என் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில்     தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த கால பகுதி என்பதால் , ஒவ்வொரு கணமும் பயத்துடன் கழிந்த நாட்கள் தான் அதிகமாக இருந்தது . எந்த நிமிடமும் கண் மூடித்தனமான ஷெல் ,விமானத்தாக்குதல்கள் தமிழர் வாழும் இடங்களெல்லாம்  உயிர்கள் பறிக்க பட்டு     கொண்டேயிருந்தன..
. வெண்ணிலாவும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் . அவள் குடும்பத்தில் முதல் பிள்ளையாக பிறந்தபடியால் மிகவும் பொறுப்பு மிகுந்த பிள்ளையாக இருந்தாள் ,அத்தோடு படிப்பிலும் மிகவும் முதன்மை மாணவியாக இருந்தபடியாலும் இயல்பாகவே சிரித்த முகத்துடன் நகைசுவையாக பேசி எல்லோரையும் கவரும் குணம் இருந்ததால்    எப்போதும் நண்பர்கள் கூட்டமும் அவளைச் சுற்றிக்கொண்டே இருந்தது
.
அவளுக்கு பாசமான அப்பா,அம்மா , தம்பி ,
தங்கை என்று மகிழ்ச்சிகரமாக இருந்த நாட்கள் அவை. அன்றும் வழமை போல பாடசாலைக்கு சென்று இருந்த வெண்ணிலா, அந்த நாள் தான் அவளது வாழ்க்கையையே மாற்றப்போகும் நாள் என்பது தெரியாமல், பாடசாலையில் ஆசிரியர் கற்றுக்கொடுத்த பாடத்தை செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள்.அப்போது பக்கத்து வகுப்பு ஆசிரியர் வெண்ணிலாவின் வகுப்பறையில் நுழைந்து ,ஆசிரியர் குமாரசாமியின் காதில் ஏதோ ஒரு விடயத்தை முணுமுணுத்து விட்டுச் சென்றார் .குமாரசாமி ஆசிரியரின் முகம் சடாரென இறுகிப் போனது ,
வெண்ணிலாவைக் கூப்பிட்டார் , “வெண்ணிலா இஞ்சை ஒருக்கா வாரும் பிள்ளை ,உம்மடை தம்பியாருக்கு ஏதோ சின்ன வருத்தமாம் ,உமது அப்பா,அம்மா உம்மை வரச் சொல்லியிருக்கினம்” என்றார் .வெண்ணிலா உடம்பெல்லாம் ஒருவித பதட்டம் தொற்றிக்கொள்ள வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள். விட்டுக்கு செல்லும் வழியில் அவளைக் கண்ட உறவினர் ஒருவர் “பிள்ளை வெண்ணிலா சந்தைக்கு போன இடத்தில் நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலில் 20 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர் ,அதில சந்தைக்கு சாமான்கள் வாங்கப் போன உன்னுடைய அப்பாவும் கொல்லப்பட்டிருக்கிறார்
எனக் சொல்ல , அதனைக் கேட்ட வெண்ணிலா “ஐயோ என்ர அப்பா” எனக் கத்தினாள். தொடர்ந்தும் அவர் “உங்கட அப்பாவும் படுகாயம் அடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு போய் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் தான் இறந்து போனார் ,என்ன செய்யிறது பிள்ளை ,தமிழனாய் பிறந்தால் இது தான் விதி போலும் ,சரி பிள்ளை வா வீட்டை போவோம் ” என்று கூறி வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு சென்றார். ஐயோ அப்பா அப்பா என்று அழுத வண்ணம் வீட்டை நோக்கி சென்றாள். வீட்டுக்கு வெளியே நிறைந்த மக்கள் கூட்டம் நின்றது ,அவர்களின் ஆரவாரத்தையும் மீறி அவளின் தாய்,சகோதர்களின் அழுகுரல் வானைப் பிளந்தது.

வெண்ணிலாவைக் கண்ட அவளின் தாயும் சகோதரர்களும் பெரிய சத்தத்துடன் கதறி அழுதார்கள்.அவர்களின் அழுகை அங்கேயிருந்த எல்லோரது உள்ளத்திலும் வேதனையை ஏற்படுத்தியது. அதன் பின் எல்லோரும் மனதை திடற்படுத்திக் கொண்டு இறுதி கிரியைகளை செய்ய ஆரம்பித்தார்கள் .வெண்ணிலாவுக்கோ புலிகள் இயக்கத்தில் சேர்ந்து அப்பாவை கொன்றவனை பழி வாங்கணும் என்ற ஆதங்கம் மனம் முழுவதும் வியாபித்திருந்தது
எனினும் வீட்டில் முதல் பிள்ளை என்பதால் வீட்டின் பொறுப்புக்களை சுமையாய் தாங்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டதால், பழி வாங்கும் மனோ நிலையில் இருந்து சிறிது விடுபட்டாள். அதன் பின் பாடசாலையும் இடை நிறுத்திவிட்டு இளம் வயதிலேயே பொறுப்புடன் குடும்பத்தை கட்டிக் காப்பாற்ற முற்பட்டாள். இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் போய் கொண்டு இருந்த வாழ்வில் விதி செய்யும் சதியோ என்னவோ ,இராணுவம் புலிகளிடமிருந்து இடங்களைக் கைப்பற்றும் நடவடிக்கை என்ற பெயரில் மீண்டும் கொடிய யுத்தம் ஒன்றை கிளிநொச்சியை நோக்கி தொடங்கியது.

இதனால் இடம் பெயர்ந்து வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளபட்ட வெண்ணிலாவும், குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அக்கராயனை நோக்கி இடம் பெயர்ந்து சென்றாள் . அங்கே சிறு கூடாரம் அமைத்து வசித்தனர்.5 ஆண்டுகள் அப்படி இப்படி என்று ஓடி விட்டது .வெண்ணிலாவின் சகோதரனும் வளர்ந்து பெரியவனாகி இருந்தான் .அவனும் தனக்கேற்றபடி வேலைக்குச் சென்று அக்காவிடம் வருமானத்தை கொடுத்து வந்தான்.குடும்பத்தை தன் தம்பி கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வெண்ணிலாவுக்கு ஏற்பட.
பயந்த அடிமை வாழ்வும்   நீங்கி தமிழர் நிம்மதியான சுவாசத்தை நுகர வேணும்  தன் தந்தையின் உயிரை பலி வாங்கிய  போல தினமும் பலரது உயிர்களை கொல்லும்  சிங்களத்தின் அரக்கத்தனத்துக்குமாக போராட
வேணும் என்ற எண்ணமும் வர  .
அந்த நேரம் புலிகளின் அரசியல் பிரசாரத்தினால் கவரப்பட்ட வெண்ணிலா ஒரு இரவு கடிதம் எழுதி வைத்து விட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை புதிய போராளியாக இணைந்து கொண்டாள். 

தொடர் கதை 4.... தொடரும் ...[கவி நிலவன்]
  

No comments:

Post a Comment