தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வைகாசி மாத வணக்கம்,
தீபத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கினை ஆற்றிவரும் எழுத்தாளர்களுக்கும் ,அவற்றினை படித்து அவர்களை ஊக்குவித்துவரும் வாசக உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறோம்.
தான் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்று முற்றும் அறிந்த அவ்வையே கூறும் போது நாம் கற்றது கை நகம் அளவு கூட இருக்காதோ என எண்ணத் தோன்றுகிறது. இப்படி இருக்கையில் எம்மத்தியில் ஒரு சிலவற்றை மட்டும் அறிந்த சில மனிதர்களோ தம்மைவிட மற்றையோர் ஒன்றும் தெரியாதவர்களாக கருதி நடந்து கொள்வது ஆச்சரியத்தினையே கொடுக்கிறது. இதனைத் தானோ கிணற்றுத் தவளையின் கதையாக நம் முன்னோர்கள் கொடுத்து சென்றார்கள்.
எப்படியோ, வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்பது அனுபவ சாலிகள் கருத்து. அதற்கு ஊடகங்கள் ஆரோக்கியமான தகவல்களுடன் வெளிவர வேண்டும். அப்பணியின் சிறு பகுதியினை யாவது நாம் செய்ய கிடைத்ததையிட்டு நன்றியுடன் நோக்குகிறோம்.

0 comments:
Post a Comment