசு பெற்று கேளிக்கை வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட படம். அத்துடன் மத்திய அரசினால் சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட படம்.

எல்லா கதாபாத்திரங்களையும் முற்றிலும் குழந்தைகளே ஏற்று நடித்த மற்றொரு படம் இது. இதில் நடித்துள்ள எல்லாக் குழந்தைகளுமே பதினான்கு வயதைத் தாண்டாதவர்கள். தபோவனத்தைச் சார்ந்த ஒரு நாட்டிய பள்ளியில் பயிற்சி பெறும் குழந்தைகள் இப்படத்தில் நடித்தனர். இப்படம் உருவாகக் காரணமானவர் தபோவனத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்கிரி சுவாமிகள்.

'நெஞ்சங்கள்'(1982)

மீனா (பிறப்பு: 16 செப்டம்பர், 1976) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக   சிவாஜி கணேசனின் 'நெஞ்சங்கள்' படத்தில் 6வயதில் அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார்.  90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.


 பக்த துருவ மார்கண்டேயா (1983)

பரணி பிக்சர்ஸ் 1983–ம் ஆண்டில் தயாரித்து வெளியிட்ட பக்தி நெறியைப் பரப்பும் குழந்தைகள் படம் தான் ‘பக்த துருவ மார்கண்டேயா. இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழி களிலும் பரணி பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர். இப்படத்தில் மாஸ்டர் சுரேஷ் மற்றும் ஷோபனா முக்கிய பாத்திரமேற்றிருந்தனர். படத்தை பானுமதியே இயக்கியதுடன், இசை அமைப்பையும் கவனித்தார். இசைக்கு அவருடன் இணைந்தவர் எஸ்.ராஜேஸ்வரராவ்.

இப்படம் குழந்தைகளுக்கான சிறந்த மூன்றாவது படமாக 1982–83–ம் ஆண்டிற்கான தேர்வில் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.

ஓசை (1984)

ஷாலினி (பிறப்பு: நவம்பர் 20, 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் 'ஓசை' எனும்  தமிழ்த் திரையில் மோகன்-நளினி யின் குழந்தையாக 1984 இல்  அறிமுகமானார். இவர் தமிழில் 5 படங்களும் , மலையாளத்தில் 25-க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழத் தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.

"ரிக்சா மாமா"(1992)

ஸ்ரீதேவி விஜயகுமார் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் "ரிக்சா மாமா" திரைப்படத்தில் அறிமுகமானவர். ... விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக பின்னர் நடித்துள்ளார்.


 சுட்டிக்குழந்தை (1996)

ஆங்கிலத்தில் வெளிவந்து உலகமெங்கும் சக்கை போடுபோட்ட ‘பேபீஸ் டே அவுட் என்ற திரைப்படம் தான் தமிழில் ‘சுட்டிக்குழந்தை என்று மறு அவதாரம் எடுத்தது.

மூன்று அசட்டுத் திருடர்கள் பணம் பறிக்க திட்டம் தீட்டு கிறார்கள். பெரிய பணக்காரத் தம்பதிகளின் 3 வயது குழந்தையைக் கடத்தி மறைத்து, பிணையத் தொகையாக பெருந்தொகைக் கேட்டு மிரட்டி பெறுவதே அவர்கள் திட்டம்.

குழந்தையை படமெடுப்பதாக வீட்டினுள் நுழைந்து குழந்தையை எடுத்துச் செல்கின்றனர். மிரட்டவும் செய்கின்றனர். போலீஸ் இக்கடத்தல்காரர்களை தீவிரமாகத் தேடுகிறது. இப்போது கடத்தல்காரர்களுக்கு போலீஸ் தேடுதலால் ஏற்படும் சிரமங்களை விட கடத்தப்பட்ட குழந்தை தரும் தொல்லைகள் அதிகமாயிருக்கிறது. குழந்தையோ படுசுட்டி.

திருடர்களை விட்டு தன்னிச்சையாக குழந்தை நடுரோட்டில் தப்பிச் செல்வதும், போலீசாரிடமும் கொரில்லாவிடமும் திருடர்களை மாட்டி விடுவதுமென்று பல இம்சைகளை சுட்டிக்குழந்தை திருடர்களுக்கு கொடுப்பதுடன் பணம் பறிக்கும் அவர்களது ஆசையை நிராசையாக ஆக்குகிறது.


குழந்தையின் சுட்டித்தன செயல்களை படம் இயற்கையாகவே காட்டுகிறது. ஒரு குழந்தையால் இது சாத்தியமா? என்று நம் மனதில் எழும் வினாவுக்கு முற்றிலும் சாத்தியமே என்று நம்பகமான முறையில் சொல்கிறது ‘சுட்டிக்குழந்தை.
           தொகுப்பு:செமனுவேந்தன்                                                                  

0 comments:

Post a Comment