உங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10

மைக்ரோசாப்ட் நிறுவனம், உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும் என விரும்பி, அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நீங்களாக அப்டேட் செய்திட காலக்கெடு குறிக்கவில்லை என்றால், அதுவாகவே, குறிப்பிட்ட நாளைக் குறித்து, கம்ப்யூட்டரை அப்டேட் செய்திடும். உங்களுக்காக இந்த செயல்பாட்டினை மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
மைக்ரோசாப்ட் சென்ற 2015 ஆம் ஆண்டில் மத்தியில், Get Windows 10 என்னும் அப்ளிகேஷனை வெளியிட்டது. இந்த அப்ளிகேஷன், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாற எண்ணம் கொண்டவர்களுக்கு உதவிட வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள தகுதியான ஹார்ட்வேர் கொண்டுள்ளதா என்று சோதனை செய்து, அவ்வாறு இருந்தால், மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகளை, எளிமையாகத் தர இந்த அப்ளிகேஷன் பயன்பட்டது.
அதே அப்ளிகேஷன் இப்போது வேறு வகையில் பயனாளர்களைச் சந்திக்கிறது. நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 பயன்படுத்திக் கொண்டிருப்பவராக இருந்தால், தானாக அப்கிரேட் செய்வதற்கான நாளை, மைக்ரோசாப்ட், இந்த அப்ளிகேஷன் மூலம் குறித்துக் கொள்ளும். விண்டோஸ் 10 சிஸ்டத்தில், தற்போது அப்கிரேட் செயல்பாடு, அதுவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கட்டாயம் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இதே போல, விண்டோஸ் 7/8 ஆகியவற்றிலிருந்து, விண்டோஸ் 10 மேம்படுத்துவதனையும் மைக்ரோசாப்ட் கட்டாயப்படுத்தும். நீங்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாது. அவ்வாறு, விண்டோஸ் 10 தேவை இல்லை என நீங்கள் திட்டமிட்டால், இது போல வரும் பாப் அப் விண்டோ சென்று, options தேர்ந்தெடுத்து, அப்டேட் நாளை, வேறு ஒரு நாளுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது அப்கிரேட் முயற்சியை ரத்து செய்திடுங்கள். அப்கிரேட் குறித்த அறிவிப்பினைப் பார்க்காமல், அல்லது பார்த்து அலட்சியப்படுத்தி விட்டால், நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10க்கு தானாக மாறிக் கொள்ளும்.
இதே போல, முன்பு வேர்ட் புரோகிராம், வேர்ட் 2007க்கு அப்கிரேட் செய்யப்பட்டது. புதிய செயலியில் பயனாளர்கள் பல எதிர்பாராத மாற்றங்களினால் திகைப்படைந்தனர். அதே போல இப்போதும் ஏற்படலாம்.
இலவசமாக விண்டோஸ் 10 பெறும் இறுதி நாள் வரும் ஜூலை 27 உடன் முடிவடைவதால், நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடிவெடுத்திருந்தால், அதனை இப்போதே நிறைவேற்றிக் கொள்வதே நல்லது.
விண்டோஸ் 10 இலவச சிஸ்டத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அப்கிரேட் செய்தவுடன் உங்கள் உரிமம் அதற்கானதாக மாறிவிடும். உங்களுக்கு விண் 10 பிடிக்கவில்லை எனில், உங்களுடைய பழைய சிஸ்டத்திற்கு ஒரு மாதத்திற்குள் மாறிக் கொள்ளலாம். அந்த உரிமத்தினைத் தக்க வைத்துக் கொண்டு, பின்னர், விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்ளலாம்.



No comments:

Post a Comment