தமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி

 தமிழன்:
தெரியாத வெள்ளைகளே நேரில் காணும்போது வாழ்த்தி, வணக்கம் சொல்லி, எங்கள். மற்றும் குழந்தைகள், நாய்கள் சுகம், நலம் விசாரிக்கின்றார்களே, ஆனால் எங்கடை ஆட்கள் முகத்தையே திருப்பாமல் வெறுப்போடு காணதவர்கள்போலப் போகிறார்கள்! 

சண்டியன் சரவணை:
அது பாருங்கோ, அவை திரும்பினால் அவர்களின் மூஞ்சை வெடித்து முத்துகள் சிதறிப்போகுமாம்!

தமி:
எங்கடை ஆட்கள், அங்கை இருந்து வந்தவைகூட, இப்ப பிறந்த குழந்தைகளோடை (நாய்களுடனும்தான்) ஆங்கிலம் கதைக்கினமே!

சச:
இப்பதான் அவைகள் தமிங்கிலீசு கதைச்சு பழகலாம்- கெட்டித்தனம் காட்டலாம். பிறகு பிள்ளை வளர்ந்து சரியான ஆங்கிலம் கதைக்கேக்கை இவர்க ளுக்கு அவை கதைக்கிறது விளங்காது,வாயைத் திறக்கேலாது பாருங்கோ!

தமி:
புலம் பெயர்ந்த நம் வாழ்க்கை ஒரு நாயலைச்சல் வாழ்க்கை. ஏன்தான் வந்தோம் எண்டு இருக்குது!

சச:
புலம்பாமல் திரும்பிப் போகவேண்டியதுதானே! ஏன் இங்கை சங்கிலி போட்டுக் கட்டியே பிடித்து வைத்திருக்கினம்!

தமி:
எனக்கும், என் மனைவிக்கும் நடந்த வாக்குவாதத்தில் மனைவி தான்தான் முட்டாள் என்று ஒத்துக்கொண்டுவிட்டாள்!

சச:
சரிதானே, இல்லாட்டில் அவள் உன்னைத் திருமணம் செய்திருப்பாளா?

தமி:
முதலில் கோழி வந்ததா? முட்டை வந்ததா? ஒரே குழப்பமாய் இருக்கு!

சச:
நிச்சயமாய் முட்டைதான், யாராவது ஸ்கூல் ரிபோர்ட் மார்க்ஸில் இருந்து முதல் முட்டை வந்திருக்கும்!

தமி:
ஆணோ, பெண்ணோ என்று அறிய கேட்ட கேள்விக்கு (ஆண்) Mr அல்லது அவரின் மனைவி (பெண்) Mrs என்று பதில் அளிக்காமல் ஏன்தான் 'மாத்தி யோசித்து' படிச்ச படிப்பை Dr என்று எழுதுவது என்று புரியவே இல்லை!

சச:
ஆண் இனம் (Masculine Race ) MR , 'அவனுடைய' மனைவி MR'S . DR என்றால் Dual Race . ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல; இரண்டும் கலந்த
ஒரு கலவையாய் இருக்கலாம்!

தமி:
அந்த அரசுக் கந்தோரில் ஒரு வேலை விடயமாய் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது! எல்லா வயதானவர்களையும் வைத்துக்கொண்டு மாரடிக்கிராங்கள்!

சச:
அது சம்பளத்தோடு கூடிய நர்சிங் ஹோம்! வெளியே வர விரும்பும்போது, பெரும்தொகையும் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்கள்!

தமி:
பெண்ணுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் வேண்டும்!

சச:
இல்லாத மற்றயவை எல்லாம் திருநங்கைகளோ?

தமி:
மாமிக்கும், (மனித) சாமிக்கும் ஒரு வித்தியாசம். மாமியால் ஒரு பெண்ணுக்குத்தான் தொல்லை; சாமியால் பல பெண்களுக்குத் தொல்லை!

சச:
பல பெண்களுக்கும், பல ஆண்களுக்கும் எண்டு சரியாய்ச் சொல்லுங்கோ!

தமி:
சாமியார் ஏன்தான் தங்கத்தால் ஜொலிக்கும் பென்னாம் பெரிய ஆடம்பர சிம்மாசனத்தில் எப்பவும் இருக்கின்றார்?

சச:
பக்தர்கள் வாரி வழங்கும் காணிக்கைகளை கணக்குக் காட்டத்தான்!

தமி:
பூசையின்போது தெரியா மொழியில் அர்ச்சனை, பஜனை எல்லாம் செய்கிறார்களே!

சச:
தெரிந்த மொழியில் செய்து கருத்து விளங்கினால், 'பூ, இவ்வளவுதானா?' என்று கேட்டு விடுவீர்களே!

தமி:
இந்துக்கள் பிற சமயத்துக் கடவுள்களை வணங்குவதும், மதம் மாறுவதும் எப்பவும் நடக்கின்றதே!

சச:
ஆண்டவனிடம் வேண்டி ஆண்டவரிடமும் இன்னும் வேண்டுவம் என்ற  பேராசை கொண்டு கொஞ்சம் extra கேட்பதற்குத்தான்!

தமி:
ஜேசு சிலுவையில் இறந்தது எமது பாவங்களைப் போக்குவதற்காகவாமே!

சச:
2000 வருடங்களுக்கு முன்பே எங்கள் பாவத்தை போக்கியபடியால், நாம் துணிந்து இன்னும் பாவங்களைச் செய்யலாம்; மன்னிக்கப்படும்!

0 comments:

Post a Comment