உங்கள் ஆயுள் அதிகரிக்க . . .

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவிபார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமி டங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிட ங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, “டிவி!’
டிவிநிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள்மூலம் புரிந்து கொள் இயலும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள புக ழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல் கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 2000ம் ஆண்டு, 11 ஆயிரம் பேரிடம், “டிவிபார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவரும், 25வயதுக்கு மேற்பட்டவர்கள். ந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண் டும் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் இருந்து அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லி யன் மணி நேரம், “டிவிபார்த் துள்ளதும், அதன் மூலம், இரண் டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறை ந்து விட்டதும் தெரிந்தது. இவ் வாறு ஒரு மணி நேரம், “டிவிபார்த் ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்ட றியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெ ட்டுக்கள் புகை த்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது.
மேலும், அவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, உடல் எடை அதி ரித்தல் போன்ற பல்வேறு உட ல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய கால த்திற்கு முன்பாகவே இறப்பதற் கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரி ப்பதும் தெரிய வந்தது. ஆய்வு நட த்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவ ர்கள் எண் ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், “டிவிபார்ப்பவ ர்களின் எண் ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவில் அப்படிப்பட்ட ஆய்வு என்றால், தைவான் நாட்டின் தேசிய ஆரோக்கிய ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் சீ பாங்க் வென் கூறுகையில், “நானும், என் சக மா ணவர்களும், 13 ஆண்டுகளில் நான் கு லட்சத்து, 16 ஆயிரம் பேரை தீவி ரமாக ஆய்வு செய்தோம். ஒவ் வொரு ஆண்டும் அவர்களது உட ல் நலம் பரிசோதிக்கப்பட்டது.
இதில், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள், ஆரோக்கிய மானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலரையும் கண் காணித்தோம். அதன் அடிப்படையில் தினமும், 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடை பயணம் செய்தால், அவர்களது ஆயுள் மூன் று ஆண்டுகள் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது…’ என்றார்.
நன்றி: அ. சாத்தப்பன்

No comments:

Post a Comment