புத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]



அன்று சனிக்கிழமைகாலை பாடசாலைவிடுமுறை  ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தபோது மாமாவீட்டில் வசிக்கும் அண்ணாமலைத் தாத்தாவுடன் ஸ்பீக்கர் ரெலிபோனில் பாட்டி அறுத்துக்கொண்டிருப்பதனை உணரமுடிந்தது.
''அப்ப புதுவருசம் எப்பிடிப் போச்சுது பறுவதம்'' 
''அத  ஏன் கேட்கிறியள்''
''என்ன பறுவதம், என்ன புதினம்?'' புதினம் ஒன்றும் இல்லாம இருந்த அண்ணாமலைத் தாத்தாவும் அதை அறிய அவசரப்பட்டுக்கொண்டார்.
''ரண்டு பேர் வந்து கதவை தட்டிச்சினம்,நானும் கதவை திறந்திட்டன்.''
''அது ஆர் ஆக்கள்''
''வேறென்ன உந்த சமயம் பரப்பிற ஆக்கள் தான்''
''அடக் கருமமே!''
''அப்ப நான் கறுமம் தான்.வரியம் பிறந்து இந்த தொல்லை வேற!''
''அப்பஎப்பிடி ஆட்களை சமாளிச்சு அனுப்பினனீ?''
''வரியம் பிறந்து வந்தவையை உடன கலைக்கிறதோ எண்டு நான் நினைக்க அவையளும் நீங்க  இந்து வோ எண்டு கேட்டுக்கொண்டு சோபாவிலை இருந்துவிட்டினம்.''
''ஓமோம் இந்துக்களைத்தானே சுகமாய் ஏமாற்றி மதம் மாற்றலாம். அண்டைக்கு ஒருநாள் என்னட்டை வரேக்கை நான் முஸ்லிம் எண்டு சொல்ல ஒரு கதையும் இல்லை போய்விட்டினம் பார்.''
''ஆனா இங்க பிள்ளையார் படமெல்லெ முன்னு கிடக்கிது.இனி ஏன் பொய் சொல்ல வேணும். நாங்கள் என்ன குறைச்சலே! அவையும் தங்கட வழமையான வசனங்களை வாசிச்சினம்.அத்தோட கடவுளை காண இயேசு உங்களை அழைக்கிறார் என்றார்கள்''
''அப்ப கடவுளை பாக்க நீ போகேல்லையே பறுவதம்'' தாத்தாவும்  கேலியாகக் 
கேட்டுக்கொண்டார்.
''அடக்  கேளுங்கோவன்.நானும் வியப்போட என்ன சொல்லுறியள் நான் கடவுளை எப்போ கண்டுவிட்டன். இதுக்கு மேல என்ன நீங்க காட்டப்போறியள் எண்டு கேட்டன்''
மறுமுனையில் தாத்தாவின் சிரிப்பொலி தாரளமாக இருந்தது.
''இந்த கட்டையோட இது சரிவராது எண்டு வேற வழிக்கெல்லெ வந்தவை.''
''அதென்ன பறுவதம்''
''நானும் நீங்களும் பிரிஞ்சு இருக்கிறது நாங்க  கவலையாய் இருப்பமாம்''
''ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுத கதை தான்'' தாத்தா குறுக்கிட்டுக் கொண்டார்.
''கேளுங்கோவன்.அதுக்காய் எங்களுக்காய் 'பிறே' பண்ணப்போகினமாம்.
ஆரம்பிக்க முன்  நானும் கேட்டன்''
''என்ன பறுவதம் கேட்டனி''
''பரம்பரை பரம்பரையாய் உங்கட சேர்ச் சுக்கு ஒழுங்காய் ஒவ்வொரு ஞாயிறும் வந்து வணங்குகிற எனது நண்பரைப் போல பலர் தீரா வியாதிகளில் கிடந்தது வருசக்கணக்காய் அவஸ்தைப் படுகிறார்கள். அவர்களைக் காப்பற்ற முடியாத நீங்கள் என்  சாதாரண கவலைகள் நீங்க நீங்கள் பிராத்தனை செய்யிற எண்டு  என்னை ஏன் ஏமாற்றுகிறீர்கள் எண்டு  கேட்டன்.அவர்களால் இன்னும் இங்க இருக்க முடியவில்லை.--உங்களுக்கு அம்மா விளங்கவில்லை இன்னொருநாளைக்கு ஆறுதலாய் வந்து விளங்கப் படுத்திறோம்.'--எண்டபடி போய் விட்டினம்.'''
''இப்ப மட்டும் என்ன அவசரமாய் வந்தவையே! நல்ல வேலை செய்தாய் பறுவதம். இனி உந்தப் பக்கம் தலை வச்சுக்கூடப்படுக்க மாட்டினம்.''
''வேறென்ன! மேள் குசினிப்பக்கம் வந்திட்டாள். ஏதன் கூட மாட ச்செய்ய வேணும் பிறகு கதைப்பம்.சரி.'' என்றவாறே தொலைபேசியினை துண்டித்துக் கொண்டார் பறுவதம் பாட்டி.

நானும் பாட்டியின் துணிச்சலை எண்ணிய வாறே மறுபக்கம் புரண்டு படுத்துக் கொண்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@







0 comments:

Post a Comment