திரைப்படமாகும் நடிகை சாவித்திரி.

பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்குவது என்பது அண்மைக்காலமாக சினிமாவில் ஒரு ட்ரெண்டாக காணப்படுகின்றது. கிரிக்கெட் வீரர்களான அசாரூதீன், மகேந்திர சிங் தோனி மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் என பலரின் வாழ்க்கை சினிமாவாகியுள்ளது.
இந்நிலையில் 1950 – 70 வரை இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக விளங்கியவர் சாவித்திரி. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் 318 படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சாவித்திரி.
நடிகையர் திலகம்எனப் போற்றப்படும் சாவித்திரி பாசமலர், திருவிளையாடல், படித்தால் மட்டும் போதுமா, களத்தூர் கண்ணம்மா, கந்தன் கருணை என பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.
நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்ட சாவித்திரி திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பணம், புகழ் என உச்சியில் இருந்தவர் தனது இறுதிக்காலங்களில் சினிமா தயாரிப்பில் நட்டமடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

தற்போது சாவித்திரியின் வாழ்க்கை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகவுள்ளது. தெலுங்கு இயக்குனரான நாக் அஸ்வின்மகாநதிஎன்ற பெயரில் இந்த திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment